SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Sunday, 6 December 2015

பரங்கிக்காய் (சர்க்கரைப் பூசணி)பொறியல்

Of an inch to cut the pumpkin into sugar gradually. To cut the onions into cut small pieces. Green chillies to break in two.


என்னென்ன தேவை?

பரங்கிக்காய் (சர்க்கரைப் பூசணி) - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - 2 கொத்து
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/4 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் - 1 சிட்டிகை
சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது? 

* பரங்கிக்காயை (சர்க்கரைப் பூசணி) ஒரு இன்ச் அளவுக்கு சீராக நறுக்கிக் கொள்ளவும்.

* பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாகப் பிளந்து கொள்ளவும்.


* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்ததும், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.


* பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

* அடுத்து நறுக்கி வைத்துள்ள பரங்கிக்காயை போட்டு லேசாக கிளறிவிடவும்.


* இதனுடன் சர்க்கரை, உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து லேசாக கிளறி வேக விடவும்


* பரங்கிக்காய் வெந்தவுடன் தேங்காய் துருவலைச் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

குறிப்பு

1. பரங்கிக்காயில் தண்ணீர் அதிகமாக சேர்த்தால் காய் குழைந்து சுவை மாறிவிடும்.

2. பரங்கிக்காயை அதிகம் கிளறக் கூடாது. 

No comments:

Post a Comment