SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Sunday, 6 December 2015

சர்க்கரைப் பூசணி (பரங்கிக்காய்)பொரியல்


தேவையான பொருட்கள்
பரங்கிக்காய் (சர்க்கரைப் பூசணி)     -       1/4 கிலோ
பெரிய வெங்காயம்                 -       1
பச்சை மிளகாய்                    -       1
கறிவேப்பிலை                     -       2 கொத்து
எண்ணெய்                         -       2 தேக்கரண்டி
கடுகு                              -       1/4 தேக்கரண்டி
கடலைப்பருப்பு                     -       1/4 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு                    -       1/4 தேக்கரண்டி
பெருங்காயம்                      -       1 சிட்டிகை
சர்க்கரை                           -       1/2 தேக்கரண்டி
தேங்காய் துருவல்                  -       2 தேக்கரண்டி
உப்பு                              -      தேவையான அளவு 
எப்படிச் செய்வது? 
* பரங்கிக்காயை (சர்க்கரைப் பூசணி) ஒரு இன்ச் அளவுக்கு சீராக நறுக்கிக் கொள்ளவும். 
* பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாகப் பிளந்து கொள்ளவும். 
* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்ததும், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும். 
* பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
* அடுத்து நறுக்கி வைத்துள்ள பரங்கிக்காயை போட்டு லேசாக கிளறிவிடவும். 
* இதனுடன் சர்க்கரை, உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து லேசாக கிளறி வேக விடவும் 
* பரங்கிக்காய் வெந்தவுடன் தேங்காய் துருவலைச் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும். 
குறிப்பு 
1. பரங்கிக்காயில் தண்ணீர் அதிகமாக சேர்த்தால் காய் குழைந்து சுவை மாறிவிடும். 
2. பரங்கிக்காயை அதிகம் கிளறக் கூடாது. 

No comments:

Post a Comment