SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Friday, 25 December 2015

தக்காளிகுருமா

தக்காளி குருமா செய்வோமா?
சுவையான தக்காளி குருமா செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு. இந்த குறிப்பு திருமதி. ரேவதி சண்முகம் அவர்களின் செய்முறை குறிப்பை தழுவியது.
தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 4 – 6
மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் – 1 /2 கப்
கசகசா – 1/2 மேசைக்கரண்டி
பொட்டுக்கடலை – 1 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
அரைக்க
இஞ்சி – ஒரு துண்டு
பூண்டு – 2 பல்
பச்சை மிளகாய் – 3
பட்டை, லவங்கம் – தலா 1
சோம்பு – 1/4 தேக்கரண்டி
மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு
செய்முறை
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
பொட்டுக்கடலை, தேங்காய்த் துருவல், கசகசா ஆகியவற்றை தனியாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,மஞ்சள்தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
வெங்காயம் வதங்கியதும் அரைத்த விழுது, உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ளவும்.
இதனுடன் தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.
பின்னர் அரைத்த தேங்காய் விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும்.
தக்காளி குருமா இட்லி, தோசை ஆகியவற்றுடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.

No comments:

Post a Comment