SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Tuesday 27 December 2016

#டிப்ஸ்...டிப்ஸ்...டிப்ஸ் ::
*முருங்கை கீரையை வாங்கி ஒரு பேப்பரில்
சுற்றி இரவில் வைத்து விட்டு காலையில்
லேசாக கீரையை தட்டினால் கீரை உதிர்ந்து விடும்,சிறு சிறு காம்புகள் இருக்கும் அதை எடுத்துவிடவும்.மீதம் உள்ள காம்பு தண்ணீரில் ஒரு முறை அலசினால் அடியில் சென்றுவிடும்.சுலபமாக முருங்கை கீரை சமைக்கலாம்.
*கறிவேப்பிலை நீண்ட நாள் வாடாமல் இருக்க கறிவேப்பிலையை டிஸ்ஸூ பேப்பரில் சுற்றி பிளாஸ்டிக் டப்பா அல்லது
சிப் லாக் கவரில் வைத்தால் 20 நாட்கள் வாடாமல் இருக்கும்.
*கொத்தமல்லி இலையை நன்றாக கழுவி
ஒரு துணியில் காய வைத்து டிஸ்ஸு
பேப்பரில் சுற்றி டப்பாவில் வைக்கவும்.
*புதினாவும் கொத்த மல்லி போல் செய்யவும் 20 நாட்கள் வாடாமல் இருக்கும்.
*பச்சை மிளகாயை காம்பை எடுத்து விட்டு
டப்பாவில் போட்டு வைத்தால் 10 நாட்கள்
பிரஷ்ஷாக இருக்கும்.
*சீசனில் எலுமிச்சை குறைந்த விலைக்கு
கிடைக்கும் அப்போது வாங்கி சாறு பிழிந்து
வடிகட்டி ஐஸ் கட்டி ட்ரேவில் சாற்றை ஊற்றி பிரிசரில் வைத்து விட்டால் உறைந்து கட்டியாகும் தேவையான போது எடுத்து
உபயோகிக்கலாம்.உறைந்ததை எடுத்து சிப் லாக் கவர் அல்லது டப்பாவில் போட்டு பிரிசரிலேயே வைத்தால் 1 மாதம் வரை நன்றாக இருக்கும்
*இஞ்சியை நன்றாக அரைத்து எலுமிச்சை சாற்றை செய்தது போல் செய்யலாம் அல்லது ஒரு தட்டில் வைத்து தோசை மாதிரி தட்டி ஒரு கத்தியால் செஸ் கட்டம் போல் கோடு போட்டு அப்படியே ப்ரீசரில் வைத்து உறைந்ததும் சிறு சிறு சதுர துண்டுகள் கிடைக்கும் அதை உடைத்து டப்பாவில் போட்டு ப்ரிசரிலேயே வைத்துக் கொள்ளலாம்.
*இஞ்சி தோலை கத்தியின் பின்புறம் சுரண்டினால் தோல் எளிதாக வரும்
ஸ்பூனின் கைப்பிடி பக்கமும் சுரண்டலாம்.
*பூண்டும் இஞ்சி செய்முறை போல் செய்து
ப்ரிசரில் வைத்துக் கொள்ளலாம்
*பூண்டு தோல் உரிக்க சிரமமாக இருக்கும்
ஓவன் இருப்பவர்கள் 2 நிமிடம் வைத்து தோல் உரித்தால் எளிமையாக இருக்கும்.
*வாணலில் பூண்டை போட்டு லேசாக வறுத்து பிறகு தோல் உரிக்கலாம்
*ஒரு சில்வர் பவுலில் பூண்டை போட்டு
வேரொரு பவுலால் மூடி நன்றாக 5 நிமிடம் குலுக்க வேண்டும் தோல் தனியாக உரியும்
*மசாலா தூள் போன்ற அனைத்து வகையான தூள்களையும் ப்ரிசரில் கவருடனோ அல்லது டப்பாவில் போட்டோ
ப்ரிசரில் வைத்தால் 6 மாதம் வரை அப்படியே இருக்கும்.
*மிளகு சீரக தூள் அரைத்து ப்ரீசரில் வைத்தால் வாசனை அப்படியே இருக்கும்
தேவையான போது உபயோகிக்கலாம்
Like
Comment

No comments:

Post a Comment