SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Saturday 30 May 2015

ஆட்டுக்கால் சூப்


sl114
தேவையான பொருட்கள்:
ஆட்டுக்கால் – 2,
சின்ன வெங்காயம் – 6,
பூண்டு – 4 பல்,
மிளகு – 1 தேக்கரண்டி,
சீரகம் – 1 தேக்கரண்டி,
தனியா – 1 தேக்கரண்டி,
கறிவேப்பிலை – 10,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
ஆட்டுக்காலை சுத்தம் செய்து, சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
மிளகு, சீரகம், தனியா, வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நைசாக அரைக்கவும்.
குக்கரில் ஆட்டுக்காலுடன் அரைத்த விழுது, உப்பு, 8 தம்ளர் தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 10,15 விசில் வரும் வரை விட்டு இறக்கவும்.
இதை முதல் நாள் இரவே கூட வைத்து விட்டு, மூடியை திறக்காமல் வைத்திருந்து, காலையில் சூடு செய்து குடிக்கலாம்.

No comments:

Post a Comment