சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!
இது, பெரும்பாலான குழந்தைகளுக்கு பள்ளி செல்லும் வயதில் குணமாகிவிடுகிறது. சிலருக்கு, இளமைப் பருவத்திலும் முதிர் வயதிலும் இந்த நோய் தொடரும்.
அட்டோபிக் எக்ஸிமா வகை கரப்பான்... மகரந்தம், தூசு, செல்லப்பிராணிகளின் முடி, கம்பளி, அதிகக் குளிர், அதிக வெப்பம், போன்றவற்றால் ஏற்படும். இவைத் தவிர சோப்புகள், அழகு சாதனப் பொருட்கள், நகைகள், வேதிப் பொருட்கள், தட்பவெட்பநிலை மாறுபாடுகள், மன அழுத்தம் போன்றவை கரப்பான் உண்டாவதற்குக் காரணமாகின்றன.
அறிகுறிகள்:
உலர்ந்த சிவந்த நிறத் தோல், எரிச்சல், கொப்புளம், நீர் வடிதல்.சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
இசங்குச் சாறும், சிற்றாமணக்கு எண்ணெயும் சம அளவு எடுத்துக் காய்ச்சி, அதில் 10 மி.லி. அருந்தலாம்.
எழுத்தாணிப் பூண்டு எட்டு கிராமுடன் நாலு பங்கு நீர் சேர்த்து ஒரு பங்காக வற்றவைத்து அருந்தலாம்.
ஒரு கிராம் கொட்டைக்கரந்தைப் பொடியை பாலில் சேர்த்து அருந்தலாம்.
சிவகரந்தையை அரைத்துக் கொட்டைப் பாக்கு அளவு வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.
கருங்காலிப் பிசின் பொடி ஒரு கிராம் எடுத்து நீரில் கலந்து சாப்பிடலாம்.
சிறுகாஞ்சொறி வேர்ப் பொடி அரை ஸ்பூன் எடுத்து, பாலில் கலந்து உண்ணலாம்.
குருவிச்சிப் பூண்டு கைப்பிடி அளவு எடுத்து நான்கு பங்கு நீர் சேர்த்து, ஒருபங்காக வற்றவைத்து அருந்தலாம்.
சத்திச்சாரணை, கடுக்காய், சுக்கு இவற்றை சம அளவு எடுத்து, உப்பு சேர்த்து, நான்கு பங்கு நீர் சேர்த்து ஒரு பங்காக வற்றவைத்து அருந்தலாம்.
அரை ஸ்பூன் நாவல் வேர்ப் பொடியை நீரில் கலந்து பருகலாம்.
புங்கம்பூ, புளியம்பூ, வசம்பு, உள்ளி, சீரகம், வெப்பாலை விதை, நன்னாரி 35 கிராம் எடுத்து, பால் 700 மி.லி. நல்லெண்ணெய் 1400 மி.லி. கலந்துக் காய்ச்சி தினசரி ஒரு ஸ்பூன் வீதம் உண்ணலாம்.
அரை ஸ்பூன் கருவேலின் வேர்ப் பொடி நீரில் கலந்து பருகலாம்.
வெளிப் பிரயோகம்:
பப்பாளிப் பாலுடன் வெங்காயத்தைப் பொடித்துப் பூசலாம்.
ஆகாயத் தாமரைச் செடியைச் சுட்டுச் சாம்பலாக்கிப் பூசலாம்.
கருஞ்சீரகப் பொடியை நல்லெண்ணெயில் காய்ச்சிப் பூசலாம்.
கருஞ்செம்பை இலையை அரைத்துப் பூசலாம்.
தேள் கொடுக்கு இலையை அரைத்துப் பூசலாம்.
மஞ்சணத்திப் பட்டையைப் பொடித்து, நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சிப் பூசலாம்.
புங்கம் விதையை நீர்விட்டு அரைத்துப் பூசலாம்.
பூவரசம் காய், பூவை அரைத்துப் பூசலாம்.
கற்பூரவள்ளி, சிறு செருப்படை, வெங்காயம் இவற்றை விளக்கெண்ணையில்போட்டு காய்ச்சிப் பூசலாம்.
சேர்க்க வேண்டியவை:
பச்சைப் பயறு, முள்ளங்கி, பண்ணைக் கீரை, பரட்டைக் கீரை, வெள்ளரிக்காய், மிளகு.
தவிர்க்க வேண்டியவை:
கத்தரி, கருணை, சோளம், வரகு, பாகல், மீன், நாவல் பழம், பனம் பழம், பலாப் பழம், கம்பு.
No comments:
Post a Comment