னைவருக்கும் வணக்கம்
நம் குழுவில் நிறைய பேலியோ கட்டுரைகள் எழுதபடுகின்றன. அவற்றை ஆன்லைனில் இல்லாத மக்களுக்கும் கொன்டு செல்லவேண்டும், ஆன்லைனில் இருப்பவர்களுக்கும் டக் என படிக்கும் அளவு ரெபெரன்சாக அவற்றை நூல் வடிவில் கொன்டுவரலாம் என சங்கர் ஜி அட்மின் குழுவில் ஒரு ஆலோசனையை முன்வைத்தார்.
அந்த முயற்சியை அவரே முன்னெடுத்து சொந்தமாக செய்யவும் முன்வந்தார். இதோ அதற்கேற்ப பலமாத கடும் உழைப்புக்கு பின் அவரது பதிப்பகம் மூலம் நான்கு புத்தகங்கள் வெளிவந்துள்ளன.
இந்த நூல்களில் ஒன்றை சங்கர்ஜியே எழுதி எழுத்தாளராகவும் ஆகியுள்ளார். நம் குழுவின் சார்பில் புத்தகம் எழுதும் மூன்றாவது எழுத்தாளர் சங்கர் ஜி என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். அத்துடன் முத்துராமன் குருசாமி அவர்கள் எழுதிய தைராய்டு நூலும் வெளிவந்துள்ளது. அவருக்கும் இதுவே முதல் நூல் என நினைக்கிறேன். அவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
மற்றபடி பதிப்பகம் என்பது தொழிலாக செய்யும் விசயம். நம் குழுவின் சார்பில் அதை செய்வதில் பல சிக்கல்கள் உள்ளன. இதை முழுமுச்சாக தொழிலாக எடுத்து செய்தால் தான் முழு பலன் இருக்கும். நூலை எழுதும் எழுத்தாளர்களுக்கு உரிய ராயலடி பணம் போய்சேரவேண்டும். இப்படி பல புராஷனலான கடமைகள் இதில் உள்ளன. இதனால் இதை சங்கர் ஜி அவர்களே தன் சொந்த முயற்சியில் செய்து குழுவில் வெளியாகும் கட்டுரைகளை எழுத்தாள்ர்களின் அனுமதி பெற்று வெளியிட முன்வந்தார். இது தவிர நம் குழுவிற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. இதன் லாபம், நஷ்டம் முழுக்க சங்கர்ஜிக்கே சொந்தம். பலன் மட்டும் குழுவில் உள்ள உறுப்ப்னர்களாகிய நமக்கு சொந்தம் :-)
அதே போல ரெசிபி நூல்கள் இரண்டு வெளிவந்துள்ளன. நம் ஆரோக்கிய உணவுகள் குழுவில் உள்ள ரெசிபிகள் மட்டுமே இதில் உள்ளன. எழுதியவர் பெயரை குறிப்பிட்டே வெளியிட்டுள்ளார். தன் ரெசிபிகள் அதில் இடம்பெற வேண்டாம் என நினைப்பவர்கள், தனி நூலாக வெளியிடலாம் என நினைப்பவர்கள் விருப்பம் தெரிவித்தால் அதை அகற்றிவிடலாம். இனி வரும் காலங்களில் ரெசிபி எழுதியவர்களின் அனுமதி பெற்றே நூலில் வெளிடும்படி கேட்டுகொள்கிறேன்
மற்றபடி, குழுவில் கட்டுரைகள் எழுதும் எழுத்தாளர்கள் மற்ற பதிப்பகங்களை போலவே இதையும் கருத கேட்டுகொள்கிறோம். சங்கர் ஜி என்னிடம் கூறியது போல் அவரது நோக்கம்
குழுவில் வெளியாகும் முக்கிய கட்டுரைகள் நூல் வடிவில் வரவேண்டும்
ஆன்லைனில் இல்லாத மக்களுக்கும் நூல்கள் போய் சேரவேண்டும்
ஆன்லைனில் இல்லாத மக்களுக்கும் நூல்கள் போய் சேரவேண்டும்
இவையே அவரது பதிப்பகத்தின் நோக்கம்.
பேலியோ பற்றி நூல் எழுதினால் நல்ல விற்பனை இருக்கும் என தெரிந்ததால் குழுவிற்கு தொடர்பற்ற பலர் பேலியோ டயட்டை கடைபிடிக்காமல் பேலியோ நூலகளை எழுதி வருவதாக தெரிந்தது. சங்கர்ஜியின் பதிப்பகம் மூலம் நூல்கள் வெளிவருவதால் அந்த சிக்கல் இல்லை. இதில் உள்ளவை அனைத்தும் நம் குழும உறுப்பினர்களின் படைப்புகள். டயட்டை பின்பற்றி, பேலியோ என்றால் என்ன என தெளிந்தவர்கள் எழுதியவை. தமிழக மக்களுக்கு பேலியோவை இணையம் மூலம் தந்தால் போதும் என இருந்துவிட முடியாது. வெளியே இதை மிகப்பெரும் வணிகமாக்க பலர் தயாராக இருக்கிரார்கள். அதனால் மக்களுக்கு சரியான முறையில் பேலியோவை கொன்டுசெல்ல இம்மாதிரி முயற்சிகள் மிக உறுதுணையாக அமையும். இதற்காக முயற்சி எடுக்கும் சங்கர்ஜிக்கு நம் அனைவரின் நல்வாழ்த்துக்களும் உரித்தாகுக
No comments:
Post a Comment