SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Friday 10 July 2015

"உணவே மருந்து~மருந்தே உணவு"

உணவே மருந்து’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘மருந்தே உணவு’ என்ற இன்றைய நிலையையும் கண்கூடாகப் பார்த்திருப்பீர்கள்.






மனிதன் தனக்குத் தேவையான சரியான உணவுகளைச் சாப்பிடாமல் ஆரோக்கியத்தை அழிக்கும் விஷங்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதினால் தான் நோயாளியாகின்றான். எனவே உணவு முறைகளை மாற்றியவுடன் நோய்கள் எல்லாமே நீங்கிவிடும்.



பழங்கால மனிதன் சுமார் 300 ஆண்டுகள் வாழ்ந்ததாக பைபிள் உள்ளிட்ட பல புத்தகங்கள் மூலம் தெரிய வருகின்றது. மனிதனின் ஆயுள் 300 ஆண்டு. அந்த மனிதன் ஒரு நாள் மட்டும் சமைத்த உணவு
சாப்பிட்டால் அந்த மனிதனின் ஆயுளில் ஒரு நாள் குறையும். எனவே வாழ்நாள் முழுவதும் சமைத்த உணவைச் சாப்பிடும் மனிதன் 150 வருடங்களுக்கு மேல் உயிர் வாழ முடிவதில்லை. சுவாசிக்க சுத்தமான காற்று, குடிக்க சுத்தமான தண்ணீர் கிடைக்காமையால் மேலும் அவனுடைய ஆயுள் குறைகின்றது.



உணவே மருந்து, மருந்தே உணவு என்பது சித்த மருத்துவம். எனவே தான், பெரும்பாலான சித்த மருந்துகள், உணவாக உட்கொள்ளும் படியே கசாயம்,


அடை, புட்டு, பொடி, லேகியம், மணப்பாகு, நெய், எண்ணெய் போன்ற வடிவங்களில் காணப் படுகின்றன. உணவாக பயன்படும் ஒரு பொருளை, குறைந் தளவில் பக்குவப் படுத்தி சாப்பிடும் போது அது மருந் தாகவும், அதே பொருள் அளவுக்கு மிஞ்சி சாப்பிடும் போது நஞ்சாகவும் மாறிவிடுகிறது. ஒரு பொருளின் உள்ளேயே சத்துகுணம் என்னும் மருத்துவ தன்மையும், ராஜ குணம் என்னும் உணவுத்தன்மையும், தாமச குணம் என்னும்  நச்சுத்

தன்மையும் நிரம்பியுள்ளது. ஆகவேதான்,

அனுபவத்தின்படியும் அறிவியல் கருத்துகளின்படியும் உணவை மருந்தாக மாற்றிக் கொள்கிறோம். மருந்து என்பது ஒரு நோயை குணப்படுத்துவதுடன், மீண்டும் வராமல் காக்கும் தன்மையுடனும் அதை உட்கொள்ளும் போது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடாததாகவும், அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளும்படியும் இருக்க வேண்டும். இதுவே மருந்தின் இலக்கணம். ஆனால், நாம் உட்கொள்ளும் பெரும்பாலான மருந்துகள் இவ்வாறு இருப்பதில்லை. கிடைப்பதற்கு அரிதான அல்லது விலை மதிப்புள்ள உணவுகளில் பல்வேறுவகையான ஊட்டச் சத்துகள் நிறைந்துள்ளன. இவற்றை அன்றாடம் சாப்பிட முடியா விட்டாலும், அவ்வப்போதாவது சாப்பிட்டுவந்தால் பல்வேறு வகையான மருத்துவ பலன்களை பெறலாம்.




தமிழர்கள் உணவு பரிமாறும் விதம்


1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது


2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள

இனிப்பு - மிகவும் அருகாமையில்

3,6. நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல்

ஊறுகாய்

5. குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம்


4. அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள்


பல ஆயிரம் ஆண்டுக்கு முன் அறிவியல்: முதலில் பருப்பு மற்றும்

நெய்  ( செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும் பொருட்கள் ),
பிறகு குழம்பு ( ருசியுடன், தன்மையான உணவு குழாயை வருடும் ), பிறகு ரசம் ( இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும் ),      பிறகு மோர் ( வயிறார உண்டபின் உருவாகும் சூட்டைக்குறைக்கும் )..

இது தமிழர்கள் தமது பாரம்பரியமாகவே செய்து வருகிறார்கள்

No comments:

Post a Comment