SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Thursday 4 February 2016



1

சுவை மிகுந்த வெஜிடபிள் பிரியாணி : நீங்களும் தயார் பண்ணலாமே !!

  • Untitled-1அரிசி – 2 கப் (அரை மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்)
  • வெங்காயம் – 2
  • தக்காளி – 2
  • பச்சை மிளகாய் – 2
  • புதினா, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
  • இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
  • நறுக்கிய கேரட், பீன்ஸ், பட்டாணி – ஒரு கப்
  • மிளகாய்த் தூள் – காரத்திற்கு ஏற்ப
  • மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
  • தேங்காய்ப் பால் – 3 3/4 கப்
  • நெய் – ஒரு தேக்கரண்டி
  • முந்திரி – 10
  • தாளிக்க :
  • எண்ணெய்
  • பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, ஏலக்காய்
வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் தாளிக்க கொடுத்த பொருட்களை சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
அதனுடன் தக்காளி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
பின்னர் கேரட், பீன்ஸ், பட்டாணி சேர்த்து வதக்கவும்.
வதக்கியவற்றுடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.
அதன் பிறகு புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
எல்லாம் சேர்ந்து வதங்கியதும் அதில் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து சீராக பிரட்டவும்.
பிறகு ரைஸ் குக்கரில் தேங்காய் பால், பிரட்டி வைத்துள்ள அரிசி சேர்த்து வேக விடவும்.
வெந்ததும் முந்திரியை நெய்யில் வறுத்து அதில் சேர்த்து கிளறவும்.
சுவையான வெஜிடபுள் பிரியாணி தயார்.

தேங்காய் சாதம் செய்வது எப்படி ???

  • Untitled-1
  • தேங்காய் – ஒன்று (துருவிக் கொள்ளவும்)
  • வடித்த சாதம் – ஒரு கப் (சிறிது உப்பு போட்டு வடித்து கொள்ளவும் )
  • உப்பு – தேவையான அளவு
  • தாளிக்க :
  • தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி
  • காய்ந்த மிளகாய் – 5
  • கடுகு
  • உளுத்தம் பருப்பு
  • கடலை பருப்பு
  • கறிவேப்பிலை
வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.
அதில் துருவிய தேங்காய் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு அதில் வடித்த சாதத்தை கொட்டி நன்கு கிளறி இறக்கவும்.
சுவையான தேங்காய் சாதம் தயார்.

3

செட்டிநாட்டு சுண்டக்காய் வத்த குழம்பு !

Untitled-1தேவையான பொருட்கள்:
தேவையானவை
வெந்தயம், சோம்பு, சீரகம், கடுகு, மஞ்சள்தூள், தனியா தூள், தலா 1 டீஸ்பூன்;
பூண்டு, சாம்பார் வெங்காயம் – தலா 10
வர மிளகாய் – 4
மிளகாய்த்தூள் – காரத்திற்கேற்ப (~~ 2 டீஸ்பூன்)
கறிவேப்பிலை
புளிக்கரைசல் – எலுமிச்சை அளவு
நெய் – சிறிதளவு ந-எண்ணெய், காய்ந்த சுண்டைக்காய் (வத்தல்)
தயார் செய்யும் முறை:
செய்முறை
சுண்டைக்காயை சிறிது நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.
நல்லஎண்ணெய் விட்டு, காய்ந்த பிறகு, கடுகு, வெந்தயம், சோம்பு, சீரகம், பூண்டு, சாம்பார் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கி, புளிக்கரைசல், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
குழம்பு கெட்டியாகி எண்ணெய் மேலக மிதந்து வந்ததும் இறக்கவும். பிறகு வறுத்த சுண்டை வத்தலை போட்டுக் கலக்கவும்.

4

சுவைத்து பாருங்க செட்டி நாட்டு மீன் குழம்பு !

meen kulampu

தேவையான பொருட்கள்:
மீன் – 10 துண்டுகள்
தக்காளி – 5 சிறியது
சின்ன வெங்காயம் – 15-20 (பொடியாக நறுக்கியது)
பூண்டு – 10-15 பற்கள்
கறிவேப்பிலை – சிறிது
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
சாம்பார் பொடி-1 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது
புளி – 1 எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)
தாளிக்க:
நல்லெண்ணெய்  – 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு – சிறிதளவு
சீரகம் – சிறிதளவு
வெந்தயம் – சிறிதளவு
செய்முறை:
முதலில் மீன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி, 5 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து, அதில்  பின் அதில் நல்லெண்ணெய்  ஊற்றி சோம்பு,சீரகம்,வெந்தயம்,கறிவேப்பிலையை சேர்த்து வதக்கி பின் பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்கி, பின் சீரகப் பொடி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
பிறகு அதில்  தக்காளியை சேர்த்து, 8-10 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.
அடுத்து, அதில் மிளகாய் தூள்,சாம்பார் பொடி சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி,புளிச்சாறு சேர்த்து 15 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
பின் அதில் மீன் துண்டுகளை சேர்த்து, குறைவான தீயில் மூடி வைத்து 10 நிமிடம் மீனை வேக வைக்க வேண்டும்.
மீனானது நன்கு வெந்ததும்,  கொதிக்க விட்டு இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், சுவையான செட்டிநாடு மீன் குழம்பு  ரெடி!

5

செட்டி நாட்டு முட்டைக்குழம்பு

eggமுட்டை குழம்பானது பல ஸ்டைலில் சமைக்கப்படும். இங்கு அதில் ஒன்றான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம்.

இந்த ரெசிபி செய்வது மிகவும் ஈஸி. பேச்சுலர்கள் கூட முயற்சிக்கலாம். ச
ரி, இப்போது அந்த செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
முட்டை – 3
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் தாளிப்பதற்கு…
பட்டை – 1/2 இன்ச்
கறிவேப்பிலை – சிறிது
கிராம்பு – 1 அரைப்பதற்கு…
துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் – 2
பூண்டு – 4-5 பற்கள்
இஞ்சி – 1/2 இன்ச்
மல்லி – 1/2 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்

செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் முட்டைகளைப் போட்டு, வேக வைத்து, முட்டையின் ஓட்டை நீக்கிவிட்டு, பின் அதனை நீளவாக்கில் இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரைக்க கொடுத்த அனைத்து பொருட்களையும் போட்டு லேசாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கறிவேப்பிலை மற்றும் கிராம்பு சேர்த்து தாளித்து, பின் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து கிளறி, 3-4 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும். பின் அதில் 1/2-1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு. கரம் மசாலா மற்றும் வேக வைத்துள்ள முட்டைகளை சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கினால், சுவையான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு ரெடி!!!
6


அசைவ உணவு: சிலோன் சிக்கன் பிரியாணி

puriyaani
தேவையான பொருட்கள்..
பாஸ்மதி ரைஸ்…..4 கப்.
நெய்……தேவைக்கேற்ப..
கருவாப்பட்டை..
ஏலக்காய்..
கஜு
முந்திரி வற்றல்..
மஞ்சள்தூள் சிறிதளவு..
தயிர்…..2 மே.க
சிக்கின் 5 லெக் பீஸ்..
கறி பவுடர்….3 மே.கரண்டி..
உப்பு…..(தேவைக்கேற்ப)
வெங்காயம்….பெரியது 1 (நறுக்கி வைத்துக்கொள்ளவும்)
கருவேப்பிலை.
ரம்பை 3,4 துண்டுகள்..
பெருஞ்சீரகம்…1 தே.கரண்டி.
கடுகு……அரை தே.க
இஞ்சி விழுது…2.மே.க
பூண்டு விழுது…..2மே.க
தக்காளி….3 (பெரியது)


செய்முறை…
முதலில் சுத்தமாக்கிய சிக்கினை ஓரளவு பெரிய துண்டுகளாக்கி வைத்துக்கொண்டு.அதனுடன் உப்பு, கறிப்புவடர் ,இஞ்சி,பூண்டு விழுது ஆகியவற்றைச் சேர்த்து 15 நிமிடம் ஊறவைக்கவேண்டும்.
ஒரு சோஸ்பானில் கொஞ்சம் நெய் விட்டு, மிதமான சூட்டில் நெய் காய்ந்ததும், கஜு,பிலம்ஸ், கருவாப்பட்டை, ஏலக்காய், ரம்பை இல்லை என்றால் கருவேப்பிலை போட்டு வறுத்துக்கொள்ளுங்கள்..
பாஸ்மதி ரைசை அளவாக தண்ணீர் சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ரைஸ் குக்கரில் வேகவிடுங்கள்..பாதி ரைஸ் வெந்ததும் நெய்யில் வறுத்த பொருட்களை ரைசுடன் சேர்த்து கிளறி விடவும்.
கறிவைக்கும் பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் விட்டு எண்ணெய் சூடேறியதும், நறுக்கிய வெங்காயம், பெருஞ்சீரகம், கடுகு, கருவேப்பிலை ,ரம்பை இலை சேர்த்து தாளிக்கவும்.
அதன் பின்பு நறுக்கிய தக்காளிப்பழத்தையும் அதனுடன் சேர்த்துக் கிளற வேண்டும்..
அதன் பின்னர் பிரட்டி வைத்த சிக்கினையும் தாளிததிற்குள் போட்டு கிளறி விடவும்.
அதனுடன் 2 மே.கரண்டி தயிர் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக சிக்கினை வேக விடவேண்டும்.
கெட்டியாக சிக்கின் கறி வந்ததும், கொஞ்சம் இறைச்சிக் கறிப்பவுடர் சேர்த்து ஒரு கொதி கொதித்ததும்…இறக்கிவிடவும்..
ஒரு பெரிய வாய்அகன்ற பாத்திரத்தில் இந்த சிக்கின் கறியுடன்…வேகவைத்த ரைசைப்போட்டு கிளறி விடவுடம்…
இப்போது சிக்கின் பிரியாணி ரெடியாகிவிட்டது…
இதற்கு முட்டை அவியல், தக்காளி சாலட், கோழிப்பொரியல் சேர்த்து வைத்து சாப்பிடலாம்..

சுவையான மட்டன் பிரியாணி செய்வது எப்படி ? இதை கொஞ்சம் பாருங்க !!!

No comments:

Post a Comment