SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Saturday, 1 August 2015

கடன் கழுத்தை நெறிக்கிறதா? உங்களை தப்புவிக்க உதவும் ஸ்லோகம் ...

Feb 12, 2011
நாம் இப்போது இருக்கும் நிலையில், கடன் இல்லாத மனிதர்களே இல்லை யென்று கூறலாம். நல்ல உத்தியோகத்தில் இருக்கும் நபர்களுக்கும், வீட்டுக் கடன், வாகன கடன், கடன் அட்டை என பல ரூபங்களில்.. ஒரு சிலருக்கு - கந்து வட்டி ரேஞ்சுக்கு ...

நமக்கு வரும் கேள்விகளில்  - நிறைய கடன் தொல்லைகளில் இருந்து தப்பிக்க , வழி கூறுங்கள் சார் என்று.. நாம் ஏற்கனவே ஒரு சில கட்டுரைகள் வெளியிட்டிருந்தாலும், நமது வாசக அன்பர்களுக்காக இந்த தகவல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..

எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் , ஏழரை சனி நடந்து கொண்டு இருந்த போது , தனது முப்பது வருட சேமிப்பை - சுமார் 50 லட்சங்களை, தனி தொழில் தொடங்குகிறேன் என்று ஆரம்பித்து , அத்தனையும் தொலைத்தார்.. அவரது வாழ்க்கை சுமார் முப்பது வருடம் பின் தங்கி விட்டது.. அதற்கு முன்பு வரை , தெய்வ நம்பிக்கை அவருக்கு அதிகம் கிடையாது. அவரது ஜாதகத்தை நன்றாக ஆராய்ந்து , நாம் கூறிய பரிகாரங்களை முறைப்படி செய்து,  இந்த ஸ்லோகத்தை மனமுருக , 108 முறை தினமும் துதித்து , வேண்டி - இன்று அவரது ஒரு நிலத்தை விற்றதின் மூலம் , முழுவதுமாக மீண்டு விட்டார்.

இது முழுக்க, முழுக்க - உங்களை கடன் தொல்லைகளில் இருந்து தப்புவிக்க உதவும் ஸ்லோகம். கீழே " யூ ' டியூப் இணைப்பையும் கொடுத்துள்ளேன்..  உச்சரிப்பு தெளிவாக இருக்கிறதா என்று உங்களுக்கு சரி பார்க்க உதவும்

கடன் உங்களுக்கு வரவே வராமல் தடுக்க , புதன் கிழமைகளில் , புதன் ஹோரைகளில் ( காலை : ஆறு மணியில் இருந்து ஏழு மணி வரை ; இரவு எட்டு மணியில் இருந்து 9 மணி வரை ) இந்த ஸ்லோகத்தை கூறி வழிபாடு செய்து வரவும்..


ருண விமோசன - நரசிம்ஹா ஸ்தோத்திரம்.. 

தேவதாகார்ய ஸித்யர்த்தம் ஸ்பாஸ்தம்ப ஸமுத்பவம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே          1.

லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வரதாயகம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே          2.

ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ரப்ஜாயுத தாரிணம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே          3.

ஸ்மரணாத் ஸர்வ பாபக்நம் கத்ரூஜ விஷநாசநம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே          4.

ஸிம்ஹநாதேன மஹதா திக்தந்தி பயநாசநம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே          5.

ப்ரஹ்லாத வரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரிணம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே          6.

க்ரூரக்ரஹை: பீடிதாநாம் பக்தாநா மபயப்ரதம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே           7.

வேதவேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதி வந்திதம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே           8.

ய இதம் படதே நித்யம் ருணவிமோசந ஸம்ஜ்ஞிதம்
அந்ருணீ ஜாயதே ஸ்த்யோ தநம் சீக்ரமவாப்நுயாத்            9.



வாழ்க வளமுடன்..!


Read more: http://www.livingextra.com/2011/02/blog-post_12.html#ixzz3hdUqw5nA

No comments:

Post a Comment