SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Saturday 30 May 2015

ஆட்டுக்கறி (மட்டன்) பிரியாணி


download-1
தேவையானபொருள்கள்
பாசுமதி அரிசி – 1 cup
ஆட்டுக்கறி – 200 கிராம்
கிராம்பு – 4
ஏலக்காய் – 2
பட்டை – சுண்டு விரல் அளவு
பூண்டு – 4 பல்
இஞ்சி – ஒரு இன்ச் அளவு
தக்காளிப் பழம் – 2 (1 cup)
சின்ன வெங்காயம் – 10
பெரிய வெங்காயம் – 1
புளித்த தயிர் – 1/4 ka
தேங்காய் பால் – 1/4 கப்
மல்லி இலை – 1/4 கப்
புதினா இலை – 1/4 கப்
பச்சை மிளகாய் – 4
ingredients
நல்ல எண்ணெய் அல்லது நெய் – 100 மில்லி
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
பாசுமதி அரிசியை தண்ணீரில் கழுவி வடிகட்டி வைக்கவும்.
தக்காளியை மற்றும் பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி இலை, புதினா இலை இவற்றை தனித் தனியாக சிறிது நீர் விட்டு கட்டியாக மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவற்றை சேர்த்து தண்ணீர் விடாமல் மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொள்ளவும்.
குக்கரில் மட்டனை சிறிதளவு தண்ணீர் விட்டு மூன்று விசில் வரும் வரை வேக வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, நன்றாக காய்ந்தவுடன் பொடித்து வாய்த்த பட்டை, கிராம்பு, ஏலக்காய் போடவும். பின்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு பொன்னிறமாக வரும் வரை கிளறவும். இத்துடன், பொடியாக நறுக்கிய தக்காளியை போடவும். தக்காளி நன்றாக சேர்ந்தவுடன் அரைத்து வைத்த மசால் ஒவ்வொன்றாக சேர்த்து கிளறவும். எண்ணெய் பிரியும் வரை கிளறவும். இத்துடன் தேங்காய் பால் சேர்க்கவும். அதுவும் நன்றாக மசாலுடன் சேர்ந்தவுடன், மட்டன் சேர்க்கவும். பின்பு, தயிரையும் சேர்த்து மிதமான தீயில் வைக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
மற்றுமொரு அகண்ட பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் கொதிக்க விட்டு பாசுமதி அரிசியை போடவும். உப்பு சேர்க்கவும். அரிசி முக்கால் பாகம் வெந்தவுடன் வேகவைத்த மசாலில் சேர்க்கவும். பாத்து நிமிடங்கள் மிதமான தீயில் அடி பிடிக்காமல் கிளறி, பின்பு இறக்கவும்.
மற்றுமொரு முறையாக, எண்ணெயில் வேக வைத்த மசாலை குக்கரில் இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து அதில் அரிசி மற்றும் உப்பு சேர்த்து இரண்டு விசில் வந்தவுடன் இறக்கலாம். இது சற்று சீக்கிரம் முடியும்.
தயிர் வெங்காயம் (raitha) அல்லது தால்சா சேர்த்துச் சாப்பிட சுவையான பிரியாணி ரெடி

No comments:

Post a Comment