SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Sunday, 2 August 2015

பாட்டி வைத்தியம்!

 Best Blogger Tips





 பாட்டி வைத்தியம்!

புற்று நோயைக்கூட வர விடாம தடுக்கற அருமருந்து பூண்டுஅஞ்சாறு பச்சைப்பூண்டு பல்லை ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டாலே போதும்.. வயித்துல இருக்கறகுடல் புழுக்கள் அழியும்இதய நோய்க்காரங்களுக்கு பூண்டு ரொம்ப ரொம்பநல்லதுங்கறது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லைஅதே போலகர்ப்பிணிப்பொண்ணுங்களும் கர்ப்பமான முதல் மூணு மாசம் தவிர்த்துபிறகு தினமும்பூண்டு சாப்பிடணும்பூண்டை அப்படியே சாப்பிடப் பிடிக்காதவங்க அதை ரசம்வெச்சு சாப்பிடலாம்.
சரி... பூண்டு ரசம் செய்யறது எப்படி?
ஒரு முழு பூண்டைத் தோலுரிச்சுதேவையான அளவு புளித்தண்ணியில வேகப்போடுங்கபிறகு அதை நல்லா மசிச்சு விடுங்கஅப்புறம்காய்ஞ்ச மிளகாய் ஆறு,ஒரு டேபிள் ஸ்பூன் தனியாஒரு டீஸ்பூன் மிளகுசின்னத் துண்டு பெருங்காயம்..இது எல்லாத்தையும் நெய்யில வறுத்துமிக்ஸியில கரகரப்பா பொடிச்சு,வெந்துக்கிட்டிருக்கற ரசத்துல போடுங்கதேவையான உப்பும் போடணும்.
வெந்த துவரம்பருப்பை ஒரு கரண்டியளவு எடுத்துஅரை டம்ளர் தண்ணியிலகரைச்சுரசத்துல ஊத்திநுரைச்சு வந்ததும் இறக்கிட வேண்டியதுதான்.தேவைப்பட்டாஒரு தக்காளியை பொடியா நறுக்கிப் போடலாம்ஒருடேபிள்ஸ்பூன் நெய்யில ஒரு டீஸ்பூன் கடுகுசீரகம் தாளிச்சுரசத்துல கொட்டி,கைப்பிடியளவு கொத்துமல்லித்தழையை பொடியா நறுக்கிரசத்துல சேர்த்தாவாசனை எட்டூரைக் கூட்டும்.

No comments:

Post a Comment