SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Saturday 30 May 2015

புளியோதரை

புளியோதரை செய்வது இப்பொழுது ரொம்பவும் சுலபமாகிவிட்டது , ஏனென்றால் கடைகளில் தயார் நிலை பொடியும் , புளிக்காய்ச்சலும் கிடைக்கின்றது . இருந்தாலும் வீட்டில் செய்து சுவைப்பது ஒரு தனி சுவைதானே !!
04-aloo-capsicum-curry7
தேவையானவை:-
புளி 100 கிராம்
மிளகாய் வத்தல் 15
எண்ணை 100 கிராம்
மஞ்சள்பொடி 1 ஸ்பூன்
வெந்தயம் 1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
தாளிக்க:-
பெருங்காயம்
கடுகு
உளுத்தம்பருப்பு
கடலைப்பருப்பு
கருவேப்பிலை
புலியை தண்ணீரில் சிறிதுநேரம் ஊறவைத்து நன்றாக கெட்டியாக கரைத்துக்கொள்ளவும்
வெத்த மிளகாய் இரண்டாக கிள்ளி வைத்துக்கொள்ளவும்
அடுப்பில் வாணலியில் மிதமான் சூட்டில் , 100 கிராம் எண்ணை விட்டு , முதலில் பெருங்காயம் பொரித்துக் கொண்டு , கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கருவேப்பிலை , மிளகாய் வத்தல் ஒன்றன்பின் ஒன்றாக போட்டு தாளிக்கவும்.
அதன் பின் கரைத்து வைத்த புளித் தண்ணீரை அதனுடன் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும் ,இதனுடன் மஞ்சள் பொடி உப்பு சேர்க்கவும்
புளிக்கரைசல் கெட்டியாகி அதனுடன் இருக்கும் எண்ணை மேலே வரும் அளவு கொதிக்கவேண்டும் இதனுடன் வெந்தயத்தை வறுத்து பொடி செய்து கலக்கவும்.
இப்பொழுது புளியோதரை கலக்க புளிக்காய்ச்சல் தயார்.
2 ஆழாக்கு அரிசியை களைந்து நீர் ஊற்றி குக்கரில் 5 விசில் பதத்தில்
வடித்துகொள்ளவும் .
குக்கர் சத்தம் அடங்கியவுடன் , வடித்த சாதத்தை ஒரு வாயகன்ற
பத்திரத்தில் போட்டு சற்று ஆறவைக்கவும்.
சூடு சற்று ஆறியவுடன் தயார் நிலையில் உள்ள புளிக்காய்ச்சலை
போட்டு விரல்களால் தூவினாற்போல் கலக்கவும்.
இப்பொழுது சுவையான புளியோதரை சாதம் சுவைக்க தயார்
குறிப்பு:-
இதன் சுவை கூட்ட இதனுடன் வருத்த வேர்கடலை புளிக்காய்ச்சல்
ஊற்றி கலக்கும்போதே சேர்த்து சாதம் கலக்கலாம் .
கொண்டைக்கடலை சேர்க்கவேண்டும் என்றால் ஊறவைத்து
குக்கரில் வேகவைத்து இதனுடன் கலந்து சுவைக்கலாம்
ஸ்பெஷல் பொடி:
மிளகு,………………..…. 1 டீஸ்பூன்
மிளகாய்வற்றல்….4
கடலைப்பருப்பு…….2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு …..2 டீஸ்பூன்
தணியா ………………….2 டீஸ்பூன்
மேலே சொன்னவற்றை அடுப்பில் வாணலியில் கொஞ்சம்
எண்ணை விட்டு , இவற்றை வறுத்து , மிக்சியில் பொடி செய்து
புளிக்காய்ச்சல் விட்டு சாதம் கலந்த பின்பு , இந்த பொடியை
மேலே போட்டு நன்றாக கலந்தால் ….. இதுவே ஐயங்கார்
புளியோதரயாக மாறிவிடும் .
நல்ல உப்பு காரம் கூடிய பதத்தோடு செய்யப்படும் புளிக்காய்ச்சல்
சுமார் 1 மாதம் வரை பயன் படுத்த முடியும் .

No comments:

Post a Comment