SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Thursday, 13 August 2015

கல்விக்கட(ன்)ஐ திருப்பிச்செலுத்தாத மாணவர்களுக்கு வங்கிகள் வைக்கும் செக்! – அபாயத் தகவல்

கல்விக்கட(ன்)ஐ திருப்பிச்செலுத்தாத மாணவர்களுக்கு வங்கிகள் வைக்கும் செக்! – அபாயத் தகவல்

கல்விக்கட(ன்)ஐ திருப்பிச்செலுத்தாத மாணவர்களுக்கு வங்கிகள் வைக்கும் செக்! – அபாயத் தகவல்
பெற்ற‍வர்களால் தங்களது கல்விக்கு பணம் செலவழிக்க‍ முடியாத இக்கட்டான நேரத்தில்
மாணவர்கள்  தங்களது கல்விக்காக வங்கியில் “ கல்விக் கடன் கேட்டுப் பெறுகின்றனர், அப்ப‍டி கல்விக்கடன் பெற்ற மாணவர்கள் அதை திரும்பச் செலுத்தாமல் இருந் தால் அவர்களது வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு கடன் கிடைக்காம ல் போய்விடும் அபாயம் உண்டு. ஆம் படித்து முடித்து வேலைக்குச் சேர்ந்த முதல் ஆறு மாதத்திலிருந்து கல்விக் கடனை திருப்பிச் செலுத்த ஆரம்பிக்க வேண்டும் என்ற அரசாணை இருக்கிறது.
வேலைக்கு சேர்ந்த அன்றிலிருந்து மூன்று மாதங்களுக் குள் கல்விக் கடனை திரும்ப செலுத்த‍ ஆரம்பிக்காவிட்டால், அது வாராக் கடன் பட்டி யலில் சேர்க்க‍ப்படும் இந்த கல்விக் கடன் வாராக் கடனாக மாறும்போது, கடன்பெற்ற மாணவர்கள் குறித்த விவரங்களை வங்கிகளானது சிபில் அமைப்புக் கு தந்துவிடும். ஒருவரின் பெயர் சிபிலில் பதிவாகிவிட்டால், பிறகு அவரால் எந்த வங்கியி லும் கடன் பெற முடியாத பரிதாப நிலைமைக்கு அவர் தள்ள‍ப்படுவார்,
மேலும் மாணவர்கள் வாங்கிய கடனை வட்டியுடன் முழுவதுமாக சம்பந் தப்பட்ட‍ வங்கியில் செலுத்தி கடன் கணக்கை முடித்தால்தான் சிபிலில் இருந்து வெளியேவர முடியும். இந்த உண்மை தெரி யாமலே சிலமாணவர்கள் தாங்கள் வாங்கிய கல்வி க்கடனை திருப்பிச் செலுத்தா மல் மிகுந்த அலட்சிய மனப்பான்மையுடன்இருக்கின்றார்கள். இதுதவறான செயல். மாணவர்கள் தாங்கள் வாங்கிய கல்விக் கடனை உரிய நேரத்தில் வங்கிக்கு திருப்பிச் செலுத்தி கணக்கை முடித்தால், எதிர்காலத் தில் ஏதேனும் தொழில் தொடங்க கடன் கேட்டோ அல்ல‍து வேறு மாதிரியான கடன் கேட்டோ வங்கியை அணுகும் போது, அந்த வங்கிகள் உங்களுக்கு முன்னு ரிமை அளித்து, கடன் விரைந்து கிடைக்க‍ வழி வகை செய்யும் என்பது உண்மை.

No comments:

Post a Comment