SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Friday 16 December 2016

ஆவாரம் பூ தேநீர்
நாம் நம்மிடம் இருக்கும் அருமையான எளிமையான இயற்கை மருந்து பொருட்களை புறம்தள்ளி பக்கத்து மாநிலத்துக்காரன் அதையே ஆயுர்வேதா கேம்ப் என்ற பெயரிலும் நம்ம ஊரிலேயே சில பத்திரிகை பரம்பரை வைத்தியரிடமும் போய் காசைக்கரியாக்குகிறோம்.
இந்த ஆவாரம் பூ மருத்துவ இயல்பு மனித மரபணுக்களுடன் இணைந்து காலம் காலம்மாக நமக்கு பலனளிக்கும் தாவர வகைகளுள் ஒன்றும் இது பலருக்கு தெரியாது. சாதரணமான உதாரணம் அணுக்கதிர் தாக்கம் மரபணுக்களை தாக்கி பரம்பரை பரம்பரையாக நோயை உண்டாக்குகிறது.
இந்த ஆவரம்பூ மரபணுக்களை தாக்கும் கதிரியக்கத்தை தாக்கும் பொருளாக இருக்கிறது, புற்று நோய் தாக்கும் செல்களை கட்டுப்படுத்தும் திறன் மற்றும் வெப்பமண்டல பிரதேசத்தில் சூரிய கதிரின் ஊடாக வீட்டில் புகும் ஆபத்தை விளைவிக்கும் கதிரியக்க சக்திகளை தடுத்து அவற்றை மீண்டும் வெளியே அனுப்பும் ஆற்றல் கொண்டது, இதன் மெல்லிய இலைகளின் மேல் சிலிக்கா படலமும் இந்த பூக்களின் நிறமியும் இந்த பணியை அற்புதமாக செய்ய இயற்கை நமக்கு தந்துள்ளது.
இதை பார்த்து விட்டு செல்பவர் பலர் கூறலாம் இது மிகைப்படுத்தப்பட்ட அல்லது ஓவர் டோஸ் கற்பனை என்று நினைக்கலாம் (ஆவாரம் பூ கேன்சரை குணப்படுத்துமா அதற்கு என்ன ஆதாரம் என்றால் உலகில் பல நாடுகளில் உள்ள புற்று நோய் கழகத்தின் லோகோவில் உள்ள பூ இந்த கேசியா அரிக்குலடா என்ற ஆவாரம் பூ தான்( Canadian Cancer Society Logo) இந்த நாட்டு புற்று நோய் கழக லோகோவில் ஆவாரம் பூ இதழ் மையத்தில் வெள்ளை நிறம் இப்பூவின் சக்தி ஒருங்கிணைந்த அடையாளம். ஆனால் கனடாவில் காணப்படும் கேசியா அறிக்குலாட்டா வை விட நம்ம ஊர் ஆவாரம்பூ வீரியம் மிக்கது, இனியாவது வாசலின் மேலே பாட்டி சொருகி வைத்த ஆவரம்பூ கொத்தை காய்ந்த சருகு என வீசாதீர்கள்.
மருத்துவப் பயன்கள்:
ஆவாரை சதை, நரம்பு, ஆகியவற்றை சுருக்கும் தன்மையுடையது. விதை காமம் பெருக்கியாகச் செயல் படும். சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்து. உடம்பின் சரும துர் வாடையைப் போக்குவதுடன் நிறமூட்டும்.
ஆவாரம் பூ டீ
தேவையானவை :
ஆவாரம் பூ பொடி செய்தது -1 டீஸ்பூன்,
ஏலக்காய் – 2,
பனங்கருப்பட்டி (அ) பனங்கற்க்கண்டு (அ)
நாட்டுச் சர்க்கரை – 1கரண்டி.
செய்முறை:
இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி காய வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்ததும் சர்க்கரையை சேர்க்கவும். பின்பு ஆவாரம் பூ பொடி மற்றும் ஏலக்காயை சேர்க்கவும். சுவையான ஆரோக்கியமான டீ ரெடி.
குறிப்பு :
ஆவாரம் பூ பொடி செய்யும் போது ஆவாரம் பூவை பறித்து நன்கு நிழலில் காயவைக்கவும் விரும்பினால் இதனுடன் புதினா சேர்த்து பொடி செய்யவும்.

 

No comments:

Post a Comment