SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Saturday 30 May 2015

சர்க்கரை வியாதியும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும். .


3a6e77283c3a19ce91fb2491a5a7d354-682x102435
சர்க்கரை வியாதி என்றால் என்ன?
எப்பொழுதும் நம் உடலில் உள்ள இரத்தத்தில் சர்க்கரையின் (குளுகோஸ்) அளவு, ஒரு குறிப்பிட்ட அளவிற்குள் இருக்க வேண்டியது அவசியமாகின்றது. இது அளவிற்கு மீறிப் போகும் பொழுது வியர்வை, சிறுநீர் போன்றவற்றின் வழியாக வெளியாகிவிடும். அவ்வாறு வெளியாகாமல் எஞ்சிய சர்க்கரையானது இரத்ததுடன் நேரடியாகக் கலக்கும் பொழுது, அதனால் வரும் விளைவு தான் சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு வியாதியாகும்.
சர்க்கரை நோயைப் போக்குவதற்கான வழிமுறைகள். . .
உடற் பயிற்சி முறைகள். . .
தினமும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதுவும் காலை, மாலை இருவேளையும், குறைந்தபட்சம் 1 மணி நேரமாவது நடக்க வேண்டும். இரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், சுமார் அரைமணி நேரம் முதல் முக்கால் மணி நேரமாவது நடக்க வேண்டும். ஓடுதல் பயிற்சியைத் (ஜாகிங்) தவிர்த்தல் வேண்டும். யோகா செய்வது, மற்றும் பிராணாயாமம் செய்வது மிகவும் நல்லது. பொதுவாக, உடலில் உள்ள அதிகக் கலோரி மற்றும் சர்க்கரை எரிசக்தியாக மாறி வியர்வையாக வெளியேற வேண்டும். உடற்பயிற்சியின் நோக்கமே அது தான்.
உணவுக் கட்டுப்பாட்டு முறைகள். . .
ஆப்பிள், சாத்துக்குடி போன்ற பழங்களைச் சாப்பிடலாம். ஏனெனில், இவற்றில் நார்ச்சத்து அதிகம். மேலும், ஜீரணமாகி உடலில் உடனடியாகச் சர்க்கரையாக மாறி விடுவதில்லை. வாழைப்பழம் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு மட்டுமே சாப்பிடவேண்டும். அன்னாசி, திராட்சை, சப்போட்டா, மாம்பழம், பலாப்பழம் போன்றவற்றைக் கண்டிப்பாகச் சேர்க்கக் கூடாது.
காய்கறிகளில் கிழங்கு வகைகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். நார்ச் சத்துள்ள வாழைத்தண்டு, அவரை, புடலங்காய், கொத்தவரை போன்றவற்றையும் மற்றும் சௌசௌ, பாகற்காய், வெங்காயம், பூண்டு, கீரை போன்றவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கடலை வகைகள் உடலுக்கு மிகவும் நல்லது. சான்றாக, மொச்சைக்கடலை, பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், தேங்காயை எக்காரணம் கொண்டும் சேர்க்கக் கூடாது.
கேழ்வரகுக் கஞ்சி, கூழ் போன்றவற்றைச் சாப்பிடுவதை விட, கோதுமைக் கஞ்சி சிறந்தது. ஆனால், நீட்டமாக உள்ள சம்பாக் கோதுமையையே பயன்படுத்த வேண்டும். ஏனெனில், அதில் மட்டுமே மற்ற கோதுமை வகைகளை விட சர்க்கரையின் அளவு குறைவாக உள்ளது.
பொதுவாக, நோய் வந்த பின் மருத்துவரை நாடி ஓடுவதை விட, வருமுன் காப்பதே சிறந்தது. பரம்பரை, பரம்பரையாக இந்நோயால் பாதிக்கப்படுபவர்களில், இளவயதில் இருப்பவர்கள், சிறு வயது முதலே சரியான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றி வந்தால், எதிர் காலத்தில் இந்நோயால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கலாம்.
நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம். . .
சர்க்கரை நோயை முழுமையாகக் குணப்படுத்துதல் என்பது எளிதானது அல்ல. மாறாக, சர்க்கரையின் அளவை இன்சுலின் போன்றவற்றின் மூலமும், மற்றும் சில வழிமுறைகள் மூலமும் கட்டுக்குள் வைக்கலாம். குறைக்கலாம். அதற்கான வழிமுறைகள்தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment