உடலின் செயல்பாட்டிற்கு ஊக்க சக்தியை அளிப்பது கல்லீரல்தான். இந்த கல்லீரல் பாதிக்கப்பட்டால் உடல் பலவகையான இன்னல்களை சந்திக்க நேரிடும். இதனால் கல்லீரலைப் பலப்படுத்த வேண்டியது அவசியம்.
கல்லீரலின் பலவீனம்தான் மஞ்சள் காமாலை நோயின் தாக்கம். பூவரச மரத்தின் பழுத்த இலை இரும்புச் சத்து நிறைந்தது. பழுத்த இலைகளுடன் 1 ஸ்பூன் சீரகம் சேர்த்து அரைத்துக் குடித்தால் மஞ்சள் காமாலை நோய் குறையும்.
பூவரசன் பழுத்த இலை – 2
பூவரசன் பழுத்த காய் – 4
சீரகம் – 2 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
பூவரசம் பட்டை – 1 துண்டு
கீழாநெல்லி – 1 கைப்பிடி
சின்ன வெங்காயம் – 4
சிறுநெருஞ்சில் – 5 கிராம்
இவற்றை ஒன்றாகச் சேர்த்து இடித்து, 3 கப் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து 1/2 கப்பாக வந்தவுடன் அருந்தி வந்தால் கல்லீரல் பலப்படும். கை, கால் நடுக்கம் குறையும். மஞ்சள் காமாலை நோயை அறவே நெருங்க விடாமல் உடலை பாதுகாக்கும்.
No comments:
Post a Comment