மரக்கறிகள் (List of Vegetables)
உலகில் விளையும் மரக்கறி வகைகளின் பட்டியல் இங்கே இடப்பட்டுள்ளது. இவற்றில் சகல மரக்கறிகளுக்கான தமிழ் பெயர்கள் இல்லை என்றே நினைக்கின்றேன்.
இருப்பினும் இங்கே இடப்பட்டிருக்கும் மரக்கறிகளின் ஆங்கிலப் பெயர்களை சொடுக்கி அப்பெயருக்குறிய மரக்கறிகளின் நிழல் படங்களைப் பார்த்து அறிந்துக்கொள்ளலாம்.
கவனிக்கவும்
இங்கே இடப்பட்டிருக்கும் மரக்கறிகள் அனைத்திற்கும் இணையானத் தமிழ் பெயர்கள் இல்லை அல்லது எமக்கு தெரியாது என்பதை அறியத் தருகின்றோம். அதேவேளை அனைத்து மரக்கறிகளுக்குமான தமிழ் பெயர்கள் இருக்கிறதா என்றால் நிச்சயம் இருக்காது என்றே கூறவேண்டும். காரணம் வெவ்வேறு நாடுகளில் விளையும் காய்கறிகளூக்கெல்லாம் தமிழில் பெயரிடப்பட்டிருக்காது எனும் நம்பிக்கைத்தான்.
ஆனால் அன்றாடம் தமிழர் உணவில் பயன்படும் மரக்கறி வகைகளின் பெயர்கள், தமிழில் சூட்டப்பட்டப் பெயர்கள், தமிழரான எமக்கே தெரியவிட்டால் வெட்கப்படவேண்டியவர்களில் நானும் ஒருவன் தான்.
இதுப்போன்ற சமயங்களில் தான் இராம்கி ஐயா போன்றோரின் தமிழ் பணியின் அவசியம் புரிகின்றது. இங்கே இந்த மரக்கறிகள் பட்டியலில் இடப்பட்டிருக்கும் அக்காரக்கிழங்கு, குருக்கிழங்கு போன்ற பெயர்சொற்கள் அவரின் பதிவூடாக அறிந்துக்கொண்டது தான்.
இவற்றையும் பார்க்கலாம்.
பழங்கள்
மரக்கறிகள்
தாணியங்கள்
கிழங்கு வகைகள்
நன்றி. காய்கறி வகைகள், காய்கறிகள்அன்புடன் அருண் Tamil Vegetables, Glossary of Vegetables in Tamil Download As PDF
இருப்பினும் இங்கே இடப்பட்டிருக்கும் மரக்கறிகளின் ஆங்கிலப் பெயர்களை சொடுக்கி அப்பெயருக்குறிய மரக்கறிகளின் நிழல் படங்களைப் பார்த்து அறிந்துக்கொள்ளலாம்.
இல | ஆங்கிலம் | தமிழ் | |
1 | Alfalfa Sprouts | அல்பல்பா முளைக்கீரை | |
2 | Artichoke | ஆர்றிச்சோக் | |
3 | Arugula | அருகுலாக் கீரை | |
4 | Asparagus | தண்ணீர்விட்டான் கிழங்கு | |
5 | Aubergines/Eggplant | கத்தரிக்காய் | |
6 | avocado | யாணைக்கொய்யா | |
7 | Bamboo Shoots | மூங்கில் குருத்து | |
8 | Bean Sprouts | அவரை முளை | |
9 | Beet Greens | அக்காரக்கீரை | |
10 | Beetroot | அக்காரக்கிழங்கு/ சர்க்கரைக் கிழங்கு | |
11 | Bell Peppers/ Capsicum | குடைமிளகாய் | |
12 | Bitter Gourd | பாகற்காய்/ பாவக்காய் | |
13 | Bitter Cucumber | பாகற்காய் பெரிது | |
14 | Bok Choi/ Chinese Cabbage | பொக்ச்சோய் | |
15 | Borlotti Beans | சிகப்பு அவரை | |
16 | Bottle Gourd | சுரைக்காய் | |
17 | bread fruit | கொட்டைப்பலா/ ஈரப்பலா | |
18 | Brinjal | கத்தரிக்காய்/வழுதுணங்காய் | |
19 | Brocoli | (பச்சை) பூக்கோசு | |
20 | Broccoli Rape/ Rapini | கோசுக்கீரை | |
21 | Brussels Sprouts | களைக்கோசு | |
22 | Butter Head Lettuce | ஒரு விதக் கோசுக்கீரை | |
23 | Cabbage | முட்டைக்கோசு | |
24 | Caigua | கைகுவா | |
25 | Carrot | குருக்கிழங்கு | |
26 | Cassava/ Tapioca | மரவள்ளிக் கிழங்கு | |
27 | Cauliflower | வெண்பூக்கோசு/ கவிப்பூ | |
28 | Celery | சீவரிக்கீரை | |
29 | Celtuce | ஒரு விதத் தண்டுக்கீரை | |
30 | Ceylon Spinach | சாரணைக்கீரை | |
31 | Chayote | சவ்சவுக்காய் | |
32 | Cherry Tomatoes | குருந்தக்காளி | |
33 | Cilantro/ Coriander | கொத்தமல்லி | |
34 | Cluster Beans | கொத்தவரை | |
35 | Collards | சீமை பரட்டைக்கீரை | |
36 | Cress | தளிர்பயறு | |
37 | Cucumber | வெள்ளிரிக்காய் | |
38 | Daikon radish | வெண் முள்ளங்கி | |
39 | Endive | ஒரு வகை கோசு (சலாது) | |
40 | Fava bean/ Broad bean | அவரை (போஞ்சி) | |
41 | Fiddlehead | மீனாக்கொழுந்து | |
42 | Florence Fennel | ஒரு வகைச் சீமைக்கீரை | |
43 | Flowering Cabbage | (மலர்ப்போன்ற) கோசு | |
44 | French bean | பிரஞ்சு அவரை (போஞ்சுக்காய்) | |
45 | Golden Nuggest Squash | ஒருவகை சிறியப் பூசணி | |
46 | Green Onions/ Spring Onoins | வெங்காயத்தாள்(பூ | |
47 | Humberg parsley | (சிறியவகை) வெண்முள்ளங்கி | |
48 | Haricot Beans | மெல்லிய அவரை | |
49 | Drum stick | முருக்கங்காய்/ முருங்கைக்காய் | |
50 | Ironbark Pumpkin | கற்பூசணி | |
Kai-Lan | |||
52 | Kale | பரட்டைக்கீரை | |
53 | Kohlrabi | நோக்கோல் | |
54 | Kohlrabi Purple | நோக்கோல் (ஊதா) | |
55 | Kohila | கோகிலத்தண்டு | |
56 | Lady's Finger/ Okra | வெண்டைக்காய்/ வெண்டிக்காய் | |
57 | Leeks | லீக்ஸ் | |
58 | Lettuce | இலைக்கோசு | |
59 | Lettuce Red | இலைக்கோசு (சிகப்பு) | |
60 | Lotus root | தாமரைக்கிழங்கு | |
61 | Marrow | (மிகப்பெரிய வகையான) பூசணி | |
62 | Minikin Pumpkin | வட்டுப்பூசணி | |
63 | Mint | புதினா | |
64 | Mizuna | மிதுனாக்கீரை | |
65 | Pak Choi | பச்சோய் | |
66 | Parsley | வேர்க்கோசு | |
67 | Pasnips | ஒரு வகை முள்ளங்கி | |
68 | Parwal | ஒரு வகை சிறியக்காய் | |
69 | Plantain | கறி வாழை | |
70 | Potato | உருளைக்கிழங்கு | |
71 | Pumpkin | பூசணிக்காய்/ பறங்கிக்காய்/வட்டக்காய் | |
72 | Radicchio/ Red chicory | செங்கோசு | |
73 | Red Carrot | செம்முள்ளங்கி | |
74 | Radish | முள்ளங்கி | |
75 | Rainbow Chard | வானவில் கோசுக்கீரை | |
76 | Ridge Gourd/Luffa | பிசுக்கங்காய்/ பீர்க்கங்காய் | |
77 | Ribbed Courd | பிசுக்கங்காய்/ பீர்க்கங்காய் | |
78 | Rhubarb | ஒரு வகை பெரிய இலைக்கீரை | |
79 | Romanesco Broccoli | கடற்சிப்பிக்கோசு | |
80 | Samphire | ஒருவகை தண்டுக்கீரை | |
81 | Savoy Cabbage | சாவோய் பூக்கோசு | |
82 | Shallot | சிறிய வெங்காயம் | |
83 | Snake bean/ Long bean | பயத்தங்காய் | |
84 | Snake Gourd | புடலங்காய் | |
85 | Snow Pea | ஒரு வகை அவரை | |
86 | Solanum/ Tinda | வட்டுக்காய் | |
87 | Solanum torvom/ Pea aubergines | சுண்டைக்காய் | |
88 | Squash | சுரைக்காய் | |
89 | Spaghetti Squash | (இசுப்பெகடி) பூசணி | |
90 | Spinach | கீரை | |
91 | Sweet Potato | வற்றாளை/ சர்க்கரை வள்ளி | |
92 | Banana Flower | வாழைப்பொத்தி/ வாழைப்பூ | |
93 | Tatsoi | ரற்சோய் | |
94 | Tomato | தக்காளி | |
95 | Tomato Cherry | குருந்தக்காளி | |
96 | Tomato Hybrid | சீமைத்தக்காளி | |
97 | Turnip | ஒரு வகை முள்ளங்கி | |
98 | Water Chestnut | ஒருவகைக் காய் | |
99 | Water Spinach/ Kang Kung | கங்குங் கீரை | |
100 | Wax bean | மஞ்சல் அவரை/ மஞ்சல் போஞ்சி) | |
101 | West Indian Gherkin | ஒரு வகை மேற்கிந்தியக் காய் | |
102 | White Bitter gourd | வெள்ளைப் பாகற்காய் | |
103 | White Eggplant | வெள்ளைக் கத்தரி | |
104 | White globe radish | வெண்ணுருண்டை முள்ளங்கி | |
105 | Zucchini | சீமைக்கூடாரக்காய் |
கவனிக்கவும்
இங்கே இடப்பட்டிருக்கும் மரக்கறிகள் அனைத்திற்கும் இணையானத் தமிழ் பெயர்கள் இல்லை அல்லது எமக்கு தெரியாது என்பதை அறியத் தருகின்றோம். அதேவேளை அனைத்து மரக்கறிகளுக்குமான தமிழ் பெயர்கள் இருக்கிறதா என்றால் நிச்சயம் இருக்காது என்றே கூறவேண்டும். காரணம் வெவ்வேறு நாடுகளில் விளையும் காய்கறிகளூக்கெல்லாம் தமிழில் பெயரிடப்பட்டிருக்காது எனும் நம்பிக்கைத்தான்.
ஆனால் அன்றாடம் தமிழர் உணவில் பயன்படும் மரக்கறி வகைகளின் பெயர்கள், தமிழில் சூட்டப்பட்டப் பெயர்கள், தமிழரான எமக்கே தெரியவிட்டால் வெட்கப்படவேண்டியவர்களில் நானும் ஒருவன் தான்.
இதுப்போன்ற சமயங்களில் தான் இராம்கி ஐயா போன்றோரின் தமிழ் பணியின் அவசியம் புரிகின்றது. இங்கே இந்த மரக்கறிகள் பட்டியலில் இடப்பட்டிருக்கும் அக்காரக்கிழங்கு, குருக்கிழங்கு போன்ற பெயர்சொற்கள் அவரின் பதிவூடாக அறிந்துக்கொண்டது தான்.
இவற்றையும் பார்க்கலாம்.
பழங்கள்
மரக்கறிகள்
தாணியங்கள்
கிழங்கு வகைகள்
நன்றி. காய்கறி வகைகள், காய்கறிகள்அன்புடன் அருண் Tamil Vegetables, Glossary of Vegetables in Tamil Download As PDF
13 comments:
வாழ்த்துக்களுக்கு நன்றி.
Jeyapratha
உங்கள் கருத்துக்கு நன்றி
இளநீல எழுத்துக்கள் வாசிப்பது கடினம் என்று எழுதியிருந்தீர்கள். மாற்ற முயற்சிக்கின்றேன்.
நன்றி சிவகுமார்
//this is very useful to me, because i learned english grammar easily.//
நன்றி நண்பரே
As your NAME represents the LIGHT PROVIDER {SUN} YOU too throw LIGHT to people who are in DARK.
Bow my head & salute
GOD BLESS YOU & YOUR PEOPLE WITH THE VERY BEST OF EVERYTHING IN THIS ALREADY BLESSED LIFE
ALANKARA YES BENEDICT
Post a Comment