SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Tuesday 20 December 2016





Raja Rajan added 3 new photos — feeling awesome with Suresh Lakshmanan.
பாட்டி வைத்தியம்: ()
நான் சமீபத்தில் ஈரோடு அருகே உள்ள சின்னார்பாளையம் ஊரில் கண்ணில் உள்ள கழிவுகளை நீக்க சென்று இருந்தேன். உண்மையிலயே இது மிகவும் சிறந்த சிகச்சை முதலில் கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றுகிறார்கள். அதன் பிறகு கண்ணில் உள்ள கழிவுகள் மட்டும் தான் வெளியே வரும் என்று இருந்தேன், ஆனால் கண்ணில் இது நாள் வரையில் சேர்த்து வைத்து இருந்த கற்களும் வெளியே வந்துவிட்டன. அதை பார்த்தவுடன் எனக்கே ஆச்சர்யம்.
படத்தில் என்னுடன் இருக்கும் இந்த அம்மா தான் என் கண்ணில் உள்ள கழிவுகள் வெளியே வர காரணம். முதலில் கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றுகிறார்கள் அதன் பிறகு ஒரு சிறு கருவி மூலம் கண்ணில் உள்ள குப்பைகள், கற்கள் அனைத்தையும் வெளியே கொண்டு வந்துவிடுகிறார். இது கண்ணில் செய்கிற வேலை என்பதால் மிகவும் அனுபவும் வேண்டும். இவர் கடந்த ஒன்பது வருடங்களாக இந்த சிகிச்சையை எல்லோருக்கும் கொடுத்து வருகிறார்.
ஆனால் அந்த ஊரில் அருகில் இருப்போருக்கு கூட இதன் அருமை தெரியவில்லை. இவருடைய இந்த திறமையை பார்த்து பல ஆங்கில மருத்துவர்கள் வியந்து போய் எங்களுடைய மருத்துவமனைக்கு வந்து நோயாளிக்கு சிகிச்சை தாருங்கள். நாங்கள் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை தருகிறோம் என்று கூறி உள்ளார்கள். ஆனால் இவர் முடியாது என்று கூறி உள்ளார். ஆனால் தற்பொழுது இவருடைய குடும்பத்தின் ஏழ்மை காரணமாக சில மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை கொடுக்க வேண்டி உள்ளது. இதனால் அவருடைய இந்த சிகிச்சை முறையை தவறான முறையில் பயன்படுத்த முயற்சி செய்வார்கள் என்று நான் கூறினேன். எனக்கு இங்கேயே நிறைய மக்கள் வந்தால் நான் ஏன் அங்கே போக போகிறேன் என்று கேட்டார்.
அது மட்டும் அல்லாது பித்தப்பை கல், கிட்னி கல் நீக்குவதற்கும் இன்னும் நிறைய நாட்டு வைத்தியங்களை கற்று வைத்துள்ளார். ஆகையால் நண்பர்களே ஒரு முறை நேரில் சென்று அவருடைய சிகிச்சை முறையை பார்க்கும்மாறு கேட்டுக் கொள்கிறேன். அதே போல் ஊடகத்தில் வேலை செய்வோரும் இவருடைய இந்த திறமையை வெளி உலகிற்கு தெரியும்மாறு செய்யுங்கள்.
Place : சின்னார்பாளையம், சங்ககிரி ரோடு, ஈரோடு.
அப்பகுதியில் சென்று கேளுங்கள். அனைவரும் அறிவர். மேலும் தகவல் வேண்டுமானால் அழையுங்கள என் அலைபேசிக்கு 9940789930.
ப. ராஜராஜன்
9940789930

No comments:

Post a Comment