தோட்டக்குறிச்சி அருள்மிகு மலையம்மன்: பொருள் தந்த கூட்டத்தின் வரலாற்றுச்சுவடுகள்

தோட்டக்குறிச்சி அருள்மிகு மலையம்மன்: பொருள் தந்த கூட்டத்தின் வரலாற்றுச்சுவடுகள்: அர்ச்சுணணுக்கு கீதை தந்தவன் கண்ணன் என்னும் தேரோட்டி அந்தக் கண்ணனுக்கும் உணவு தந்தவன் உழவன் என்னும் ஏரோட்டி இந்த ஏரோட்டிகளிலேதான்...

யார் கொங்கு வெள்ளாளர்: யார் கொங்கு வெள்ளாளர்? – ஓர் தெளிவு

யார் கொங்கு வெள்ளாளர்: யார் கொங்கு வெள்ளாளர்? – ஓர் தெளிவு:             நமது நாட்டில் வாழும் மக்களின் கலாச்சார ஒழுக்கம் மற்றும் பண்பாடு பாரம்பரியமாக அவர்களது குலவழக்கமாக வருவது. மேலும், அதனை க...

தர்மபுத்திரன்: சாணக்கியன் சொல்

தர்மபுத்திரன்: சாணக்கியன் சொல்: யாராவது புத்திசாலித்தனமாக செயல்பட்டால் "சாணக்கியன் போல்" என்று சொல்கிறோம். தந்திரத்திலும் சிறந்ததை "சாணக்கிய தந்திரம்" ...

Friday, 26 May 2017

MUNNOR VAZHIPAADU-PITHRU POOJAI: PITHRU POOJAI IN TAMIL LANGUAGE - MUNNOR VAZHIPAAD...

MUNNOR VAZHIPAADU-PITHRU POOJAI: PITHRU POOJAI IN TAMIL LANGUAGE - MUNNOR VAZHIPAAD...: முன்னோர்களுக்கு வழிபாடு தாய்மொழியில் நடத்தவேண்டும் என்று நான் முன்னர் ஒரு கட்டுரையில் கூறியிருந்தேன்.  அதை எப்படி செய்யலாம் என கீழே விபரமாகக...

aanmigam: ஏழேழு பிறவிக்கும் தம்பதியாக சேர்ந்து வாழ செய்ய வேண...

aanmigam: ஏழேழு பிறவிக்கும் தம்பதியாக சேர்ந்து வாழ செய்ய வேண...: ஏழேழு பிறவிக்கும் தம்பதியாக சேர்ந்து வாழ செய்ய வேண்டிய வழிபாடு இருந்தால் சொல்லுங்கள்.  ""மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ண...
தனிஷ்டா பஞ்சமி தொடர்.... 2.
மௌனத்தின் அலைகள் பகுதியில் தனிஷ்டா பஞ்சமி குறித்து பதிவிட்டவுடன் நிறைய கேள்விகள் எழுந்தன. எனவே அது குறித்து இன்னும் சற்று தெளிவுபடுத்த வேண்டியது அவசியம் என்று தோன்றுகிறது. சூர்யனை ஆத்மாகாரகன் என்பார்கள். அதாவது ஒவ்வொரு கிரகங்களுக்கும் காரகத்துவம் என்று ஒன்று உண்டு. சூரியன் ஆத்மா மற்றும் பித்ருகாரகன், சந்திரன் உடல் மற்றும் மனோகாரகன், செவ்வாய் சகோதரகாரகன், புதன் வித்யாகாரகன், குரு புத்திரக்காரகன், சுக்கிரன் களத்திரக் காரகன், சனி ஆயுள்காரகன், இராகு போகக்காரகன், கேது ஞானக்காரகன் என்று பொதுவாகச் சொல்லப்பட்டு இருந்தாலும், நவகிரகங்களுக்கு என்று அவரவர்க்கு தனிப்பட்ட பல காரகத்துவங்கள் உண்டு. அந்தந்த காரகத்துவங்களின் மூலம் செய்யப்படும் வினைகளுக்கு பயன் அந்தந்த கிரகங்களின் மூலமாகவே தரப்படும் என்பது விதி. எனினும் எல்லா உயிர்களும் சூரியன் மூலமாகவே பூமிக்கு வருகின்றன. அதனால்தான் சூரியனை மையமாக வைத்து இலக்கினம் என்ற ஒன்றை குறிப்பார்கள். இலக்கு + இனம் என்று பதம் பிரித்துப் பார்க்கும் பொழுது உண்மை விளங்க வரும். இலக்கு என்றால் குறி. அதாவது எந்த குறிக்கோளை முன்னிட்டு இந்த ஜாதகர் ஜனித்துள்ளார் என்பதுவும், எந்த இனத்தில் ஜனித்துள்ளார் என்பதுவும் நல் ஜோதிடர் கண்டு கொள்வார். எல்லா உயிர்களின் குறிக்கோளும் முக்தியே என்றாலும், இந்தப் பிறவி முக்தியை வேண்டியா அல்லது ஏதேனும் பாவ புண்ணியங்களை கழிக்க வேண்டியா என்பதை இலக்கினம் சொல்லி விடும்.
இப்படி சூரியன் உயிரைத் தர முன்வரும் பொழுது, அந்த உயிரைச் சுமக்க உடல் வேண்டுமல்லவா ? அதைத் தருவது உடல்காரகனான சந்திரன். எனவேதான் அவர் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறாரோ அதை பிறந்த நட்சத்திரமாகச் சொல்வார்கள். அதற்குத் தோதாக இருபத்தி ஏழு நட்சத்திர மண்டலங்களாகவும், பன்னிரண்டு இராசி மண்டலங்களாகவும் ஆகாயத்தை பூமியை மையமாக வைத்து பிரித்திருப்பார்கள். உயிர் எதற்காக மீண்டும் பிறக்கிறது ? என்று சிந்தித்துப் பார்க்கின்ற பொழுது, தன்னிலிருந்து பிறக்கின்ற உயிர்கள் அனைத்தும் தன்னை உணர்ந்து சிவகதியான முக்தியை அடைய வேண்டும் என்பதற்காகவே. அத்தகைய ஞானம் வரும் வரை பிறவி நீள்கிறது. உயிரானது ஞானத்தை அடைவதற்கு இடையூறாகும் படிக்கு வினையாற்றும் பொழுது, அதை உணர்த்தும் விதமாக பிறவி அமைகிறது. இத்தகைய பிறவி இறைவனின் ஐந்தொழில் அடிப்படையில் நிகழ்கிறது. இவையனைத்தும் சூரிய மண்டலத்தில் உள்ள நவகிரகங்கள் மூலமாகவே நடக்கின்றது. முக்தி பெறும் உயிர்கள் கபாலத்தில் உள்ள நுட்பமான துவாரம் வழியாக சூரியனை அடைந்து பரம்பொருளைச் சேர்ந்து விடுகின்றன. முக்தி அடையத் தடையுள்ள உயிர்கள் உடலின் கண் உள்ள நவதுவாரங்களில் ஏதேனும் ஒன்றின் வழியாகப் பிரிந்து உடல்காரகனாகிய சந்திரனை அடைந்து, அங்கிருந்து எமலோகம் சென்று வந்து மீண்டும் பிறவி எடுக்க வேண்டி சந்திர மண்டலத்திற்கு வந்து உரிய காலம் வரும் வரை சூரிய பகவானின் உத்தரவுக்காகக் காத்து நிற்கின்றன.
பிறக்கும் உயிர்களுக்கு சூரியன் இலக்கினம் தருவது போல, இறக்கும் உயிர்களுக்கு சந்திரன் திதியை வழங்குகிறார். ஆதலால்தான் திதியை அடிப்படையாக வைத்து தர்ப்பணம் கொடுக்கப்படுகின்றது. அப்படிக் குறிப்பிட்டத் திதியன்று தர்ப்பணம் கொடுக்கப்படும் பொழுது மறுபிறவிக்காக சந்திரனில் காத்து நிற்கும் முன்னோர்களான வம்சத்தார்கள் வந்து அதை ஏற்று மனமைதியைப் பெறுகின்றனர். தர்ப்பணம் தரப்படவில்லை எனும் பொழுது அந்த முன்னோர்களின் உயிர்கள் ஏமாற்றமடைந்து சபித்து விடுவதால், அந்த வம்சத்தில் பிறக்கும் குழந்தைகள் பித்ரு தோசமுடைய குழந்தைகளாகப் பிறக்கின்றன. இத்தகைய ஜாதகங்களைப் பார்த்தால் பூர்வ புண்ணிய ஸ்தானம் கெட்டு, சூரியனின் பலம் குறைந்து, பித்ரு தோசம் நிறைந்த ஜாதகமாக அமைந்திருக்கும். இனி தனிஷ்டா என்கிற அடைப்பு பற்றி பார்ப்போம். அதாவது முக்தி அடையும் தகுதி பெறாத உயிர்கள் சந்திரனை அடைந்து அன்று அவர் எந்த நட்சத்திரத்தில் இருக்கின்றாரோ, அந்த நட்சத்திரத்தின் வழியாகவே எமலோகத்தை அடையும். இதில் கவனித்துப் பார்த்தால் அசுர குருவான சுக்கிரபகவானும், ஞானக்காரகனான கேது பகவானும் உயிர்களுக்கு அடைப்பை ஏற்படுத்துவதில்லை. உயிர்கள் அசுர குணம் உடையர்களாக இருந்தாலும் அவர்களை காக்கும் பொருட்டு தன் ஒரு கண்ணையே இழந்தவர் சுக்கிர பகவான். கேது வினாயகரின் அம்சமாதலாலும், உயிர்களின் விக்னங்களைத் தீர்ப்பவராதலாலும், ஞானக்காரகனாதலாலும் அவரும் அடைப்பைத் தருவதில்லை. மற்ற எழுவருமே அடைப்பை ஏற்படுத்துகிறார்கள்.
சிவ சூரிய பகவான் தனது மூன்று நட்சத்திரங்களான கார்த்திகை, உத்திரம், உத்திராடம் மூலமாகவும் அடைப்பை ஏற்படுத்துகிறார். முருகப் பொருமானின் அம்சமான செவ்வாய் தனது நட்சத்திரங்களான அவிட்டம், மிருகசீரிடம், சித்திரை மூலமாகவும் அடைப்பை ஏற்படுத்துகிறார். குருவும் தனது நட்சத்திரங்களான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி மூலமாகவும் அடைப்பை ஏற்படுத்துகிறார். அதாவது முக்தியடையத் தகுதி இல்லாத கொடிய பாவங்கள் செய்த உயிர்களை சிவபெருமானும், முருகனும், குருவும் தண்டித்து மீண்டும் பிறக்கச் செய்து ஞானமடையச் செய்ய அடைப்பை உருவாக்கி விடுகின்றனர். ஒரு மனிதனுக்கு ஞானம் வேண்டுமென்றால் மனம் நல்வழிப்பட்டு ஒடுங்க வேண்டும். மனம் செம்மையடையவில்லை என்றால் ஆத்ம ஞானம் சித்திக்காது. மனிதனின் மன நிலை மாற்றங்களுக்கு காரகத்துவமாக அமையும் சந்திரபகவான் தன்னுடைய குளிர்ச்சியான சுபாவம் காரணமாக தனது மூன்று நட்சத்திரங்களில் ரோகிணியை மட்டுமே அடைப்பு நட்சத்திரமாக வைத்து விட்டு மற்ற இரண்டு நட்சத்திரங்களையும் அடைப்பில்லாத மார்க்கங்களாக அமைத்துக் கொண்டார்.
இராகு பகவான் போகத்தில் அழுத்தி அதன் மூலம் உயிர்களுக்கு ஞானத்தை வழங்குபவர். போகத்தை வெறுக்கும் உயிர்கள் குறைவே. ஏனெனில் இன்ப நுகர்ச்சி என்பது உயிரோடு கலந்த நுட்பமாகவே உள்ளது. எனவே உயிர்களோடு கலந்து விளங்குகின்ற இராகு பகவான் தனது நட்சத்திரங்களில் சனிபகவானின் வீட்டில் உள்ள சதயத்தை மட்டும் அடைப்பாக வைத்து விட்டு மற்ற இரண்டையும் திறந்து வைத்தார். நீதி அரசனான சனிபகவான் ஈஸ்வரப் பட்டம் பெற்றவர். கருணைக் கடல். ஒரு பசுவின் கன்றைக் கொன்றதினால் தன் மகனென்றும் பாராமல் தேர்க்காலில் இட்ட மனுநீதிச் சோழனை இன்றளவும் நாம் பாராட்டி மகிழ்கிறோம். ஏனெனில் நீதி அவ்வளவு பெருமையும், சக்தியும் வாய்ந்தது. அத்தகைய நீதியை தன் இயல்பாகக் கொண்ட சனி பகவான் உயிர்கள் மீது கொண்ட கருணையால் உத்திரட்டாதியை மட்டும் அடைப்பாக்கி மற்ற இரண்டையும் திறந்து வைத்தார். வித்தைக்கு அதிபதியான புதன் பகவான் கூட நடுநிலை வகிப்பவர்தான். புதனுக்குரிய ஐந்தாம் எண் என்பது ஒன்பது எண்களில் நடு நாயகமாகத் திகழ்கிறது. அது போல புதனுக்குரிய கிழமையான புதன் கிழமையும் நடுவில் மையமான கிழமையாகவே விளங்குகிறது. எனவே புதன்பகவானும் தன்னுடைய கருணை குணம் காரணமாக ரேவதியை மட்டும் அடைப்பாக்கி மற்ற இரண்டு நட்சத்திரங்களையும் திறந்து வைத்தார்.
இப்படிப் பலவிதமான நுட்பங்களும், சூக்கும இரகசியங்களும் காலச் சக்கரத்தின் பிறப்பு, இறப்பு என்கிற வட்டத்தில் அடங்கியுள்ளன. குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். அதில் உள்ள சூட்சுமம் என்னவென்றால், கர்பத்தில் தவநிலையில் இருக்கும் வரைதான் அது தெய்வ நிலையாகும். அதற்கு முன் ஜீவாத்மாவாக விளங்கும் பொழுதோ அல்லது பிறந்து விட்ட பிறகோ அது தெய்வ நிலையாகாது. அது வினைகளுக்கும் அதன் பயன்களுக்கும் ஆட்பட்டு விடுகிறது. இறைவன் பழைய வினைகளை தன் மறைத்தல் தொழில் மூலம் மறைத்து கர்ப்பவாசத்தில் தவநிலையை உணர்த்தி, பத்து மாதங்கள் இருக்க வைத்த பிறகே பிறக்க வைக்கிறார். ஆனால், நாமோ அதை உணராமலேயே மீண்டும் சுழலில் சிக்கிய ஓடத்தைப் போல உழன்று கொண்டிருக்கிறோம். இதற்கு வலு சேர்க்கும் விதமாகப் மகாபாரதக் கதை ஒன்று உண்டு. அர்ஜுனன் இல்லாத நேரத்தில் கௌரவர்களின் வியூகத்தில் மாட்டிக் கொண்டு அபிமன்யூ இறந்து போகிறான். அர்ஜுனன் தன் மனகனின் இறப்பைக் கேள்விப்பட்டு அழுது புலம்புகிறான். எவ்வளவோ சமாதானங்கள் சொல்லியும் அவன் துக்கத்தைப் போக்க முடியவில்லை. மேலும் கண்ணனைக் கடுமையாக விமர்சிக்கிறான். நீ நினைத்தால் அபிமன்யூவைக் காப்பாற்றியிருக்கலாமே என்று கண்ணன் மேல் சாடுகிறான். அதைக் கேட்டக் கண்ணன் அவனுக்கு உண்மையை உணர்த்த வேண்டி, உன் மகன் சந்திர மண்டலத்தில்தான் இருக்கிறான் ''போய் பார்த்து விட்டு வா'' என்று அனுப்பி வைக்கிறான்.
அங்கு சென்ற அர்ஜுனன் தன் மகனைப் பார்த்ததும் ஓடிப் போய் '' மகனே அபிமன்யூ'' என்று கதறியழுத கட்டி அணைக்க முயல்கிறான். ஆனால், அபிமன்யூவோ எந்த வித சலனமுமில்லாமல் ''யார் யாருக்கு மகன் ?'' நீ ஒரு உயிர், நான் ஒரு உயிர். இந்த தந்தை மகன் உறவெல்லாம் உடலோடு மண்ணில் மறைந்து போகின்றன. இங்கே எந்த வித பந்த பாசங்களுக்கும் இடமில்லை என்று சொல்லி விலகிப் போகிறான். அதற்குப் பிறகு உண்மையை உணர்ந்த அர்ஜுனன் பூமிக்கு வந்து கண்ணனைப் பணிகிறான். இது போவே கர்ணனுக்கும் தன் வினைப் பயனாக மறுபிறவி வாய்த்தது. அதாவது மரணத் தருவாயில் தண்ணீர், தண்ணீர் என்று கர்ணன் புலம்பக் கேட்டக் கண்ணன் தன் ஆட்காட்டி விரலை கர்ணனின் வாயில் வைப்பான். அதிலிருந்து அமிர்தம் சுரக்கும். பசியும், தாகமும் வாட்டிய வேளையில் அந்த அமிர்தத்தை உணட கர்ணனனை பகவான் தன்னை வந்து சேரும்படிக்கு அருளுவார். ஆனால், கர்ணனோ நான் எல்லா தானமும் செய்து விட்டேன். ஆனால், அன்னதானம் செய்யவில்லை. இவ்வேளையில் தாங்கள் அதன் சிறப்பை உங்கள் விரல்கள் மூலமாக எனக்கு உணர்த்தி விட்டீர்கள் எனவே, ஒரு பிறவி எடுத்து அன்னதானம் செய்து விட்டு, அதற்குப் பிறகு முக்தியடையும் படி அருள வேண்டும் என்று வேண்டுவான். கண்ணனும் மர்மமாகப் புன்னகைத்தபடி வரம் தந்து விலகுவான். கர்ணனும் மாண்டு போவான்.
ஆனால். மறுபிறவி என்கிற பொழுது வினைகளும் உடன் செல்லுமல்லவா ? மறுபிறவியில் பல்லவ நாட்டின் தளபதியாகப் பரஞ்சோதியாக அவதரித்தந கர்ணன், சிறு தொண்ட நாயனாராக மாறி சிவத் தொண்டு புரிவான். அங்குதான் வினை வேலை செய்தது. இறுதி கட்டத்தில் அபிமன்யூ கர்ணனிடம் ''இல்லை என்று சொல்லையே அறியாத கர்ணா ஒரு உடைந்த வாளாவது கொடு, நான் போரிட்ட படியே சாவேன்'' என்கிறான். கர்ணனும் வாளைத் தரப்போகும் வேளையில் துரியோதனன் தடுக்கவே, அந்த வாளாலேயே அபிமன்யூவைக் குத்தி சாய்த்து விடுவான். அந்த அபிமன்யூவின் நம்பிக்கையை தகர்த்த துரோகச் செயலுக்குத் தண்டனையாகவே தன் மகனைத் தானே கறி சமைத்துத் தர வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்குப் பிறகு அனைவரையும் சிவ பெருமான் ஆட்கொண்டு விடுகிறார். சுபம்.
தொடரும்
தனிஷ்டா பஞ்சமி தொடர் ....... 1.
''நான் ஒரு ஈ, எறும்புக்குக் கூட துன்பம் தருவதில்லை. எனினும் துன்பமே வடிவடுத்து வந்ததோ என்கிற அளவிலான வாழ்க்கையையே அடைந்திருக்கிறேன் . ஆனால், கொலை செய்பவர்கள், கொள்ளையடிப்பவர்கள், எண்ணற்ற பாவங்களை செய்கிறவர்களோ இன்பமாக வாழ்கிறார்கள்''. இந்த வார்த்தையை சொல்லாத மனிதர்கள் மிகவும் குறைவே. இதற்காண விடையாக நம் முன்னோர்கள் குறிப்பிடுவது ஊழ்வினை எனப்படும் கர்ம வினைப் பயன்களையே. ஒவ்வொரு வினைக்கும் அதன் பயனாக மாறுவதற்கு ஒரு கால அளவு உள்ளது. அது போலவே நம் வினைகளும். ஆனால், வாழும் பொழுது ஒருவன் எத்தனை பாவம் செய்தான் என்பதை சுட்டிக் காட்டும் விதமாக ஊழ்வினை வந்து உறுத்தூட்டுகிற நேரம் ஒன்று உள்ளது. அதாவது பொதுவாக நாம் பிறக்கும் போது நட்சத்திரத்தையும், இறப்புக்குத் திதியையும் நினைவில் கொள்வோம். ஆனால், இறக்கும் போது நட்சத்திரம் பார்க்க வேண்டியது அவசியம் என்று சித்தர்கள் சொல்லி வைத்துள்ளனர். சில நட்சத்திரங்கள் அடைப்பு என்று வழங்கப்படுகின்றன. அது என்ன அடைப்பு ?
அதாவது கர்மவினை, வினைப்பயன் காரணமாக மேலுலகம் செல்வதற்கு ஏற்படும் தடையையே அடைப்பு என்று சொல்கிறார்கள். சித்தர்கள் தனிஷ்டா பஞ்சமி என்றழைப்பதுவும் இந்த நட்சத்திரங்களில் ஏற்படும் மரணங்களைத்தான். தனிஷ்டா பஞ்சமி என்பது ஒரு துர்தேவதையாகச் சொல்லப்பட்டுள்ளது. தீய அல்லது அடைப்பு உள்ள நட்சத்திரங்களில் இறந்தவர்கள் வீட்டில் முறையான பரிகாரங்களைக் கைகொள்ளாவிட்டால் இந்த துர்தேவதை புகுந்து அந்த வீட்டில் உள்ளவர்களை ஆவிரூபமாகவோ, கனவு மூலமாகவோ, பிரம்ம ராக்ஸத ரூபமாகவோ தோன்றி பயமுறுத்தி, 6மாதத்திற்குள் மரணப்படுக்கையில் தள்ளிவிடும் என்பார்கள். முக்தி பெற்ற உயிர்கள் கபாலம் திறந்து சூரியன் வழியாக ஒளிவடிவான இறைவனை அடைகின்றன. ஆனால் முக்திநிலையை எட்டாத உயிர்கள் மீண்டும் உடல் எடுக்க உடல்காரகனான சந்திரனையே அடைகின்றன.
தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்கள் 13 ஆகும். இதில் அவிட்டம், சதயம்,பூரட்டாதி, உத்திரட்டாதி,ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு ஆறு மாதங்கள் அடைப்பு. ரோஹிணியில் இறந்தவர்களுக்கு நான்கு மாதங்கள் அடைப்பு. கார்த்திகை, உத்திரம் ஆகிய நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு மூன்று மாதங்கள் அடைப்பு. மிருகசீருஷம், சித்திரை, புணர்பூசம்,விசாகம், உத்திராடம் ஆகிய ஐந்து நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு இரண்டு மாதங்கள் அடைப்பு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இந்த அடைப்பு காலங்கள் முடியும் வரை வீட்டை பூட்டியே வைத்திருப்பார்கள். சில இடங்களில் இறந்தவருடைய சடலத்தை வாசல் வழியாக கொண்டு செல்லாமல் சுவரை இடித்து அதன்வழியாக எடுத்துக் கொண்டுபோவார்கள். கடந்த காலங்களில் கடுமையான விதிமுறைகளை எல்லாம் தனிஷ்டா பஞ்சமிக்காக கடைபிடித்து வந்திருக்கிறார்கள். கூரையைப் பிரித்து அதன் வழியாகக் கூட சடலத்தை அப்புறப்படுத்தியுள்ளதைக் கேள்விப் பட்டிருக்கிறேன்.
ஒரு மனிதனானவன் எந்த நட்சத்திரத்தில் இறக்கிறானோ அந்த நட்சத்திரத்தின் வழியாகவே எமலோகத்திற்கு செல்வதாகச் சொல்லப்படுகிறது. 27 நட்சத்திரங்களில் இந்த தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களான 13 நட்சத்திரங்கள் போக மீதமுள்ள 14 நட்சத்திரங்களில் இறப்பவர்கள் விரைவில் தடையேதுமின்றி எமலோகம் அடைகிறார்கள். தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களில் இறந்தவர்கள் எமலோகம் சென்றடைய அந்த அடைப்பு என்று சொல்லப்பட்டுள்ள கால அவகாசம் தேவைப்படுகிறது. இதை கருடபுராணமும் உறுதிப் படுத்துகின்றது. இதற்கு பரிகாரமாக வீட்டையெல்லாம் இடிக்கத் தேவையில்லை. அந்த குறிப்பிட்ட காலம்வரை இறந்த இடத்தில் ஒரு திண்ணை அமைத்து, மாலை நேரத்தில் தீபம் ஏற்றி, தண்ணீர், நைவேத்தியம் வைத்து, கற்பூர ஆரத்தி செய்து ''இறந்த இந்த உயிருக்கு உணவும், நீரும் சென்றடைய இறைவா நீ உதவவேண்டும் '' என்று வேண்டிக் கொண்டு, கற்பூர ஆராதனைக்குப் பிறகு தீபம் அனையாதவாறு ஒரு கூடையைப் போட்டு மூடி வைத்துவிட வேண்டும். அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கான காலம்வரை இதைச் செய்து முடிக்க வேண்டும். அதன் பிறகு அதற்கான கிரியைகளை தகுந்த வேதப் பயிற்சிபெற்ற அந்தணர்களைக் கொண்டு செய்து கொள்ளவேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
தனிஷ்டா பஞ்சமி தொடர்....... 3.
அடைப்பு உள்ள நட்சத்திரங்களில் இறந்தவர்கள் எமப்பட்டினம் செல்ல தடைகள் உள்ளன. அதாவது பூமிக்கும் எமலோகத்திற்கும் இடையே 27 நட்சத்திரங்களின் வழியாகச் செல்லும் 27 பாதைகள் உள்ளன. இதில் அடைப்பு ஏற்படுத்தும் 13 நட்சத்திரங்களின் பாதைகளைத் தவிர மற்ற 14 நட்சத்திரங்களின் வழியாகச் செல்பவர்கள் விரைவாக எமப்பட்டினத்தை அடைந்து விடுவார்கள். அடைப்பு ஏற்படுத்தும் 13 நட்சத்திரங்களின் வழியாக எமப்பட்டினம் செல்ல தூரமும், காலமும் அதிகமாகும். அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் வழியாகச் செல்ல ஆறு மாதங்கள் அதிகமாகும். ரோகிணி வழியாகச் செல்ல நான்கு மாதங்கள் அதிகமாகும். கார்த்திகை, உத்திரம் என்ற இரண்டு நட்சத்திரங்கள் வழியாகச் செல்ல மூன்று மாதங்கள் அதிகமாகும். மிருகசீரிடம், சித்திரை, புனர்பூசம், விசாகம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்கள் வழியாகச் செல்ல இரண்டு மாதங்கள் அதிகமாகும்.
ஒருவர் தற்பொழுது பிறந்துள்ள நட்சத்திரத்தை வைத்தே அவர் சென்ற பிறவியில் அடைப்புள்ள நட்சத்திரத்தில் இறந்தவரா ? இல்லையா ? என்று கண்டு கொள்ளலாம். மேலும் ஒருவரின் பிறவிக்கான வினை எந்த காரகத்துவத்தில் அமைந்துள்ளது என்பதைக் கூட நட்சத்திரம் மற்றும் அதன் அதிபதியான கிரகத்தை வைத்தும், அது நிற்கும் பாத சாரத்தை வைத்தும் கண்டு கொள்ளலாம். இப்படி ஒவ்வொரு பாவத்தையும், அது அமைந்துள்ள நட்சத்திரம், அதன் அதிபன், அவர் நிற்கும் நட்சத்திரத்தை வைத்து கண்டு கொள்ள முடியும். அதற்கு நுட்பமான சோதிட அறிவு வேண்டும். சென்ற பிறவியில் ஒருவர் இறக்கும் பொழுது எந்த நட்சத்திரத்தில் சந்திரன் எத்தனை நாழிகை சஞ்சாரம் செய்து கொண்டிருந்தாரோ, அதே நட்சத்திரத்தில் மீதமுள்ள நாழிகையில் மறுபிறவியில் அவதரிப்பார். இதைத்தான் ஜாதகத்தில் திசை கணக்கிடும் பொழுது கர்ப்ப செல் நீக்கி என்று போடுவார்கள்.
இப்பொழுது நமக்குள் உதயமாகும் கேள்வி என்ன ? இந்த அடைப்பு நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு கால தாமதம் ஆவதற்கான காரணம் என்ன ? தூரம் மட்டுமா ? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா ? இதற்கான தெளிவான விளக்கம் கருட புராணத்தில் உள்ளது. மன்னிக்கத் தகுந்த, மிகக் கொடிய பாவங்களைச் செய்யாதவர்களின் உயிர்கள் யம தூதர்களால் நேரடியாகவே கொண்டு செல்லப்படுகின்றன. அங்கு யமனானவர் அவ்வுயிர்களுக்கு பாவ, புண்ணியங்களைப் பற்றி உபதேசித்து பிறகு யம தூதர்களை அழைத்து மீண்டும் கொண்டு போய் அவர்கள் உடலிருக்கும் இடத்தில் விடச் செய்வார். இதற்கிடையே உடலானது மாந்தியால் சவமாக மாற்றப்பட்டு விடும். அங்கு வந்து சேரும் உயிரானது தங்கள் உறவினர்கள் நிலை, மற்றும் உடலுக்கு நடக்கும் சடங்குகளையும் பார்த்துக் கொண்டே இருக்கும். பிள்ளைகள் 12 தினங்களுக்கு அன்புடன் தரும் பிண்டங்களை ஏற்றுக் கொண்டேயிருக்கும். அதற்குப் பிறகு மீண்டும் அவ்வுயிரை யமதூதர்கள் கவர்ந்து சென்று யமனின் முன் நிறுத்துவார்கள். அங்கு அவர்களின் மறுபிறவி பற்றி தீர்மானிக்கப்பட்டு, அவ்வுயிர்கள் சந்திர மண்டலத்திற்கு வரும்.
ஆனால், தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரத்தில் இறந்த உயிர்களின் நிலையே வேறு. இந்த நட்சத்திரத்தில் இறப்பதே தண்டனையாக அமைகிறது. இவ்வுயிர்கள் எமலோகம் செல்வதற்கு முன் ஒவ்வொரு உயிருக்கும் ஒரு ஸ்தூல சரீரம் வழங்கப்படும். அவ்வுடம்பைப் பெற்ற தனிஷ்டா பஞ்சமி உயிர்கள் நாள் ஒன்றுக்கு நூற்றுக் கணக்கான காத தூரம் கல்லிலும், முள்ளிலும், காட்டுப் பாதையிலும் நடந்து செல்ல வேண்டும். அங்குள்ள செடிகள் மற்றும் மரங்களின் இலைகள் கூட கத்தி போலக் கூர்மையாக இருப்பதால் உடலைக் கிழித்து ரணமாக்கி விடும். தண்ணீரும், உணவும் கிடைக்காது. வெளிச்சமே இருக்காது. இதனால்தான் அடைப்பு காலங்கள் முழுவதும் தினந்தோறும் உணவும், தண்ணீரும், விளக்கும் வைத்து கற்பூரம் ஏற்றி, அவை அந்த உயிர்களைப் போய்ச் சேர வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்தனை செய்யச் சொல்கிறார்கள். வழியில் பைனஸ் வதப்பட்டினத்தில் விசித்திரமான உருவ அமைப்புகள் கொண்ட மிருகங்கள் வாழும். அவை கொடுக்கும் தொல்லைகள் சொல்லில் அடங்காது. இவர்களுக்குப் போடும் பிண்டங்களைத் தட்டிப் பறிக்க தலைக்கு மேல் பைசாசங்கள் வேறு பறந்து கொண்டேயிருக்கும். நடக்க முடியாமல் துன்பப்படும் பொழுது கூட யம கிங்கரர்கள் அடித்து, உதைத்து நடக்க வைப்பார்கள். என்ன பாவம் செய்ததற்காக இப்படி உன்னைத் துன்புறுத்துகிறோம் என்று சொல்லிச் சொல்லி அடிப்பார்கள்.
இதையெல்லாம் கடந்தால் இரத்தமும், அழுகிய சதைகளும், மிதக்கும் பலகாத தூரம் அகலமான மிகப் பெரிய வென்னீர் நதியான வைதரணி நதியைக் கடக்க வேண்டும். இப்படிப் பல கொடுமைகளைக் கடந்துதான் இவர்கள் யமபுரியை அடைவார்கள். அதற்கு 6 மாதம், நான்கு மாதம், 3 மாதம், 2 மாதம் ஆகும். அந்தந்த தனிஷ்டா நட்சத்திரங்களுக்கு ஏற்றவாறு பாதையின் தூரமும், கொடுமைகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. எனவே இதையெல்லாம் உணர்ந்து, நம் உறவினர்கள் இந்த குறிப்பிட்ட நட்சத்திரங்களில் இறந்து விட்டால், அவரவர்க்கு உரிய காலம் வரை உணவும், தண்ணீரும், விளக்கும் வைத்து கற்பூரம் காட்டி இறைவனைப் பிரார்த்தனை செய்ய வேண்டும். மேலும் அவ்வுயிர்களுக்கு உதவும் வகையிலும், இறைவனின் கருணையைப் பெற வேண்டியும், ஏழைகள், முதியோர், நோயாளிகளுக்கு செருப்பு, கைத்தடி, வஸ்திரம், உணவு கொடுத்து வந்தாலோ அல்லது கோவில்களுக்கு எண்ணெயுடன் கிண்ணம் கொடுத்து வந்தாலோ அவ்வுயிர்களின் துன்பம் குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது. நாமும் இத்தகைய தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்களில் இறக்காமல் இருக்கவும், நமது இறப்பும், அதற்கடுத்த பயணமும் துன்பமின்றி அமையவும் இறைவனை இடையறாது பிரார்த்திப்பதோடு, தீய எண்ணங்கள், செயல்களை விடுத்து நல்லதையே நினைத்து நன்மைகளைச் செய்வோமாக.
ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். இத்தகைய கொடுமையான தோஷம் அவ்வுயிர்களுக்கு அவர்கள் செய்த பாவத்தினால் மட்டும் விளைவதில்லை. அவ்வுயிர்கள் பிறந்த ஏழு தலைமுறைகளில் ஏற்பட்ட பாவம் அல்லது சாபத்தினாலும் ஏற்படக் கூடும். எனவே அதற்குரிய பூஜை, பரிகாரங்களைச் செய்தால் சரியாகி விடும். அல்லாத பட்சத்தில் தனிஷ்டா பஞ்சமி மரணங்கள் அந்தக் குடும்பத்தில் தொடரக் கூடும். எனவே இதை மூட நம்பிக்கை என்று தள்ளாது, தோஷத்திற்கான காரணங்களை ஆராய்ந்து போக்கிக் கொள்ள வழி வகை செய்து கொள்ள வேண்டும்.

Wednesday, 10 May 2017

சாரதா சமையல்: புளி சாதம் / Tamarind Rice

சாரதா சமையல்: புளி சாதம் / Tamarind Rice:                           பரிமாறும் அளவு - 3 நபருக்கு தேவையானபொருள்கள் - உதிரியாக வேக வைத்த அரிசி சாதம் - 2 கப் புளி - நெல்லிக்காய் ...

Saturday, 6 May 2017

அக்ரி ஆதி added 22 new photos.Follow
& ஆர்கானிக் உரங்கள் கிடைக்கும். 1)D×T குட்டை (Original) ரகம் Rs 350. மானியம் Rs 100. (2.5 வருடத்தில் பலன் தரும்) (2) சன்னங்கி பச்சை இளநீர் ரகம் Rs 250. (2.5 வருடத்தில் பலன் தரும். 650 ml to 750 ml இளநீர் இருக்கும்) (3) T×D நெட்டை × குட்டை Rs 60. (4 வருடத்தில் பலன் தரும்) (4)COD செவ்இளநீர் ரகம் Rs 150. (3 வருடத்தில் பலன் தரும்). (5)நெட்டை ரகம்(TALL)Rs 25, 40. ( 5 வருடத்தில் பலன் தரும்) (6)ஒட்டு கன்று அனைத்தும் Rs 150.(1 to 2 வருடத்தில் பலன் தரும்) மாங்கன்று,எலுமிச்சை கன்று, மாதுளை கன்று, பலா கன்று, ஆப்பிள் கன்று,சீனி கொய்யா கன்று, சிவப்பு கொய்யா, நெல்லி கன்று, நாவல் கன்று, சப்போட்டா கன்று, ஆரஞ்சு கன்று, சாத்துக்கொடி கன்று, அத்திப்பழக்கன்று, ஜாதிக்காய் கன்று Rs 150, 250. (7)சணப்பு, தக்கைப்பூண்டு விதைகள் 1Kg Rs 40. (8)தென்னை மரத்திற்கான இயற்கை உரங்கள்: (1)தென்னை நுண்ணூட்டச்சத்து உரம் 1Kg / மரம்.
 (2) ஆர்கானிக் கலப்பு உரம் Rs 20/ kg (3)தென்னை டானிக் 1L Rs 500.( 25 மரத்திற்க்கு வேரில் கட்டலாம்). (3)டைமண்ட் கடல் பாசி ஜெல் 10 Kg for 70 மரத்திற்க்கு பயன்படுத்தலாம். (9) தென்னை மரம் ஏறும் கருவி Rs 3500. (10)மேலும், தென்னை விவசாயம் தொடர்பான சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ளவும். (11) தென்னை மரத்தை சிதைக்கும் கூண்வண்டு, காண்டாமிருக வண்டு பிரச்சனையை சரி செய்ய வாலிகள் கிடைக்கும். (12)திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் பழக்கன்றுகள் & மரக்கன்றுகளை வழங்குங்கள். அனைவரும் பயன் பெறட்டும் , நாடும் பசுமை அடையட்டும். எங்களிடம் அனைத்து நாட்டு விதை கன்றுகளும் Rs 10 to 20 விலைக்கு கிடைக்கும். தொடர்புக்கு: N.ஆதித்தன்.B.E.,Dip(Agri)., Cell No: 8110095986 (What's up Number) H.O பேராவூரணி, B.O பட்டுக்கோட்டை, பாபநாசம், தஞ்சாவூர்(மாவட்டம்). அனைத்து மாவட்டங்களுக்கும் கன்றுகள் S.T கூரியர் மூலமும் & A.B.T பார்சல் மூலமும் அனுப்பி வைக்கப்படும்.