SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Friday 17 July 2015

கருவளையம் வந்த பின் அவற்றை போக்க

             கருவளையம் வந்த பின் அவற்றை போக்க


  ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பது பழமொழி. அத்தகைய முகத்தை பொலிவாக வைத்துக் கொள்வதில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் குறிப்பாக இளம் வயது பெண்களுக்கு… சொல்லவே வேண்டாம். இந்த முகப்பொலிவை கெடுக்கும் காரணங்களுள் முக்கியமானது ‘கருவளையம்’. ஆண், பெண், சிறுவர், நடுத்தர வயதினர், பெரியவர் ஆகிய அனைவருக்கும் பாகுபாடின்றி நம்மில் 90 சதவீத பேருக்கு இந்த பிரச்சனை உள்ளது.


  இரு கண்களையும் சுற்றி கருநிறத்தில், சுருக்கங்களுடனோ அல்லது சுருக்கங்கள் இல்லாமல் அடர்ந்த கருநிறத்திலோ காணப்படும் நிலை ‘கருவளையம்’ எனப்படும்.

 பெரும்பாலும் ‘கருவளையம்’ கண்களில் சோர்வு உண்டாவதினால் உண்டாகிறது. ‘கருவளையம்;’ அறிகுறியே தவிர நோய் அல்ல. 

 மேற்கண்ட காரணங்களால் உடலில் சூடு அதிகமாவதுடன், கண்களும் எளிதில் சோர்வடைகின்றன. உடல் சூடானது சோர்வடைந்த கண்கள் மூலம் தொடர்ச்சியாக வெளிப்படுத்தப்படுவதால் கண்களை சுற்றி கருவளையம் தோன்றுகிறது.

 கம்ப்யூட்டர் தொழிலில் உள்ள பெரும்பாலானவர்களுக்க இந்த பிரச்சனை உள்ளது. இதற்க முக்கிய காரணம் மேற்கூறிய கண்களின் சோர்வு, சரியான தூக்கமின்மை ஆகியவைகளே ஆகும்.

 “வருமுன் காப்பதே சிறந்தது” என்பதற்கேற்றபடி கண்ணில் கருவளையம் வராமல் தடுக்க பின்வரும் முறைகளை பின்பற்றலாம்.

  கம்ப்யூட்டர் சம்பந்தமான தொழிலில் உள்ளவர்கள் தொடர்ச்சியாக தொழிலில் ஈடுபடாமல் சிறிது நேரம் விட்டுவிட்டு வேலையை தொடரலாம்.

  சரியான தூக்கமின்மையினால் அதற்கேற்ற பரிகாரங்களை செய்ய வேண்டும். இரவு நேர பணியில் ஈடுபடுபவர்கள் கட்டாயமாக பகலில் குறிப்பிட்ட நேரம் தூங்க வேண்டும்.நோய்களுக்கு ஏற்ற மருத்துவம் செய்து கொள்ள வேண்டும்.

 ஆர்மோன்களின் பாதிப்பு நிலைகளை உடன் கண்டுபிடித்து அவற்றிற்கு ஏற்ற மருத்துவம் செய்து கொள்ள வேண்டும்.

‘கருவளையம்’ தோன்ற காரணங்களாக கூறப்படுவது:

1. உடலில் சூடு அதிகமாதல்
2. சரியான அளவு தூக்கமில்லாமலிருத்தல்
3. உடலில் ஏதாவது நோய் தோன்றிய நிலை
4. உடலில் சத்து குறைதல்
5. அதிக அளவு மருந்துகளை உபயோகித்தல்
6. முகப்பொலிவை உண்டாக்க செயற்கை கிரீம்களை உபயோகித்தல்
7. ஆர்மோன் சுரப்பிகளின் கோளாறு 
8. அதிக நேரம் தொலைகாட்சி, நெருப்பு  ஆகியவற்றை பார்த்தல்
9. அதிக நேரம் கம்ப்யூட்டர் சார்ந்த தொழிலில் ஈடுபடுதல்

கருவனையம் வந்த பின் அவற்றை போக்க நாம் செய்ய வேண்டியவை:

1. வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, கண்களின் மீது வைத்து, சிறிது நேரம் கண்களை மூடிக் கொண்டிருக்கவும், இதனால் கண்களில் சூடு குறைந்து குளிர்ச்சி உண்டாவதுடன் கண்ணை சுற்றியுள்ள ‘கருவளையம்’ நீங்கும்.

2. பச்சை உருளைக்கிழங்கை தோல் சீவி எடுத்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அரைத்து எடுத்து கண்களை சுற்றி தடவி அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி வர ‘கருவளையம்’ நீங்கும்.

3. எலுமிச்சம்பழச் சாறுடன் துளசிச் சாறு சம அளவு சேர்த்து கண்களை சுற்றி தடவி வந்தால் நாளடைவில் ‘கருவளையம்’ மறையும்.

4. தேன், வாழைப்பழம், முட்டை வெண்கரு இவற்றை சம அளவு எடுத்து நன்றாக அரைத்து முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து பின் குளித்து வர ‘கருவளையம்’ நீங்குவதோடு மட்டுமல்லாமல் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.

5. விளக்கெண்ணெய் உடன் எண்ணெய் சம அளவு சேர்த்த கண்களை சுற்றி தடவி வர ‘கருவளையம்’ நீங்கும்.’

6. பாலாடையை கண்களை சுற்றி போட்டு வர ‘கருவளையம்’ சீக்கிரத்தில் மாறும்.

7. தயிருடன், கடலை மாவு சேர்த்து கலந்து கண்களை சுற்றி தடவி வரவும்.

8. காரட் சாறு, தக்காளி பழச்சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் தடவி வந்தால் ‘கருவளையம்;’ மாறும்.

9. முல்தானிமட்டி சூரணத்தை தயிருடன் கலந்து அல்லது பன்னீருடன் கலந்து பூசி தினமும் அரை மணி நேரத்திற்கு பிறக குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் ‘கருவளையம்’ மாறும்.

10. பப்பாளி பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, பின் அரைத்து அதனுடன் சிறிது மஞ்சள் சேர்த்து கலந்து பூசி வர ‘கருவளையம்’ தீரும்.

11. பாதாம் எண்ணெய் தனியாக எடுத்து கண்களை சுற்றி பூசி வர விரைவில் ‘கருவளையம்’ மாறும்.

12. எலுமிச்சம் பழச்சாறுடன் தேன் சம அளவு கலந்து ‘கருவளையம்’ உள்ள இடத்தில் பூசிவர விரைவில்  ‘கருவளையம்’ தீரும்.

13. கோழி முட்டை, பழச்சாறு, பாதாம் பருப்பு இவைகளை நன்றாக கலந்து  போல் உபயோகித்து வர ‘கருவளையம்’ நீங்கும். 

14. பச்சைப்பயிறுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து நீர் விட்டு அரைத்து பூசி வர முகப்பரு, கருவளையம் தீரும்.

கண்ணில் ‘கருவளையம்’ உள்ளவர்கள் மேற்கண்ட குறிப்புகளில் ஏதேனும் ஒன்றை முறையாக உபயோகித்து வருவதுடன், அதிகளவு தண்ணீர் குடித்தல், வாரம் ஒரு முறையாவது எண்ணெய் முழுக்கை தவறாது எடுத்துக் கொள்ளல் ஆகியவற்றையும் பின்பற்றி வந்தால் ‘கருவளையம்’ முழுமையாக குணமடைந்து முகப்பொலிவை பெறலாம்.

No comments:

Post a Comment