Saturday, 25 November 2017

Friday, 17 November 2017

அந்திமாலை: வருஷம் ஆனாலும் வயது ஏறாத இளமைக்கு உத்தரவாதம்.முத்த...

அந்திமாலை: வருஷம் ஆனாலும் வயது ஏறாத இளமைக்கு உத்தரவாதம்.முத்த...: ஆக்கம்: கடலூர் அரங்கநாதன். யாராவது உங்களை 'அங்கிள்’ என்றோ 'ஆன்ட்டி’ என்றோ கூப்பிட்டால், நீங்கள் வருத்தப்படத் தொடங்குகிறீர்களா? ...

Tuesday, 14 November 2017

அந்திமாலை: தொலைத்தவை எத்தனையோ - 1

அந்திமாலை: தொலைத்தவை எத்தனையோ - 1: ஆக்கம்:  வேதா இலங்காதிலகம், டென்மார்க் அந்த மரங்களும், நிலமும்…. அந்தக் காலம் ஊரில் சொந்த பந்தங்களுடன்  இயற்கையோடு ஒன்றி, இயற்கையாக வளர்ந்த ...

Monday, 13 November 2017

ambi's ஆம்பல் மலர்: இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - பேரன் சுதன் (1 ...

ambi's ஆம்பல் மலர்: இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - பேரன் சுதன் (1 ...: சின்னவன் உனைக் கண்டேன் சிந்திக்கும் நிலையிழந்தேன். சிரிக்கும் உன் அழகில் சிக்கி நான் மயங்கி விட்டேன் இளங்குறும்பாய் நீ...
உடல் மற்றும் மனதிற்கு புத்துணர்ச்சி தரும் யோகா
யோகா பயிற்சியின் மூலம் உடல் மற்றும் மனதில் புத்துணர்ச்சியும் கட்டுக்கோப்பும் ஏற்படுத்த முடியும்.
யோகா உடலில் உள்ள உள்ளுறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். இதன் மூலம் உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்கி ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
யோகா பயிற்சியின் போது சரியான வழியில் மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டால், சுவாசம் ஒழுங்காக இயங்க ஆரம்பிக்கும். இதனால் உங்களது இளமையின் காலம் நீடிக்கும்!
நாம் தன்னம்பிக்கையுடன் முன்னோக்கி செல்லும் ஆற்றலை நமக்கு கொடுக்கிறது யோகா பயிற்சி. தினமும் தவறாமல் பயிற்சி செய்தால் கோபம், எதிர் மறை எண்ணங்கள் கட்டுப்படும்.
யோகாசனப் பயிற்சியால் உடல் எடை குறையாது என்று பலர் கூறுவார்கள். ஆனால் அது மிகவும் தவறு. உடல் எடை குறைவு மற்றும் உடல் கட்டுக்கோப்புக்கு யோகா மிகவும் அத்தியாவசியமானது. மேலும் செயற்கையை தவிர்த்து, எவ்வித பிரச்சினையும் இல்லாமல், இயற்கையாக உடல் எடை குறைய யோகா மட்டுமே சிறந்த வழி.
நீங்கள் எந்த அளவுக்கு எத்தனை நிமிடத்திற்கு யோகாசனம் செய்கிறீர்களோ, அதைப் பொறுத்து உங்களுடைய உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு கரைந்து, உடல் பருமன் குறையும். அதே நேரத்தில் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சியால் உடல் எடை குறையும் போது ஏற்படும் சோர்வு, யோகாவில் இருக்காது என்பது உறுதி.
யோகாசனம் செய்யும்போது உடல் உறுப்புகளின் அசைவுகளினால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் ரத்தம் அனைத்து உறுப்புகளுக்கும் பாய்ந்து அவற்றின் இயக்கம் சீராகும். மற்ற பயிற்சிகளைவிட யோகாவில் மட்டுமே, ரத்த ஓட்டம் முகம் மற்றும் சருமத்தின் மீதும் பாய்ந்து உடல் அழகை பாதுகாக்கிறது. இதனால் ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் குணமடையும்.
யோகா உடம்பைச் சீராக, கட்டுக்கோப்பாக மாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. உடல் பருமனாக இருப்பவர்களில் அனைவருக்குமே உடல் முழுவதும் கொழுப்பு சேர்ந்திருக்க வாய்ப்பில்லை. சிலருக்கு இடுப்பில், சிலருக்கு தொடையில், சிலருக்கு முதுகில், சிலருக்கு அடிவயிற்றில், சிலருக்கு மேல் வயிற்றில், சிலருக்கு மார்பில் பருமன் வெவ்வேறு வடிவில் இருக்கும். குறிப்பிட்ட யோகாசனத்தை மட்டும் செய்தால் போதும். உடல் முழுவதும் ஒரே மாதிரியாக சீராகும்.
அற்புத மூலிகை சோற்றுக் கற்றாழை..!
சோற்றுக் கற்றாழை என்றழைக்கப்படும் குமரி ஒரு மகா மூலிகை ஆகும். எந்த வைத்திய முறையிலும் கையாளப்படும் அற்புத மூலிகை. இந்த சோற்றுக் கற்றாழை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு பொடியாக மாற்றப்பட்டு மீண்டும் நம் நாட்டிற்கே இறக்குமதி செய்யப்பட்டு அல்சருக்கான அல்லோபதி மாத்திரைகளிலும், சித்த, ஆயுர்வேத, யூனானி மருந்துகளுக்கும் உபயோகிக்கப்படுகின்றன.
சோற்றுக் கற்றாழை முடி உதிர்வதைத் தடுப்பதோடு, சிறுநீரகம் மற்றும் மண்ணீரல் , கல்லீரல் ஆகியவற்றில் உள்ள விஷங்களை நீக்குகிறது. எயிட்ஸ் ஐயும் குணமாக்கும் வல்லமை உள்ளது. கேன்சர் என்னும் புற்று நோயை குணப்படுத்தும் வல்லமை வாய்ந்தது.
பொல்லாமே கங்க பம்பு ழுச்சூலை குஷ்டரச
மல்லார்மத் தம்பகந்த ரங் குன்ம-மெல்லாம்விட்
டேகு மரிக்கு மெரிச்சற் கிரிச்சமு
மாகு மரிக்கு மருண்டு.
நறுங் கற்றாழைக்கு வாத மேகம் , கப கோபம் , கிருமிக் குத்தல் (மூலக் குத்தல் ), பெரு வியாதி ( குஷ்டம் , பால்வினை நோய்கள் ) , மூலம் , உன்மத்தம் , பகந்தரம் , வயிற்று நோய் , தினவுள்ள பித்த கிரிச்சரம் ( அரிப்பும் , பின் கடுப்பும் உள்ள மூத்திரக் கடுப்பு ) ஆகிய வியாதிகள் மருண்டு ஓடும் என்று பொருள்.மேலும் மது மேகத்தால் ( சர்க்கரை வியாதியில் ) அவதிப்படுபவர்களுக்கு 48 நாட்கள் இந்த சோற்றுக் கற்றாழையை எடுத்து அதனுள் இருக்கும் சதையை மட்டும் எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி 7 தடவைக்குக் குறையாமல் தண்ணீரில் கழுவி சீனாக் கற்கண்டோடு கூட்டிச் சாப்பிட மதுமேகம் ஓடியே போகும்.
இந்த சோற்றுக் கற்றாழைச் சோற்றை திரிபலாதிச் சூரணத்துடன் கலந்து கட்டித் தோலாந்தரமாக தொங்கவிட்டு ,அதிலிருந்து வடியும் நீர் குமரிச் செய நீர் என்றழைக்கப்படும்.அது பல மருந்துகள் தயாரிக்க முக்கிய பொருளாகும்.மேலும் அயக்காந்தம், மண்டூரம் முதலியவற்றைச் செந்தூரமாக்குவற்கு இதைவிடச் சிறந்த மூலிகை இல்லை.
ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலா இருக்கா?
சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போதோ அல்லது கழித்தப் பின்போ, ஒருவித எரிச்சல் ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால், அதற்கு உடனே சிறுநீர் பாதையில் தொற்றுநோய் என்று அர்த்தம் இல்லை. அதிலும் இந்த மாதிரியான பிரச்சனையில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே அவஸ்தைப்படுகின்றனர். ஏனெனில் அவர்கள் அடிக்கடி கழிவறைக்கு செல்ல முடியவில்லை என்று வெளியேறும் கழிவுகளை அடக்கி வைக்கின்றனர். இதனை சரிசெய்தால் மட்டும், எரிச்சல் ஏற்படுவதை தடுக்க முடியாது. இந்த மாதிரியான பிரச்சனை ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவை என்னவென்று தெரிந்து கொள்வதோடு, அதற்கான வீட்டு மருத்துகளையும் தெரிந்து கொண்டு, பின்பற்றி வந்தால், சிறுநீர் கழித்தப் பின் ஏற்படும் எரிச்சலைத் தடுக்கலாம்.
எரிச்சல் ஏற்படுவதற்கான காரணங்கள்:
* சிறுநீர் பாதை தொற்றுநோய்
* உடலில் நீர் வறட்சி
* சிறுநீரக கற்கள்
* கல்லீரல் பிரச்சனை
* அல்சர்
* பிரசவத்திற்கு முன்னோ அல்லது பின்போ நரம்புகளில் பாதிப்பு இருப்பது
* விந்து அல்லது விரைகளில் உள்ள தொற்றுநோய்
* பால்வினை நோய்
* பெரிதான புரோஸ்டேட்
* நீரிழிவு
* ஊட்டச்சத்துக் குறைவு
* குறுகிய சிறுநீர் பாதை
எரிச்சலைத் தடுக்கும் சிறப்பான வீட்டு மருந்துகள்:
* அதிகமான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், சிறுநீரானது அடர்ந்த மஞ்சள் நிறத்தில் வருவதோடு, எரிச்சலோடும இருக்கும். ஆகவே ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை 2-3 டம்ளர் தண்ணீர் குடிப்பதை பழக்கமாக கொள்ள வேண்டும். இருப்பினும் எரிச்சலுடன் இருந்தால், அது சிறுநீர் பாதையில் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.
* குருதிநெல்லிக் கனியின் (cranberry) ஜூஸை சாப்பிட வேண்டும். பெரும்பாலான சிறுநீர் பாதை தொற்றுநோய்கள் மற்றும் குறுகிய சிறுநீர் பாதையினால் ஏற்படும் எரிச்சலை, இந்த சிட்ரஸ் பழத்தின் ஜூஸானது சரிசெய்யும். வேண்டுமெனில் எலுமிச்சை ஜூஸ் கூட குடிக்கலாம். ஏனெனில் சிட்ரஸ் பழ ஜூஸ்கள், பாக்டீரியாவை அழிக்கவல்லது.
* நெல்லிக்காய் ஜூஸை குடிப்பதாலும், சிறுநீர் பாதையில் ஏற்படும் எரிச்சலை குணமாக்கலாம். சொல்லப்போனால், நெல்லிக்காய் பெரும்பாலான ஆயுர்வேத மருந்துவத்தில் நோயை குணமாக்கப் பயன்படுகிறது.
* தேங்காய் நீர் உடலில் ஏற்படும் நீர்வறட்சியை தடுக்க வல்லது. அதிலும் இவற்றை மயக்க நிலை மற்றும் நீர் வறட்சியின் போது 2-3 டம்ளர் குடித்து வந்தால், அந்த எரிச்சலானது போய்விடும். வேண்டுமென்றால் அத்துடன் வெல்லம் மற்றும் மல்லி தூளை சேர்த்து குடிக்கலாம். இதனால் வலியுடன் சிறுநீர் வெளியேறுவது குணமாகும்.
* ஒரு டம்ளர் தண்ணீருடன், 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூளை சேர்த்து, இரவில் படுக்கும் முன் ஊற வைத்துவிட்டு, மறுநாள் காலையில், அதில் சர்க்கரை சேர்த்து குடித்தால், சரியாகிவிடும்.
* எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். ஆகவே தினமும் இரண்டு அல்லது மூன்று முறை, கருப்பை வாய்க்குழாய் (vagina) மற்றும் ஆண்குறியை (penis) கழுவ வேண்டும். இதனால் பாக்டீரியாவானது தங்காமல் தடுக்கலாம்.
மேற்கூறியவாறெல்லாம் செய்தால், எரிச்சலுடன் கூடிய சிறுநீர் வெளியேற்றம் சரியாகிவிடும்.

Thursday, 2 November 2017


என்றும் பதினாறு போல் இருக்க கற்றாழையை எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா


கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகது. நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல மருந்துதன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது. இயற்கையான மருத்துவப்பொருட்கள் நமக்கு தான் நிறைய தெரிவதில்லை என்று கூறுவதைவிட அறியவைக்க ஆள் இல்லை என்றால் பொருத்தமாகும்.

கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங் கற்றாழை செங்கற்றாழை இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள், ரெசின்கள், பாலிசக்கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் ‘மூசாம்பரம்’ எனப்படுகிறது.

தாம்பத்திய உறவு மேம்பட
கற்றாழையின் சதைப்பகுதி உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். அதைவிட வேர்ப்பகுதியில் மிக அதிக அளவிலான மருத்துவ குணங்கள் உள்ளன. ஆண்களுக்கு விருத்தியை உண்டாக்கும் வலிமைமிக்க குணம் கற்றாழையின் வேர்களில் உண்டு.

அதற்காக கற்றாழையின் வேரை அப்படியே சாப்பிட முடியாது. அதற்கு சில வழிமுறைகள் உண்டு.
கற்றாழையின் வேர்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதன்பின் இட்லி பாத்திரத்தில் அரை லிட்டர் அளவுக்கு பால் விட்டு, இட்லி தட்டின் மேல் சுத்தம் செய்து வைத்திருக்கும் கற்றாழை வேர்களை வைத்து, அதை ஆவியில் வேகவைக்க வேண்டும்
பின்பு அதை எடுத்து நன்கு காயவைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்கு பாலில் கலந்து குடித்து வந்தால், ஆண்மைக்குறைவு என்ற பிரச்னையே இருக்காது. வீரியம் அதிகரிக்கும். ஆரோக்கியமான விந்தணுக்கள் பெருகும்.
என்றும் பதினாறு போல் இருக்க கற்றாழையை எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா?
இரவு உறங்கச் செல்வதற்கு முன்னர் ஐஸ் க்யூப் ட்ரேயில் கிரீன் டீயை ஊற்றி, ஃப்ரீஸரில் வைத்துவிட வேண்டும். மறுநாள் காலையில் எழுந்து, அந்த கிரீன் டீயால் ஆன ஐஸ் கட்டிகளை எடுத்து, கண்களில் ஒற்றியெடுக்கலாம். வீக்கமும் பறந்துவிடும்; கண்களும் அழகாகப் பிரகாசிக்கும்.
ஐஸ் க்யூப் ட்ரேயில் காய்ச்சாத பாலை ஊற்றி, ஃபிரீஸரில் வைத்துவிட வேண்டும். மாலை வீட்டுக்கு வந்ததும், முகத்தைக் கழுவிய பின்னர், இந்த ஐஸ் கட்டியால் முகத்தை லேசாக ஸ்க்ரப் செய்தால், இறந்த செல்கள் நீங்கி ஃபேஷியல் செய்ததுபோல முகம் பிரகாசிக்கும்.
முகத்திலோ, சருமத்திலோ ஏற்படும் சுருக்கங்களைப் பற்றிக் கவலைப்படாத பெண்களே இருக்க முடியாது. சுருக்கங்களை அகற்றுவதற்கும், அவை வராமல் தடுப்பதற்கும் பல விலை உயர்ந்த க்ரீம்களை எத்தனையோ பேர் உபயோகிக்கிறார்கள்.
ஆனால், செலவே இல்லாமல் இவற்றைக் குறைப்பதற்கு ஒரே வழி ஐஸ் கட்டிகள்தான். தினமும் ஐஸ் கட்டிகளால் முகத்துக்கு ஒத்தடம் தந்தால், தோல் இறுக்கமடையும். இது, சுருக்கங்கள் உருவாவதைத் தடுக்கும்.

முகத்தில் அரிப்பு ஏற்பட்டால், அலர்ஜி உண்டானால் ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுத்துப் பாருங்கள். மேலும் அரிப்பு ஏற்படாமல் இருக்கும்; அலர்ஜி பரவாமல் தடுக்கும்.
வெயிலில் அலைந்து திரிந்துவிட்டு, வீட்டுக்கு வந்ததும் கற்றாழைச் சதைப் பகுதி மற்றும் ஐஸ் கட்டியால் உடல் முழுவதும் தடவலாம். உடல் கருமை நீங்கி உடல் குளுமையாகும். கற்றாழைக்குப் பதிலாக வெள்ளரிச் சாற்றையும் தடவலாம்.
முகத்தின் தோலில் துவாரங்கள் இருந்தால் அவை குறைவாகத் தெரிய வேண்டும் என்பதற்காக, பியூட்டி பார்லரில் மேக்கப் போடுவதற்கு முன்னர் ப்ரைமர் போடுவார்கள். சிலர் ப்ரைமரின் விலை அதிகம் என்பதால், அதை வாங்கிப் பயன்படுத்த மாட்டார்கள். ப்ரைமருக்கு பதிலாக ஐஸ் கட்டிகளை உபயோகிக்கலாம். இது, தற்காலிகமாக, துளைகளைக் குறைக்கும்

Wednesday, 1 November 2017

பொரவச்சேரி: எடையை குறைக்க உதவும் இஞ்சி கற்றாழை ஜூஸ்

பொரவச்சேரி: எடையை குறைக்க உதவும் இஞ்சி கற்றாழை ஜூஸ்: உடல் எடையால் அவஸ்தைப்படுபவர்களுக்கு கற்றாழை ஜூஸ் மிகவும் சிறந்த பானம். அதிலும் இதனை காலை வேளையில் குடித்து வருவது மிகவும் நல்லது. பலருக்கு...

பொரவச்சேரி: நாட்டு கோழி::

பொரவச்சேரி: நாட்டு கோழி::: நாட்டு கோழி குழம்பு:: நாட்டுக்கோழியின் ருசியே அலாதியானது. அதன் சுவையும், மணமும் மதுரை மாவட்டத்தில் உள்ள பிரியாணி கடைகளில் தயாராகும் ஸ்பெச...

பொரவச்சேரி: குறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்

பொரவச்சேரி: குறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்: நாம் உறங்கியபின், நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே சாவகாசமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் நம் தொண்டையானது சுருங்கத் தொடங்கு...

அன்பே சக்தியின் பிறப்பிடம்: சூரிய நமஸ்காரம்..!

அன்பே சக்தியின் பிறப்பிடம்: சூரிய நமஸ்காரம்..!: பூமியில் உள்ள எல்லா சக்திகளுக்குமே மூலக் காரணம் சூரியன்தான். அந்த சூரிய ஒளி மட்டும் பூமிக்கு கிடைக்காவிட்டால் எந்த உயிரினமும் பூமியில் வாழ ...

List of Companies in Bangalore: LIST OF ARCHITECTS IN BANGALORE WITH CONTACT DETAI...

List of Companies in Bangalore: LIST OF ARCHITECTS IN BANGALORE WITH CONTACT DETAI...:                              ARCHITECTS                               DATA BASE 1.   Regent Granito India Ltd      Natesh H K      +(9...

  

varmars

பெயர் எண் கூட்டுத்தொகை :  19 

பெயர் எண்:   1 


பெயர் எண் பலன்கள்: 

19ஐ பெயர் கூட்டு எண்ணாகக் கொண்டவர்களுடைய வாழ்க்கை தொடர்ந்து மேன்மை அடைந்துகொண்டே இருக்கும். பதவி, கௌரவம், மகிழ்ச்சி, வெற்றி, செல்வம் எல்லாம் அதிகரித்துக்கொண்டே போகும். நல்ல வாழ்க்கைத் துணை அமையும். வயோதிகத்திலும் இளைஞர்களைப் போலச் சுறுசுறுப்பாக இருப்பர். இவர்களுடைய நேர்மையே இவர்களுக்கு வெற்றி அளிக்கும். 






















































































http://www.tamilsurangam.in/astrology/numerology/birth_numbers

 எண் பலன்கள் (Gain of Birth Numbers)





றந்த எண் 9 - பிறந்த எண் பலன்கள்




செவ்வாய் (Mars)

பிறந்த எண் 9 - பிறந்த எண் பலன்கள்





செவ்வாய் (Mars)

பிறந்த எண் 9 - பிறந்த எண் பலன்கள்