SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Monday, 17 August 2015

உடல் துர்நாற்றத்தினை போக்குவது எப்படி??

Sweating
வியர்வை என்பது அனைவருக்கும் பொதுவான ஒரு விஷயம் தான். நம் உடல் வெப்பநிலையை சீராக இருக்க வைப்பதற்காக வியர்வை சுரக்கிறது. இருந்தாலும், பல பேருக்கு அதிக அளவில் வியர்த்துக் கொட்டும். எவ்வளவு தான் குளிரடித்தாலும், அவர்களுக்கு வியர்வை வெளியேறிக் கொண்டே இருக்கும். சிலருக்கு ஹார்மோன் குறைபாடுகள், அதிகமாக உணர்ச்சிவசப்படுதல், காரமான உணவுகள், உடற்பயிற்சிகள், மன அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்களால் அதிக வியர்வை வரும்.
அளவுக்கு அதிகமாக வியர்க்கும் நிலைக்கு ஆங்கிலத்தில் ’ஹைப்பர்ஹிட்ரோசிஸ்’ என்று பெயர். அதிக வியர்வையால் உடம்பிலிருந்து மோசமான வாசனை வெளியேறத் தொடங்கும். சிலருக்கு பரம்பரை பரம்பரையாக இந்தப் பிரச்சனை தொடர்ந்து வரும்.
நமது இன்றைய ஹெல்த் டிப்ஸ் பகுதியில் உடல் துர்நாற்றத்தை போக்குவதற்கான வழிமுறைகளைக் காணலாம்!!!
* வியர்வை துர்நாற்றத்தைப் போக்குவதற்கு சிறந்த வழியென்றால், தினமும் காலையிலும் மாலையிலும் குளிப்பது நல்லது. துர்நாற்றம் வரும் இடங்களை சோப்பு பயன்படுத்தி, நன்கு சுத்தம் செய்ய வேண்டும். இதனால் வியர்க்கும் போது வெளிவரும் நீர் பாக்டீரியாவுடன் சேர்ந்து ஏற்படுத்தும் நாற்றத்தைப் போக்கலாம். இதனால் உடம்பும் சுத்தமாகின்றது.
* குளித்து முடித்த பின், ஒரு டேபிள் ஸ்பூன் தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து, இறுதியில் உடலில் ஊற்றிக் கொண்டால், உடல் துர்நாற்றத்தைத் தடுக்கலாம்.
* குளிக்கும் போது, வெள்ளை வினிகரை நீரில் கலந்து, அதனைக் கொண்டு அக்குளை கழுவினால், உடல் துர்நாற்றத்தை தடுக்கலாம்.
* குளிக்கும் நீரில், சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்துக் கொண்டு குளித்தால், உடலில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தை தவிர்க்கலாம்.
ஆப்பிள் சீடர் வினிகரை குளிக்கும் போது, இறுதியில் ஒரு கப் நீரில் கலந்து, அக்குளைக் கழுவினால், அவை சருமத்தில் உள்ள பாக்டீரியாவை அழிப்பதோடு, அதிகப்படியான வியர்வையையும் தடுக்கும்.
குளிக்கும் நீரில் சிறிது புதினா இலையை சேர்த்து ஊற வைத்து, குளித்து வந்தால், உடலில் உள்ள கிருமிகள் நீங்கி, உடல் புத்துணர்ச்சியுடனும், துர்நாற்றமின்றியும் இருக்கும்.
* குளித்த பின், சிறிது பேக்கிங் சோடாவை அக்குளில் தெளித்துக் கொண்டால், வியர்வை நாற்றமானது வெளிவராமல் இருக்கும்.
* தக்காளி சாறும் உடல் துர்நாற்றத்தை தடுக்கும். அதற்கு ஒரு கப் தக்காளி சாற்றினை குளிக்கும் தொட்டியில் ஊற்றி, அதில் நீரை நிரப்பி, அதனுள் 15 நிமிடம் உட்கார்ந்தால், வியர்வை நாற்றமானது வெளிவராமல் இருக்கும்.
சுத்தமான பருத்தி உடைகளை அணிவதன் மூலமும் வியர்வை நாற்றத்தை விரட்டியடிக்கலாம். கசகசவென்று இருக்கும் மற்ற உடைகளைத் தவிர்த்தால், அதிக வியர்வையையும் தவிர்க்கலாம்.
எலுமிச்சையைப் பாதியாக வெட்டி, அதை அக்குள் பகுதிகளில் அரக்கித் தேய்த்து, அதன் பிறகு குளிக்க வேண்டும். இதனால் எரிச்சல் ஏதாவது ஏற்பட்டால், எலுமிச்சையைத் தவிர்த்து விடுங்கள்.
வியர்வையைத் தவிர்ப்பதற்கு வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்தலாம். பலவிதமான பெர்ம்யூங்கள் மற்றும் டியோடரண்ட்டுகள் தற்போது கடைகளில் கிடைக்கின்றன. சிலருக்கு இவை அலர்ஜியை ஏற்படுத்தி விடலாம். அவர்கள் இவற்றைத் தவிர்த்து விடுவது நல்லது.
உடம்பில் எடை அதிகம் இருந்தாலே அளவுக்கு அதிகமான வியர்வை வெளிவரும். எனவே உடல் எடையைக் குறைத்தால் ஓரளவு பலன் கிடைக்கும். மேலும், காரமான உணவுகளைத் தவிர்த்து, நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளைச் சேர்த்துக் கொள்வதும் அவசியம்.
தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் அருகம்புல் சாற்றை பருகி வந்தால், அதில் உள்ள குளோரோஃபில் வியர்வை நாற்றத்தைப் போக்கிவிடும்.
8 டம்ளர் தண்ணீரில், ஒரு டீஸ்பூன் ஹைட்ரஜன் பெராக்ஸைடைக் கலந்து, ஒரு நாளைக்கு பல முறை துர்நாற்றம் வரும் இடத்தில் ஊற்றிக் கழுவி வந்தால், வியர்வையானது கட்டுப்படுவதோடு, துர்நாற்றமும் நீங்கும்.

No comments:

Post a Comment