SADHASIVAM
Sunday, 28 June 2015
காய்கறி எப்படி பார்த்து வாங்கணும்? 31 குறிப்புகள்
நம்ம வீட்டம்மா அவ்வப்போது சில வீட்டு/ சமையல் குறிப்புகள் புத்தகத்தில் படித்தோ நண்பர்களிடம் கேட்டோ எழுதி வைத்திருப்பார். காய்கறி வாங்குவது எப்படி என ஏதோ புத்தகத்தில் வாசித்து சில குறிப்புகள் எழுதி வைத்திருந்தார். உபயோகமான தகவல் என்பதால் இங்கு பகிர்கிறேன்
என்னென்ன காய்கறி என்ன பார்த்து வாங்க வேண்டும்?
1. வாழை தண்டு : பொறியல், சூப் - ஆகியவை செய்யலாம். மேல் பகுதி நார் அதிகம் இருக்காது, உள்ளிருக்கும் தண்டு பகுதி சிறுத்து இருப்பதாக பார்த்து வாங்கினால் நல்லது
2. வெள்ளை வெங்காயம்: ( Salad used in Chinese Food) நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்
29. முள்ளங்கி: லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு- நல்ல காய்
30. வெள்ளரி மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கினால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும்
31. பச்சை மிளகாய் :நீளமானது சற்று காரம் குறைவாக இருக்கும். சற்றே குண்டானது தான் காரம் தூக்கலாக வாசனையும் பிரமாதமாக இருக்கும்
****
பெண்களுக்கு இவற்றில் பலவும் ஏற்கனவே தெரிந்திருக்கும் ! ஆண் நண்பர்கள் இனிமே கரீட்டா காய்கறி வாங்கி வீட்டம்மாவை அசத்துங்க !
இந்த குறிப்புகளை சீரியசாக படித்து சந்தேகம் எல்லாம் கேட்டதில் குடும்ப பொறுப்பு நிறைய வந்து விட்டது என மகிழ்வோடு சொல்லி தந்தார் நம்ம வீட்டம்மா. அவருக்கு என்ன தெரியும்... ஒரு பதிவு தேற்ற தான் நாம் அக்கறையாய் விசாரித்தது என ? :
என்னென்ன காய்கறி என்ன பார்த்து வாங்க வேண்டும்?
1. வாழை தண்டு : பொறியல், சூப் - ஆகியவை செய்யலாம். மேல் பகுதி நார் அதிகம் இருக்காது, உள்ளிருக்கும் தண்டு பகுதி சிறுத்து இருப்பதாக பார்த்து வாங்கினால் நல்லது
2. வெள்ளை வெங்காயம்: ( Salad used in Chinese Food) நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்
3. முருங்கைக்காய் : நல்ல முருங்கை முறுக்கினால் வளைந்து கொடுக்கும். முற்றவில்லை என்று அர்த்தம்
4. சர்க்கரை வள்ளிகிழங்கு : உறுதியான கிழங்கு இனிக்கும் அடிபட்டு கருப்பாக இருந்தால் கசக்கும்
5. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் மெதுவாக சென்றால் நல்லது என்று அர்த்தம்
6.தக்காளி : நன்றாக சிவந்த தக்காளி கூட வாங்கலாம். பெங்களூர் தக்காளி ஒரு வாரம் அப்படியே இருக்கும். கெடாது.
7. கோவைக்காய் : முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்
8. சின்ன வெங்காயம்: பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும்
9. குடை மிளகாய் : தோல் சுருங்காமல் fresh ஆக இருப்பதை வாங்கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும். எல்லா நிற குடை மிளகாய்களும் ஒரே சுவையில் தான் இருக்கும்
10. காலிபிளவர்: பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த்தியாக காம்பு தடினமனாக இல்லாமல் வாங்கவும்
11. மாங்காய்- தேங்காயை காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டி பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சிறிதாக இருக்கும்
4. சர்க்கரை வள்ளிகிழங்கு : உறுதியான கிழங்கு இனிக்கும் அடிபட்டு கருப்பாக இருந்தால் கசக்கும்
5. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் மெதுவாக சென்றால் நல்லது என்று அர்த்தம்
6.தக்காளி : நன்றாக சிவந்த தக்காளி கூட வாங்கலாம். பெங்களூர் தக்காளி ஒரு வாரம் அப்படியே இருக்கும். கெடாது.
7. கோவைக்காய் : முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்
8. சின்ன வெங்காயம்: பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும்
9. குடை மிளகாய் : தோல் சுருங்காமல் fresh ஆக இருப்பதை வாங்கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும். எல்லா நிற குடை மிளகாய்களும் ஒரே சுவையில் தான் இருக்கும்
10. காலிபிளவர்: பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த்தியாக காம்பு தடினமனாக இல்லாமல் வாங்கவும்
11. மாங்காய்- தேங்காயை காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டி பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சிறிதாக இருக்கும்
12. பீர்க்கங்காய் ( நார்ச்சத்து உள்ள மிக நல்ல காய் இது ) : அடிப்பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுதும் ஒரே சைசில் இருக்குமாறு பார்த்து வாங்குவது நல்லது
13. பரங்கிக்காய் கொட்டைகள் முற்றியதாக வாங்கவும்
14. புடலங்காய் : கெட்டியாக வாங்கவும். அப்போது தான் விதைப்பகுதி குறைவாக, சதை பகுதி அதிகமாக இருக்கும்
15. உருளை கிழங்கு: முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறினாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும்
16. கருணை கிழங்கு: முழுதாக வாங்கும் போது பெரியதாக பார்த்து வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை விற்றால், உள் புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்கவும்
17. சேப்பங்கிகிழங்கு : முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக்கும் கிழங்கு சமையலுக்கு சுவை சேர்க்காது. உருண்டையாக பார்த்து வாங்கவும்
18. பெரிய வெங்காயம் மேல் (குடுமி) பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும்
19. இஞ்சி: லேசாக கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார் பகுதி குறைவாக இருக்கும்
20. கத்திரிக்காய் : தோல் soft-ஆக இருப்பது போல் பார்த்து வாங்கவும்
21. சுரைக்காய் : நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம்
22. பூண்டு: பல் பல்லாக வெளியே தெரிவது நல்லது. வாங்கலாம்
23. பீன்ஸ் பிரன்ச் பீன்ஸில் நார் அதிகம். புஷ் பீன்ஸில் நார் இருக்காது. தோல் soft-ஆக இருந்தால் சுவை அதிகமாய் இருக்கும்
24. அவரை: தொட்டு பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது
25. பாகற்காய்: பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையான நீண்ட காய் நல்லது
26. வாழைப்பூ : மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளிர் நிறத்தில் இருக்கிறதா என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் காய் என்று அர்த்தம்
27. மொச்சை : கொட்டை பெரிதாக தெரியும் காய் பார்த்து வாங்கவும்
28. சௌ சௌ : வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தால் முற்றிய காய்
14. புடலங்காய் : கெட்டியாக வாங்கவும். அப்போது தான் விதைப்பகுதி குறைவாக, சதை பகுதி அதிகமாக இருக்கும்
15. உருளை கிழங்கு: முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறினாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும்
16. கருணை கிழங்கு: முழுதாக வாங்கும் போது பெரியதாக பார்த்து வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை விற்றால், உள் புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்கவும்
17. சேப்பங்கிகிழங்கு : முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக்கும் கிழங்கு சமையலுக்கு சுவை சேர்க்காது. உருண்டையாக பார்த்து வாங்கவும்
18. பெரிய வெங்காயம் மேல் (குடுமி) பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும்
19. இஞ்சி: லேசாக கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார் பகுதி குறைவாக இருக்கும்
20. கத்திரிக்காய் : தோல் soft-ஆக இருப்பது போல் பார்த்து வாங்கவும்
21. சுரைக்காய் : நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம்
22. பூண்டு: பல் பல்லாக வெளியே தெரிவது நல்லது. வாங்கலாம்
23. பீன்ஸ் பிரன்ச் பீன்ஸில் நார் அதிகம். புஷ் பீன்ஸில் நார் இருக்காது. தோல் soft-ஆக இருந்தால் சுவை அதிகமாய் இருக்கும்
24. அவரை: தொட்டு பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது
25. பாகற்காய்: பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையான நீண்ட காய் நல்லது
26. வாழைப்பூ : மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளிர் நிறத்தில் இருக்கிறதா என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் காய் என்று அர்த்தம்
27. மொச்சை : கொட்டை பெரிதாக தெரியும் காய் பார்த்து வாங்கவும்
28. சௌ சௌ : வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தால் முற்றிய காய்
29. முள்ளங்கி: லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு- நல்ல காய்
30. வெள்ளரி மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கினால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும்
31. பச்சை மிளகாய் :நீளமானது சற்று காரம் குறைவாக இருக்கும். சற்றே குண்டானது தான் காரம் தூக்கலாக வாசனையும் பிரமாதமாக இருக்கும்
****
பெண்களுக்கு இவற்றில் பலவும் ஏற்கனவே தெரிந்திருக்கும் ! ஆண் நண்பர்கள் இனிமே கரீட்டா காய்கறி வாங்கி வீட்டம்மாவை அசத்துங்க !
இந்த குறிப்புகளை சீரியசாக படித்து சந்தேகம் எல்லாம் கேட்டதில் குடும்ப பொறுப்பு நிறைய வந்து விட்டது என மகிழ்வோடு சொல்லி தந்தார் நம்ம வீட்டம்மா. அவருக்கு என்ன தெரியும்... ஒரு பதிவு தேற்ற தான் நாம் அக்கறையாய் விசாரித்தது என ? :
கோடை பானங்கள்
தகிக்கும் வெயிலைப் பற்றிக் கொஞ்சம்கூட அலட்டிக் கொள்ளாமல், ‘அடிச்சோம்ல 100 ரன்’ என ஓடிக்கொண்டே இருக்கும் குட்டீஸ்கள்…
‘சைக்கிள் ஓட்டக் கத்துக்கத்தான் சம்மர் லீவே விட்டிருக்காங்க தெரியுமா?’ என அக்னி நட்சத்திர வெயிலில்கூட அலப்பறை செய்யும் வாண்டூஸ்கள்…
– இவர்களெல்லாம் ‘வெயிலோடு விளையாடி, வெயிலோடு உறவாடி, வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே…’ என்று கோடையைக் கொண்டாடுகிறார்கள்.
ஆனால், ஒரு பருவத்துக்குப் பின் ‘வெயில்’ என்றாலே எல்லோருமே அலற ஆரம்பித்து விடுகிறோம். வயிற்றுப்போக்கு, மயக்கம், நீர்க்கடுப்பு… வெயில் கட்டி, தோல் வறட்சி, தேகம் கறுத்தல்… என அக மற்றும் புறப் பிரச்னைகள் வாட்டி எடுப்பதுதான் காரணம்.
வெயில் காலத்தில், வியர்வை காரணமாக உடலிருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேறுவதுதான் பெரும்பாலான பிரச்னைகளுக்கு அடிப்படையாக இருக்கிறது!
“இதிலிருந்தெல்லாம் தப்பிக்க, நம் வீட்டுச் சமையலிலேயே தீர்வுகள் இருக்கின்றன” என்கிறார் ‘பட்ஜெட் சமையல்’ நங்கநல்லூர் பத்மா.
”கோடையில் பருகுவதற்கென்றே ஸ்பெஷலான, எளிமையான பல பானங்கள் நம் தாத்தா – பாட்டி காலத்திலிருந்தே வழக்கத்தில் இருக்கின்றன. அவையெல்லாம், நமக்கு அருகிலேயே, உடனடியாக, குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய பழங்கள், காய்கறிகள், தானியங்களைக் கொண்டு வீட்டில் தயாரித்துவிடக் கூடியவைதான். காலப்போக்கில் நாகரிகம் என்ற பெயரில் அதனையெல்லாம் மறந்து கொண்டே இருக்கிறோம்” என்று சொல்லும் பத்மா, சிறப்பான மருத்துவக் குணம் கொண்ட அத்தகைய சூப்பர் ஸ்பெஷல் பானங்கள் தயாரிக்கக் கற்றுத் தருகிறார்.
வெயில் ஸ்பெஷல் பானங்களைக் குடிங்க… வெயிலோடு விளயாடுங்க!
குறிப்பு: எளிமையான இந்த பானங்களில் சிலவற்றை ஐஸ் சேர்த்துக் குடிக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. கூடுமானவரையில் ஐஸ் என்பதை சேர்க்காமல் இருப்பதே அதிக ஆரோக்கியம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
கேரட் ஜூஸ்
தேவையானவை: கேரட் – 2, பாதாம் பருப்பு – 4, ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, பால் – அரை லிட்டர், கல்கண்டு – 100 கிராம்.
செய்முறை: கேரட்டைத் தோல் சீவிக் கழுவி, துண்டுகளாக்கி வேக வைக்கவும். பாதாம்பருப்பை ஊற வைத்து தோல் உரித்துக் கொள்ளவும். இரண்டையும் சேர்த்து நைஸாக அரைக்கவும். பாலைக் காய்ச்சி, ஆற வைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதுடன் கல்கண்டு, காய்ச்சிய பால் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கி பருக லாம். ஃப்ரிட்ஜில் வைத்தும் பருகலாம்.
குறிப்பு: கோடைக்காலத்தில் நிறைய குழந்தைகள் எதையுமே சாப்பிடாமல் அடம் பிடிக்கும். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு இந்த ஜூஸ் அருமையான உணவு. இதன் மூலமே நிறைய சத்துக்கள் கிடைத்துவிடும். இது, விட்டமின்-ஏ சத்து நிறைந்தது!
ஜிஞ்சர் மோர்
தேவையானவை: மோர் – 500 மில்லி, பச்சை மிளகாய் – 1, இஞ்சி – சிறு துண்டு, கறிவேப்பிலை – சிறிதளவு, கொத்தமல்லி – சிறிதளவு, பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாயை மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். மோருடன் அரைத்த விழுது, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, பொடியாக நறுக்கிய கொத்துமல்லியைப் போட்டுக் கலந்து பரிமாறவும். விருப்பப்பட்டால் ஐஸ் க்யூப் சேர்த்துக் கொள்ள லாம்.
குறிப்பு: இதில் சேர்க்கப் பட்டிருக்கும் கறிவேப்பிலை, இஞ்சி ஆகியவை வியர்வை யினால் வீணாகும் சத்துக்களை சமன்படுத்தும். அதிக செலவு இல்லாத பட்ஜெட் ட்ரிங்!
கிர்ணி ஜூஸ்
தேவையானவை: கிர்ணிப்பழம் – 1, பால் – 500 மில்லி, சர்க்கரை – 100 கிராம்.
செய்முறை: கிர்ணிப் பழத்தை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். காய்ச்சி, ஆற வைத்த பாலை சேர்த்துக் கலக்கவும். பரிமாறும் முன் ஐஸ் க்யூப் சேர்த்துப் பரிமாறலாம்.
குறிப்பு: கிர்ணிப் பழத் துண்டுகளுடன் வெல்லம் சேர்த்தும் சாப்பிடலாம். உடல் சூட்டைத் தணிக்கும்.
மாதுளை ஜூஸ்
தேவையானவை: மாதுளம் பழம் – 1, சர்க்கரை – 100 கிராம், தேன் – 2 டீஸ்பூன், பால் – ஒரு கப்.
செய்முறை: மாதுளம் பழத்தை தோல் உரித்து, முத்து எடுத்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். சர்க்கரை, தேன் சேர்த்து நன்கு கலக்கவும். பரிமாறுவதற்கு முன், காய்ச்சி ஆற வைத்த பால், ஐஸ் க்யூப் சேர்த்துக் கலந்து பரிமாறவும். பால் விரும்பாதவர்கள் அதைச் சேர்க்காமலும் பருகலாம்.
குறிப்பு: இந்த ஜூஸில் இரும்புச் சத்து, விட்டமின் சத்து அதிகம். தயாரித்த உடனேயே சாப்பிடுவது சிறந்தது. பித்தத்தைக் குறைக்கும்.
வாழைத்தண்டு ஜூஸ்
தேவையானவை: வாழைத்தண்டு – இரண்டு துண்டுகள், மோர் – 500 மில்லி, உப்பு – சிறிதளவு.
செய்முறை: வாழைத் தண்டின் மேல் பட்டையை உரித்து, சிறு துண்டுகளாக நறுக்கி, நார் எடுத்துக் கொள்ளவும். பிறகு, மிக்ஸியில் நைஸாக அரைத்து வடிகட்டவும். மோர், உப்பு சேர்த்து நன்கு கலந்து பருகவும்.
குறிப்பு: இதைப் பருகுவதால், கோடைக்காலத்தில் உருவாகும் சிறுநீரக சம்பந்தமான பிரச்னைகள் வராது. இதில் நார்ச்சத்து அதிகமிருப்பதால் மலச்சிக்கலைத் தடுக்கும்.
நெல்லிக்காய் ஜூஸ்
தேவையானவை: பெரிய நெல்லிக்காய் – 10, தேன் – ஒரு கப், இளநீர் – 1.
செய்முறை: நெல்லிக்காயை சீவி, கொட்டை நீக்கவும். மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி, மீண்டும் தண்ணீர் சேர்க்கவும். பிறகு, தேன் சேர்த்துக் கலக்கவும். குடிப்பதற்கு முன் இளநீர் சேர்த்துக் கலந்து குடிக்கவும்.
குறிப்பு: இதில் இரும்புச்சத்து அதிகமிருப்பதால் ரத்தச்சோகை வராமல் தடுக்கும். குடல் புண், நீரிழிவு நோய், கண் நோய் போன்றவை வராமல் தடுக்கும்.
ஜிஞ்சர்தனியா ஜூஸ்
தேவையானவை: இஞ்சி – அரை அங்குலத் துண்டு, தனியா – 4 டீஸ்பூன், தேன் – 4 டீஸ்பூன், எலுமிச்சம்பழம் – 1.
செய்முறை: எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து, சாறு எடுத்துக் கொள்ளவும். மிக்ஸியில் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு… தோல் சீவிய இஞ்சி, தனியாவை அரைத்து வடிகட்டவும். இதனுடன் தேன், எலுமிச்சைச் சாறு கலந்து பருகவும்.
குறிப்பு: காலையில் வெறும் வயிற்றில் இதைக் குடிக்க… பித்தத்தினால் ஏற்படும் தலைசுற்றல், வாந்தி, அஜீரணம் நீங்கும்; நன்கு பசி எடுக்கும். இதை வாரம் ஒரு முறை குடிக்கலாம்.
தக்காளி ஜூஸ்
தேவையானவை: தக்காளி – கால் கிலோ, இஞ்சி – சிறு துண்டு, எலுமிச்சம்பழம் – 1, சர்க்கரை – ஒரு கப் (அ) குளூக்கோஸ் – 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து, சாறு எடுத்துக் கொள்ளவும். தக்காளியைக் கழுவிக் கொள்ளவும். இஞ்சியைத் தோல் சீவவும். மிக்ஸியில் தக்காளி, இஞ்சி இரண்டையும் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்து வடிகட்டவும். எலுமிச்சைச் சாறு, சர்க்கரை சேர்த்துக் கலந்து பரிமாறவும். சர்க்கரைக்குப் பதில் குளூக்கோஸ் சேர்க்கலாம்.
குறிப்பு: இது வெயிலினால் தோல் வறண்டு போவதை தடுக்கும்!
அன்னாசிபப்பாளி ஜூஸ்
தேவையானவை: அன்னாசி, பப்பாளி பழத் துண்டுகள் கலவை – ஒரு கப், சர்க்கரை, பால் – தலா ஒரு கப்.
செய்முறை: பப்பாளி, அன்னாசிபழத் துண்டுகளுடன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும். பருகுவதற்கு முன் காய்ச்சி ஆற வைத்த பால் சேர்த்துக் கலந்து பருகவும். பால் விரும்பாதவர்கள் அதை சேர்க்காமலும் பருகலாம்.
குறிப்பு: இரண்டு பழங்களும் சேர்வதால் வித்தியாசமான சுவையுடன் இருக்கும். அன்னாசிப் பழம், உணவுக் குடலின் செயல்களை சீரமைக்கும். வயிற்றுப் புழுக்களைக் கொல்லும். பசியைத் தூண்டும்.
புதினா ஜூஸ்
தேவையானவை: புதினா – ஒரு கட்டு, இஞ்சி – சிறு துண்டு, எலுமிச்சம்பழம் – 1, தேன் – 4 டீஸ்பூன், இளநீர் – 1. உப்பு – ஒரு சிட்டிகை.
செய்முறை: இஞ்சியைத் தோல் சீவிக் கொள்ளவும். புதினாவை ஆய்ந்து தண்ணீரில் சுத்தமாக அலசிக் கொள்ளவும். இரண்டையும் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து, வடிகட்டவும். எலுமிச்சைச் சாறு, உப்பு, தேன் சேர்த்துக் கலக்கவும். பருகுவதற்கு முன், இளநீர் சேர்த்துப் பருகவும்.
குறிப்பு: இந்த ஜூஸ், வியர்வையினால் உடம்பிலிருந்து இழக்கப்படும் தாது உப்புக்களையும், சத்துக்களையும் உடனே மீட்டுத் தரும். பித்தத்தினால் உண்டாகும் தலை சுற்றலைத் தடுக்கும். வயிற்றுப்போக்கு, அஜீரணக் கோளாறுகளை சரி செய்யும்.
ஃப்ரூட்ஸ்லெமன் ஜூஸ்
தேவையானவை: கொய்யாப்பழம், வாழைப்பழம் – தலா 1, உரித்த மாதுளம்பழ முத்துக்கள் – ஒரு கப், எலுமிச்சம்பழம் – 1, சர்க்கரை – 1 கப்.
செய்முறை: எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து சாறு எடுக்க வும். கொய்யாப்பழம், வாழைப்பழம், மாதுளை முத்துக்களைச் சேர்த்து, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். சர்க்கரை, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து பருகவும்.
குறிப்பு: இது, புளிப்பும் இனிப்பும் கலந்த வித்தியாசமான சுவையில் இருக்கும். எலுமிச்சம்பழத்துக்கு பதில் காய்ச்சி ஆற வைத்த பால் சேர்த்தும் அருந்தலாம். இது ரத்தத்தைச் சுத்திகரிக்கும்!
ஃப்ரூட் லஸ்ஸி
தேவையானவை: ஆரஞ்சு, வாழைப்பழம், ஆப்பிள் – தலா 1, ஸ்ட்ராபெர்ரி – 4, உலர்ந்த திராட்சை – 10, சர்க்கரை – ஒரு கப், புளிப்பில்லாத தயிர் – 200 மில்லி.
செய்முறை: வாழைப்பழத்தைத் துண்டுகளாக நறுக்கவும். ஆப்பிளை தோல் சீவி பொடியாக நறுக்கவும். ஸ்ட்ராபெர்ரியை பொடியாக நறுக்கவும். ஆரஞ்சை சுளைகளாக உரித்து, கொட்டையை நீக்கிக் கொள்ளவும். எல்லா பழங்களையும் ஒன்று சேர்த்துக் கலந்து, உலர்ந்த திராட்சையை சேர்க்கவும். பிறகு தயிர், சர்க்கரை சேர்த்து ஸ்பூனால் நன்கு கலந்து பரிமாறவும். விருப்பப்பட்டால் மிக்ஸியில் ஒரு முறை சுற்றியும் கொடுக்கலாம்.
குறிப்பு: வெயில் காலத்துக்கு ஏற்றது இந்த ஃப்ரூட் லஸ்ஸி. இது, உடல் சூட்டையும் நீர்க்கடுப்பையும் உடனே தணிக்கும். ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.
மல்டி வெஜிடபிள் ஜூஸ்
தேவையானவை: முட்டைகோஸ் துருவல், கேரட் துருவல், முள்ளங்கித் துருவல் எல்லாம் சேர்ந்து – ஒரு கப், வெள்ளரித் துண்டுகள் – சிறிதளவு, மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், இளநீர் – 1, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: முட்டை கோஸ், கேரட், முள்ளங்கித் துருவலை வதக்கிக் கொள்ளவும். இவற்றுடன் வெள்ளரித் துண்டுகள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, வடிகட்டவும். தண்ணீர் விட்டுக் கலந்து, மிளகுத்தூள், உப்பு, இளநீர் கலந்து பருகவும்.
குறிப்பு: இந்த ஜூஸ், டயட் பராமரிப்புக்கு உகந்தது! ரத்தத்தைச் சுத்தப்படுத்தி புத்துணர்ச்சி தரும். வாய் துர்நாற்றத்தைப் போக்கும்!
சுரைக்காய் ஜூஸ்
தேவையானவை: சிறிய சுரைக்காய் – 1, மோர் – ஒரு கப், எலுமிச்சம்பழம் – 1 மூடி, மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். சுரைக்காயைத் தோல் சீவிக் கழுவி, துருவிக் கொள்ளவும். வெறும் கடாயில் வதக்கி, ஆற வைத்து மிக்ஸியில் நைஸாக அரைத்து வடிகட்டவும். மோர், மிளகுத்தூள், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
குறிப்பு: இது, உடல் சூட்டைக் குறைக்கும்… சிறுநீரைப் பெருக்குவதால் நீர்க்கடுப்பு பிரச்னை வராது.
ஸ்ட்ராபெர்ரி ஜூஸ்
தேவையானவை: ஸ்ட்ராபெர்ரி பழம் – 10, சப்போட்டா பழம் – 2, இளநீர் – ஒரு டம்ளர், சர்க்கரை – ஒரு கப்.
செய்முறை: கழுவிய ஸ்ட்ராபெர்ரி, தோல் உரித்த சப்போட்டாவை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்ததை நன்கு வடிகட்டி, சர்க்கரை, இளநீர் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
குறிப்பு: வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த ஜூஸ், தோல் வறட்சியைப் போக்கும்… புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.
குக்கும்பர் ஜூஸ்
தேவையானவை: வெள்ளரிக்காய் – 1, புளிக்காத தயிர் – 1 கப், இஞ்சி – சிறு துண்டு, பச்சை மிளகாய் – 1, நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: வெள்ளரிக்காயைத் தோல் சீவிக் கழுவி, துருவிக் கொள்ளவும். இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். அதைத் தயிருடன் கலந்து, உப்பு சேர்க்கவும். நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
குறிப்பு: இந்த ஜூஸ், வெயிலினால் தோல் வறட்சியாவதைத் தடுக்கும்.
பீட்ரூட்தர்பூசணி ஜூஸ்
தேவையானவை: தர்பூசணித் துண்டுகள் – 2 கப், பீட்ரூட் துருவல் – 1 கப், எலுமிச்சம்பழம் – 1, ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, தேன் – ஒரு டீஸ்பூன்.
செய்முறை: எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். கடாயில் பீட்ரூட் துருவலை லேசாக வதக்கவும். தர்பூசணித் துண்டுகளை விதை நீக்கி, வதக்கிய பீட்ரூட் துருவல் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அதனை வடிகட்டி, ஏலக்காய்த்தூள் சேர்த்து, தேன் கலந்து அருந்தவும். விருப்பட்டால் ஐஸ் க்யூப் சேர்த்துக் கொள்ளலாம்.
குறிப்பு: வெயிலில் செல்வதற்கு முன்னும், சென்று வந்த பின்பும் இந்த ஜூஸை குடித்தால், நாள் முழுக்க எனர்ஜியுடன் வைத்திருக்கும். தர்பூசணி அடிவயிற்றுக் கோளாறுகளை சரி செய்யும்.
பாகற்காய் ஜூஸ்
தேவையானவை: பாகற்காய் – 200 கிராம், மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், சீரகத்தூள் – கால் டீஸ்பூன், பனங்கல்கண்டு – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: பாகற்காயை வில்லைகளாக நறுக்கி விதை நீக்கி ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும். இதை ஆற வைத்து, மிக்ஸியில் நன்கு அரைத்து, தண்ணீர், மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலக்கவும். பிறகு உப்பு, பனங்கல்கண்டு போட்டுக் கலந்து பருகவும்.
குறிப்பு: சர்க்கரை நோய் உள்ளவர்கள் மட்டுமல்லாது மற்றவர்களும் காலையில் வெறும் வயிற்றில் இதைக் குடிக்க… வயிற்றில் இருக்கும் குடல்புழு நீங்கி, நன்கு பசியெடுக்கும். மூச்சிரைப்பு, ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்தது.
நீராகாரம்
தேவையானவை: அரிசி – 200 கிராம், மோர் – 2 கப், சின்ன வெங்காயம் – 10, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: குக்கரில் ஒரு பங்கு அரிசிக்கு நான்கு பங்கு தண்ணீர் விட்டு வேக வைத்து, 3 விசில் வந்ததும் இறக்கவும். சிறிது நேரத்துக்குப் பிறகு, குக்கர் மூடியைத் திறந்து சாதத்தை எடுத்து ஆற வைக்கவும். ஆறியதும் அதில் தண்ணீர் விடவும். காலையில் அப்படி செய்திருந்தால், மாலையில் சாதத்தை நன்கு கரைத்து மோர் விட்டு கலக்கவும். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், உப்பு போட்டு வைத்து கலக்கி வைத்து விடவும். பிறகு, வேண்டும்போது குடிக்கலாம்.
குறிப்பு: இரவே சாதத்தில் தண்ணீர் விட்டு காலையில் இவ்வாறு செய்தும் குடிக்கலாம். கோடைக்காலம் முடியும் வரை இதனை தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால்… உடல் சூட்டால் ஏற்படும் பிரச்னைகளைத் தடுக்கலாம். இதற்கென தனியாக சாதம் வைக்கத் தேவையில்லை. மிச்சப்படும் சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்தால்கூட போதும்.
பானகம்
தேவையானவை: புளி – 150 கிராம், வெல்லம் (அ) கருப்பட்டி – 200 கிராம், சுக்குப்பொடி – கால் டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை.
செய்முறை: புளியை ஊற வைத்துக் கரைத்து, வடிகட்டவும். வெல்லம் அல்லது கருப்பட்டியை நன்கு பொடித்துக் கொள்ளவும். பொடித்த வெல்லத்தை வடிகட்டிய புளித் தண்ணீருடன் சேர்த்து வெல்லம் நன்கு கரையும் வரை கலக்கவும். பிறகு சுக்குப்பொடி, ஏலக்காய்த்தூள் சேர்த்து கலக்கி வைத்துக் கொண்டால்… வேண்டும்போது பருகலாம்.
குறிப்பு: இது எனர்ஜி தரும் பானம். குளிர்ச்சிக்கு உத்தரவாதமானது. உடல் சூட்டை சட்டெனக் குறைக்கும் வல்லமை பெற்றது.
கேப்பைக் கூழ்
தேவையானவை: கேழ்வரகு – 200 கிராம், மோர் மிளகாய் – 4, கடுகு – கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, மோர் – ஒரு கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கேழ்வரகை நான்கு மணி நேரம் ஊற வைத்துக் கழுவி, மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவுடன் உப்பு, பெருங்காயத்தூள், மோர் சேர்த்து, கட்டியில்லாமல் கரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, கிள்ளிய மோர் மிளகாய் தாளித்து, கரைத்த மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறவும். அடிபிடிக்காமல் கிளறி, கூழ் பதத்துக்கு வந்ததும்… ஈரக் கையில் கூழைத் தொடும்போது.. கையில் ஒட்டாத பதத்தில் இறக்கவும்.
குறிப்பு: மோரில் கூழைக் கரைத்துக் குடித்தால் வயிறு சம்பந்தமான வெயில் கால நோய்கள் வராது.
நியூட்ரிஷியஸ் கஞ்சி
தேவையானவை: பார்லி – 4 டேபிள்ஸ்பூன், கோதுமை – 4 டேபிள்ஸ்பூன், சோளம் 4 டேபிள்ஸ்பூன், தினை – டேபிள்ஸ்பூன், கம்பு – 4 டேபிள்ஸ்பூன், கேழ்வரகு – 1 கப், பாதாம்பருப்பு – 10, முந்திரிப்பருப்பு – 10, சோயா – 1 கப், கொள்ளு -1 கப், பால் – ஒரு டம்ளர், வெல்லம் – தேவையான அளவு.
செய்முறை: பார்லி, கோதுமை, சோளம், தினை, கம்பு, கேழ்வரகு, பாதாம்பருப்பு, முந்திரிப்பருப்பு, கொள்ளு, சோயா எல்லாவற்றையும் தனித்தனியாக சுத்தம் செய்து கொள்ளவும். வெறும் கடாயில் ஒவ்வொன்றையும் தனித்தனியாக வறுத்து, நைஸாக அரைத்து, பிறகு ஒன்றாக சேர்த்துக் கொள்ளவும். 4 டேபிள்ஸ்பூன் மாவுக்கு 1 டம்ளர் வீதம் தண்ணீர் விட்டுக் கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் கரைத்த மாவை விட்டு, அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறிகொண்டே இருக்கவும். ஈரக் கையில் கஞ்சியைத் தொடும்போது கையில் ஒட்டாத பதத்துக்கு வந்ததும் இறக்கவும். பின்பு, கொதிக்க வைத்து ஆறிய பால், பொடித்த வெல்லம் சேர்த்துக் கலந்து குடிக்கலாம்.
குறிப்பு: வெயில் காலத்தில் வியர்வையினால் அதிகமான சத்துகள் உடலை விட்டு வெளியேறும். அதை இந்த கஞ்சி ஈடுகட்டும். குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் இதமான கஞ்சி இது!
வடித்த கஞ்சி
தேவையானவை: அரிசி – கால் கிலோ, பனங்கல்கண்டு, வெண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.
செய்முறை: ஒரு பங்கு அரிசிக்கு 5 பங்கு தண்ணீர் விட்டு சாதம் வேகும் வரை நன்கு கொதிக்க விடவும். சாதம் வெந்ததும், கஞ்சியை வடிக்கவும். வடித்த கஞ்சியுடன் வெண்ணெய், உப்பு, பனங்கல்கண்டு சேர்த்துக் கலந்து குடிக்கலாம்.
குறிப்பு: இது கர்ப்பிணிப் பெண்களுக்கு உகந்தது. கர்ப்பக் காலத்தில் கால் வீக்கம் வராமல் தடுக்கும். கோடைக்காலத்தில் உடல் சூட்டினால் வரும் வயிற்றுவலியை இது நீக்கும்.
பார்லிஓட்ஸ் கஞ்சி
தேவையானவை: ஓட்ஸ், பால் – தலா ஒரு கப், பார்லி – 100 கிராம், சர்க்கரை – 100 கிராம், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை.
செய்முறை: பார்லியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, வேக விடவும். வெந்ததும், ஓட்ஸ் சேர்த்துக் கலந்து பால் விட்டு கொதிக்க வைத்து இறக்கவும். சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
குறிப்பு: சர்க்கரை, ஏலக்காய்க்கு பதிலாக உப்பு, மோர் கலந்தும் குடிக்கலாம். கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் ஏற்றது. இது, கோடைக்காலத்தில் உண்டாகும் நீர்க்கடுப்பை குறைக்கும்.
மூலிகை கஞ்சி
தேவையானவை: புழுங்கல் அரிசி – 250 கிராம், ஓமம், சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், மிளகு – 10, மோர் – ஒரு கப், சுக்குத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: புழுங்கல் அரிசியை பொன்னிறமாக வறுத்து ரவை போல உடைத்துக் கொள்ளவும். ஓமம், மிளகு, சீரகத்தைப் பொடிக்கவும். உடைத்த அரிசியை கஞ்சி பதம் வரும் வரை வேக வைக்கவும். பொடித்து வைத்த ஓமம், மிளகு, சீரகம், உப்பு, சுக்குத்தூள் சேர்த்து, மோர் விட்டு நன்கு கலந்து பரிமாறவும்.
குறிப்பு: இது எளிதில் ஜீரணம் ஆகக் கூடியது. வெயில் காலத்தில் நீர்க்கடுப்பு வராமல் இருக்க இந்தக் கஞ்சியைக் குடிக்கலாம்!
ஸ்வீட் கார்ன்சோயா கஞ்சி
தேவையானவை: சோயா – 200 கிராம், இஞ்சி பேஸ்ட் – கால் டீஸ்பூன், மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை, நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, வெண்ணெய் – ஒரு டீஸ்பூன், ஸ்வீட் கார்ன் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: சோயாவை ரவை போல உடைத்து, கொதிக்கும் நீரில் சேர்த்து வேக விடவும். குழைய வெந்ததும்… இஞ்சி பேஸ்ட், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு வெண்ணெய் சேர்த்துக் கலந்து, நறுக்கிய கொத்தமல்லி, ஸ்வீட் கார்ன் தூவிப் பரிமாறவும்.
குறிப்பு: சோயாவில் புரதச் சத்து அதிகம் இருப்பதால், வளரும் குழந்தைகளுக்கு இந்தக் கஞ்சி மிகவும் நல்லது. இது உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். தண்ணீர் மூலம் பரவும் நோய்களைத் தடுக்கும்.
உளுந்தக் கஞ்சி
தேவையானவை: முளைகட்டிய உளுந்து – ஒரு கப், முளைகட்டிய வெந்தயம் – ஒரு கப், முளைகட்டிய சோளம் – சிறிதளவு, புழுங்கல் அரிசி (வறுத்து உடைத்தது) – ஒரு கப், மிளகுத்தூள், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், மோர் – ஒரு கப். உப்பு – தேவையான அளவு,
செய்முறை: உளுந்து, வெந்தயம், சோளம், உடைத்த அரிசி ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். மூன்று விசில் வந்ததும் இறக்கவும். அதில் உப்பு, மோர், மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு கலந்து குடிக்கவும்.
குறிப்பு: வெயிலில் அதிகம் அலைந்து திரிந்து வேலை பார்ப்பவர்களுக்கு இது மிகவும் ஏற்றது. வாரம் ஒரு முறை குடித்தால் அலைச்சலினால் உண்டாகும் களைப்பு நீங்கும். உடல் வலுப்பெறும். உடலுக்குக் குளுமை தரும்.
ஜவ்வரிசிபார்லி கஞ்சி
தேவையானவை: பார்லி – 100 கிராம், ஜவ்வரிசி – 4 டீஸ்பூன், கோதுமை ரவை – ஒரு கப், மோர் – ஒரு கப், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: பார்லி, ஜவ்வரிசியை ஒன்றாகக் கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். அவற்றுடன் கோதுமை ரவையை சேர்த்து, குக்கரில் மூன்று விசில் வரும் வரை வேக விடவும். ஆறியதும் குக்கர் மூடியைத் திறந்து, உப்பு, மோர் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.
குறிப்பு: ஜவ்வரிசி, வயிற்றுக்குக் குளுமையானது. பார்லி, நீரிழிவு நோய் வராமல் தடுக்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு உகந்தது. உப்பு. மோருக்கு பதிலாக பால், சர்க்கரை சேர்த்தும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
பயித்தங் கஞ்சி
தேவையானவை: பாசிப் பருப்பு – 100 கிராம், வெல்லம் (பொடித்தது) – 1 டேபிள்ஸ்பூன், பால் – 1 கப், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, வறுத்த முந்திரி – 6, வாழைப்பழத் துண்டுகள் – 4.
செய்முறை: வெறும் கடாயில் பாசிப் பருப்பை சிவக்க வறுத்துக் கொள்ளவும். குக்கரில் தண்ணீர் விட்டு நன்கு குழைய வேக விடவும். பாலைக் காய்ச்சி, ஆற வைத்து, வெந்த பருப்புடன் சேர்த்துக் கலக்கவும். பிறகு, பொடித்த வெல்லம் போட்டுக் கலக்கி, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். ஆறியவுடன் வாழைப்பழத் துண்டுகளை சேர்த்தால்… சுவையான பயித்தங் கஞ்சி ரெடி!
குறிப்பு: கோடைக்காலத்துக்கே உரிய வயிற்றுப் புண், வாய்ப்புண் ஆகியவற்றைத் தடுக்கும். பாலுக்குப் பதில் தேங்காய்ப் பாலும் சேர்க்கலாம்.
குருணைக் கஞ்சி
தேவையானவை: புழுங்கல் அரிசி – 200 கிராம், பாசிப்பருப்பு – 4 டேபிள்ஸ்பூன், சுக்குப்பொடி – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: வெறும் கடாயில் புழுங்கல் அரிசியை வறுத்து, ரவை போல உடைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பையும் பொன்னிறமாக வறுக்கவும். உடைத்த அரிசி, பருப்பை தண்ணீர் விட்டு குக்கரில் வேக விடவும். 4 விசில் வந்ததும் இறக்கி… உப்பு, சுக்குப்பொடி சேர்த்துக் கலந்து பரிமாறலாம்.
குறிப்பு: உடல் நலக் குறைவின்போது இந்தக் கஞ்சியைக் குடிப்பது மிகவும் நல்லது. நாரத்தங்காய், உப்பு எலுமிச்சை ஊறுகாய் இதற்கு சிறந்த காம்பினேஷன். இது, வெயிலினால் இழக்கப்படும் நீர்ச்சத்தையும் சக்தியையும் மீட்டுத் தர வல்லது.
ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெய் அரை டீஸ்பூன் குடித்து ஒரு 30 நிமிடத்திற்கு பிறகு உணவு சாப்பிட்டால் . . .
ஆலிவ் எண்ணெய் அரை டீஸ்பூன் குடித்து ஒரு 30 நிமிடத்திற்கு பிறகு உணவு சாப்பிட்டால் . . .
அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை குடித்த 30 நிமிடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் உணவுகளை
சாப்பிட்டு வந்தால், இரத்தக் குழாயில் கொழுப்,பு படிமங்களாக படியாது.
இதனால் ரத்தத்தில் கொழுப்பு சேராது. மேலும் மாரடைப்பும் உங்களுக்கு ஏற்படாது. இதனை தினந்தோறும் செய்து வர வேண்டும்
மோர் சாதத்துடன் 2 பச்சை மிளகாயும் சாப்பிட்டு வந்தால் . . .
மோர் சாதத்துடன் 2 பச்சை மிளகாயும் சாப்பிட்டு வந்தால் . . .
மோர் சாதத்துடன் 2 பச்சை மிளகாயும் சாப்பிட்டு வந்தால் . . .
அந்தக்காலத்தில் நமது முன்னோர்கள், அதிகாலையில் கண் விழித்து பல் தேய்த்து, குளித்து விட்டு, முந்தினம் நீரில் ஊற வைத்த சோற்றினை அதாவது பழதுடன் சேர்த்து
இரண்டு பச்சை மிளகாயை கடித்து சாப்பிடுவார்கள் அல்லது வெறும்சாதத்துடன் மோர் கலந்து அதனுடன் பச்சை மிளகாயையும் சாப்பிடுவார் கள்.
ஆனால் காலப்போக்கில் பழைய சோறும் காணாமல் போனது. பச்சை மிளகாய் காரத்தன்மைக்காகவும் சுவைக்காகவும் பெயரளவில் சேர்த்து சமைத்து சாப்பிடும்போது அதனை தூர எறிந்து விடும் பழக்கம் ஏற்பட்டு விட்டது.
ஏன் அவர்கள் பழைய சோறுடன் இரண்டு பச்சை மிளகாயை கடித்து சாப்பிட்டார்கள் என்பதை ஆராய்ந்து பார்த்த தற்போ தைய மருத்துவ உலகம், பச்சைமிளகாயில் உள்ள ஒரு வித கேப்சைசின் என்ற வெப்ப ஊட்ட பொருள் நமது உடலில் கலோரி களையும் கரைத்துவிடும் ஆற்றல் இதற்குண்டு. மேலும் இதனை உட்கொண்ட 30 நிமிடங்களி ல் நமது உடலில் உள்ள தேவையற்ற அபாயகரமான கொ ழுப்புக்களை கரைக்க ஆரம்பித்து விடுகிறதாம்.
ஏன் அவர்கள் பழைய சோறுடன் இரண்டு பச்சை மிளகாயை கடித்து சாப்பிட்டார்கள் என்பதை ஆராய்ந்து பார்த்த தற்போ தைய மருத்துவ உலகம், பச்சைமிளகாயில் உள்ள ஒரு வித கேப்சைசின் என்ற வெப்ப ஊட்ட பொருள் நமது உடலில் கலோரி களையும் கரைத்துவிடும் ஆற்றல் இதற்குண்டு. மேலும் இதனை உட்கொண்ட 30 நிமிடங்களி ல் நமது உடலில் உள்ள தேவையற்ற அபாயகரமான கொ ழுப்புக்களை கரைக்க ஆரம்பித்து விடுகிறதாம்.
இந்த பச்சை மிளகாயை அப்படிய சாப்பிட்டால் அதன் காரத்தன்மை குடல் புண்ணாகி விடும்.. அதனால் பழைய சாதத்துடனோ அல்லது மோர் சாதத்துடன் இந்த பச்சை மிளகாயை சாப்பிட்டு வந்தால், குடலும் புண்ணாகாது. உங்க எடையும் குறையும்.
Friday, 26 June 2015
நாட்டுக் கோழி வளர்ப்பு பதிவேடு
நாட்டுகோழி வளர்ப்பின் நன்மைகள்
நாட்டுக்கோழி வளர்க்கும் பழக்கமானது நமது கிராமப்புற மக்களால் தொன்று தொட்டு மேற்கொள்ளப்பட்டுவரும்ஒரு சிறந்த தொழிலாகும். நாட்டுக்கோழி வளர்ப்பு முறை ஒரு பொழுது போக்காக மட்டுமில்லாமல், கிராமப்புறமக்களின் அவசர பணத்தேவையை பூர்த்தி செய்யவும் பயன்படுகிறது.
நாட்டுக்கோழிகளை ஏழைகள், பெண்கள் மற்றும் வயது முதிர்ந்தோர் அனைவரும் எந்த சிரமமும் இன்றிவளர்கலாம். பெரும்பாலும் விட்டிலுள்ள அரிசிகுருணை, எஞ்சியுள்ள தீவனப்பொருட்கள், வயல் வெளிகளில் உள்ள புழுபூச்சிகள் போன்றவற்றை உண்டு நாட்டுக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
புறக்கடையில் வளர்க்கப்படும் கோழிகள் எந்தவித நவீன தொழில் நுட்பங்களையும் பின்பற்றாமல்வளர்க்கப்படுகிறது. அதனால் தேவையான சத்துக்கள் சரியான அளவில் கிடைக்காததால் உற்பத்தி திறன் குறைந்துகாணப்படுகிறது. எனவே சரியான முறையில் சரிவிகித தீவனம் கொடுத்து நோய் தடுப்பு முறைகளையும் பின்பற்றிவளர்தோமானால் நாட்டுக் கோழி வளர்ப்பு அதிக இலாபமான தொழிலாக வளர்சியடயும்.
நாட்டுக்கோழி வளர்ப்பில் உள்ள நன்மைகள்:
வீட்டில் எளிதாக கிடைக்கும் தானியங்களை கொண்டும் தோட்டங்களில் பச்சை புற்களை மேயிந்தும்வளரக்கூடியது. சந்தையில் எப்போதும் நல்ல விற்பனை வாய்ப்புடன் அதிக விலையுள்ள இறைச்சி அதிகமாகதேவைப்படும் ருசியான முட்டைகள் குறைவான செலவில் அதிக லாபம் தரும் தொழில். அவசர பணத்தேவையைபூர்த்தி செய்யும் தொழில். அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. சுய வேலைவாய்ப்புக்கு ஏற்ற தொழில். கிராமப்புறபெண்களுக்கேற்ற நல்ல பகுதி நேர வேலை வாய்ப்பு. நாட்டுக் கோழிகளின் அடை காக்கும் தன்மை. குஞ்சுகளைபாதுகாத்து வளர்க்கும் தன்மை சிறந்த உர மதிப்பு எச்சம்.
நாட்டுக்கோழி இனங்கள்:
நம் இந்தியாவில் மட்டும் 18 கோழி இனங்கள் உள்ளன. அவற்றில் தமிழகத்தில் 7 கோழியினங்கள் உள்ளன.
குருவுக்கோழி,
பெருவிடைக்கோழி,
சண்டைக்கோழி அசில்கோழி,
கடக்நாத் என்னும் கருங்கால் கோழி,
கழுகுக்கோழி அல்லது கிராப்புக்கோழி என்னும் நேக்கட் நெக்,
கொண்டைக்கோழி,
குட்டைக்கால் கோழி.
நந்தனம்கோழி ஆராய்ச்சி நிலையத்தில் நந்தனம் ஒன்று மற்றும் நந்தனம் இரண்டு என்ற இருவகை உயரினக்கோழிகள் உற்பத்தி செய்தனர். ஆந்திர மாநிலத்தில் வனராஜா என்ற உயரினக்கோழியை உற்பத்தி செய்தனர்.பெங்களூரு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் கிரிராஜா மற்றும் சுவர்ணதாரா என்னும் உயரினக் கோழிகளைஉற்பத்தி செய்து புறக்கடை முறையில்கோழி வளர்ப்பதற்காக நமக்கு கொடுத்துள்ளனர்.
கோழிகள் தேர்வு:
நல்ல ஆரோக்கியமான கோழிகள் மற்றும் சேவல்கள் மிடுக்காகவும் தன்னைச் சுற்றி நடக்கும் காரியங்களில்கவனமுள்ளவையாகவும் இருக்கும் வேகமான நடை, வேகமான ஓட்டம், தேவைக்கேற்ப சில மீட்டர்கள் தூரம் பறத்தல்,சில நேரங்களில் கொக்கரித்தல், கூவுதலுமாக இருக்க வேண்டும். பொதுவாகச் சேவல்கள் இனச்சேர்க்கையில்பிரியமுள்ளவைகளாய் இருக்கும். நல்ல அகலமான நெஞ்சம், நீண்ட உடலமைப்பும் நல்ல சேவலுக்கு உதாரணமாகும்.கோழியின் சுகத்தை கொண்டைல் பார் என்பார்கள். நல்ல சிவந்த பளிச்சென்ற கொண்டை நல்ல சுக தேகத்தைக்குறிக்கும். கால்கள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்துடன் இருக்க வேண்டும். நம் நாட்டு சூழலுக்கேற்ப வளரக்கூடிய ப்ரம்மாரகக்கோழிகளை தேர்ந்தெடுப்பது நல்லது. தேவையான அனைத்து உணவுச்சத்துக்களும் அடங்கிய சரிவிகிதத்தீவனத்தையே எப்பொழுதும் உபயோகிக்க வேண்டும். தீவனத் தொட்டியில் போதுமான இடவசதி, கோழிகளுக்குக்கிடைக்கும் வண்ணம் தேவையான எண்ணிக்கையில், தீவனத் தொட்டிகளை வைக்க வேண்டும். தீவனத் தொட்டியின்மேற்புற விளிம்பு, கோழிகளின் முதுகுப்புறத்திற்கு இணையான நேர்கோட்டில் இருக்கும்படி வயதுக்கு ஏற்பதீவனத்தொட்டியின் உயரத்தை மாற்றி அமைத்துவர வேண்டும். சரிவர அமைக்கப்பட்ட தீவனத் தொட்டிகளை மட்டுமேஉபயோகிக்க வேண்டும். அரைக்கப்பட்ட தீவனத்தைத் தொடர்ந்து பல நாட்களுக்குச் சேமித்து வைக்கக்கூடாது. தீவனமூடைகளை ஒரு அடி உயரம் உள்ள மரச்சட்ட அமைப்புகளின் மீது சுற்றுப்புறச் சுவரிலிருந்து ஒரு அடி உயரம் உள்ளமரச்சட்ட அமைப்புகளின் மீது சுற்றுப்புறச் சுவரிலிருந்து ஒரு அடி தள்ளி இருக்கும்படிதான் அடுக்கி சேமிக்க வேண்டும்
நாட்டுக் கோழி வளர்ப்பு முறைகள்
மேய்ச்சல் முறை / புறக்கடை வளர்ப்பு
ஒரு சென்ட் பரப்பளவில் 200 கோழிகள் வளர்கலாம். போதுமான நிழல், பசுந்தீவனம், தீவனம், தண்ணீர்கிடைக்கப் பெறுமாறு செய்திடல் வேண்டும்.
மித தீவிர முறை
கொட்டில் கலந்த மேய்ச்சல் முறையில் வளர்க்கும் போது ஒரு சென்ட் பரப்பளவில் 700 கோழிகள் வளர்க்கலாம்.கோழிகள் புழு , பூச்சி , தானியங்கள் , இலை, தழைகளை உண்டு வாழும்.
தீவிர முறை
கோழிகளை தரை கூண்டு அல்லது பரண் மேல் விட்டு வளர்ப்பது.
கூண்டு முறை
கம்பிகள் பின்னப்பட்ட கூண்டுகளில் குஞ்சுகள் முதல் கோழிகள் வரை வளர்ப்பது.
"மெய்ச்சல்ல வளர்ந்தாதான் அது நாட்டுக் கோழி "
தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் திண்டுக்கல் பயிற்சி மைய தலைவர் மற்றும் துணைப்பேராசிரியர் பீர் முகமதுவிடம், நாட்டுக் கோழி வளர்ப்பு பற்றி கேட்டபோது, "பிராய்லர் கோழிகளைத் தவிர்த்துவிட்டுநாட்டுக் கோழிகளை வளர்க்குற விஷயம் கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு. ஆனா, லேயர், பிராய்லர் தீவனத்தைக்கொடுத்து நாட்டுக் கோழிகளை மொத்தமா அடைச்சு வெச்சு வளக்குறப்போ பிராய்லருக்கும் நாட்டுக் கோழிக்கும்வித்தியாசமே இல்லாமப் போயிடும். கம்பெனித் தீவனங்களில் வளர்ச்சி ஹார்மோன்களைத் தூண்டி விடுறதுக்காக சிலவேதிப்பொருட்கள கலக்குறாங்க. அதனால பல பிரச்னைகள் வருதுன்றது எல்லோருக்குமே தெரியும். கம்பெனித்தீவனத்தைச் சாப்பிடுற எந்தக் கோழியா இருந்தாலும், அதுங்களுக்கு ரசாயன பாதிப்பு இருக்கத்தான் செய்யும். அந்தக்கோழி கறியைச் சாப்பிடற மனிதர்களுக்கும் பாதிப்புகள் வரத்தான் செய்யும். அதில்லாம நாட்டுக் கோழிகளுக்கு நோய்த்தாக்குதல் இருக்காதுங்கிறது சரிதான். ஆனா, மேய்ஞ்சு, திரிஞ்சு இரையெடுக்குற கோழிகளுக்குத்தான் நோய் வராது.மொத்தமா அடைச்சு வெச்சா, கண்டிப்பா நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகும். அப்புறம் அதுக்கான மருந்து, ஊசினுபோடறப்ப... பழையபடி பிராய்லர் கோழி கணக்காத்தான் இருக்கும். இயற்கைச் சூழல்ல மேயவிட்டு வளர்த்தாதான் அதுமுழுமையான நாட்டுக் கோழி. மண்ணைக் கிளறி, கரையான், புழு பூச்சிகளைப் பிடிச்சு சாப்பிட்டு வளர்றகோழிகளுக்குத்தான் இயற்கையான சுவை இருக்கும். தோட்டங்கள்ல விவசாயத்தோட உபத் தொழிலா நாட்டுக் கோழிவளர்ப்பையும் விவசாயிகள் செய்தா... போதுமான அளவுக்கு நாட்டுக் கோழிங்க கிடைக்க ஆரம்பிச்சுடும். கிராமங்கள்லவீட்டுக்கு வீடு வளர்க்கலாம். புறக்கடை முறையில வீட்டுக்குவீடு நாட்டுக் கோழிங்க வளர்க்குறதை எங்க துறை மூலமாஊக்கப்படுத்திக்கிட்டிருக்கோம். கொஞ்சம் பெரிய அளவுல வளர்க்கணும்னு நினைக்கறவங்க, தனித்தனியா 75 சதுரடிஇருக்குற கொட்டகைகள்ல, 10 பெட்டைக்கு 2 சேவல்ங்கிற விகிதத்துல வெச்சு நாமளே தீவனத்தைத் தயார் பண்ணிக்கொடுத்து வளக்கலாம். அந்தக் கோழிகள் மேயுறதுக்காக வலை அடிச்சு கொஞ்ச இடத்தை ஒதுக்கிக் கொடுக்கலாம்.அப்பதான் தரமான நாட்டுக் கோழிகளை உருவாக்க முடியும். இந்த முறையில அடை வெச்சே வருஷத்துக்கு எண்ணூறுகுஞ்சுகளை உற்பத்தி பண்ண முடியும். இதுபத்தின தொழில்நுட்பம் தேவைப்படுறவங்க எங்க ஆராய்ச்சி மையத்துக்குவந்து தெரிஞ்சுக்கலாம்" என்று அழைப்பு வைத்தார்.
ஆடு, பிராய்லர் கோழி, மீன் என பல்வேறு இறைச்சி வகைகள் இருந்தாலும், அசைவ பிரியர்கள் அதிகம்விரும்புவது நாட்டுக் கோழியை தான். அதன் சுவையே தனி. பண்ணை அமைத்து இக்கோழிகளை கவனத்துடன்வளர்த்தால், நல்ல லாபம் குவிக்கலாம்’ என்கிறார் ஈரோடு நஞ்சை ஊத்துக்குளி ரூஸ்டர்ஸ் கேட்சர்ஸ் நிர்வாகஇயக்குனர் பாலு. அவர் கூறியதாவது: நாட்டுக்கோழிகளின் முட்டை, இறைச்சிக்கு மக்களிடம் மவுசு உள்ளது. ஆனால்தேவைக்கேற்ற உற்பத்திதான் இல்லை. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய இத்தொழிலை முறையாகமேற்கொண்டால் நிரந்தர வருமானம் பெற முடியும். பொதுவாக கிராமங்களில் வீடுகளில் நாட்டுக்கோழி வளர்ப்பதுவழக்கம். விற்பதற்காக வளர்க்காமல், தங்கள் தேவைக்கு பயன்படுத்துவார்கள். இதையே தொழிலாக செய்தால் நல்லபார்க்கலாம்.
கிராமப்புற விவசாயிகள் விவசாய நிலம் மற்றும் வீட்டை ஒட்டியே ஷெட் அமைத்து பண்ணை முறையில்நாட்டுக்கோழி வளர்க்கலாம். தினசரி காலை 2 மணி நேரம், மாலை 2 மணி நேரம் பராமரிப்புக்கு செலவிட்டால் போதும்.நாட்டுக்கோழி குஞ்சுகளை பொரிப்பகங்களில் இருந்து வாங்கி வந்து வளர்க்கலாம். முட்டையாக வாங்கி, கருவிகள்மூலம் நாமே பொரிக்க செய்து குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம். முட்டைகளை அடைகாக்க இன்குபேட்டர் மெஷின்,அடை காத்த முட்டைகளை பொரிக்க வைக்க கேட்சர் மெஷின் தேவைப்படும். பராமரிப்பு முறைகள் பண்ணை வைக்கும்இடத்தில் வெளியிலிருந்து வரும் மற்ற பறவைகளை அண்ட விடக்கூடாது. அந்நிய பறவைகள் மூலம்தான்கோழிகளுக்கு பறவை காய்ச்சல் தாக்கும் அபாயம் உள்ளது. பண்ணைக்குள் மரம் வளர்க்கக் கூடாது. செடி, கொடிகள்இல்லாமல் இருப்பது கோழிகளுக்கு நல்லது. பண்ணைகளுக்கு அருகில் அதிக சத்தம் வரும் வெடிகளை வெடிக்காமல்பார்த்துக் கொள்ள வேண்டும். கோழிப்பண்ணையில் எப்போதும் பாடல்களை ஒலிக்கும்படி செய்தால், மற்ற சத்தங்கள்கோழிகளை பாதிக்காது.
முதல் 48 நாட்களுக்கு புரோட்டீன் அதிகமுள்ள தீவனங்களை மட்டுமே குஞ்சுகளுக்கு தர வேண்டும். 48நாட்களுக்கு பிறகு தீவனத்துடன் கீரை மற்றும் கரையான்களை கலந்து கொடுக்கலாம். எடை அதிகரிக்க குஞ்சுகளின்வளர்ச்சிக்கு ஏற்றபடி பனங்கருப்பட்டியை தண்ணீரில் கலந்து கொடுக்கலாம். கேரட், பெரியவெங்காயம் போன்றவற்றைபொடியாக நறுக்கி தீவனத்துடன் கொடுக்கலாம். 45 நாட்களுக்கு மேல் கடைசி வரை ஏதாவது ஒரு கீரை வகையைபொடியாக நறுக்கி மதியத்துக்கு மேல் கோழிகளுக்கு கொடுக்கலாம். இதனால் தீவனச்செலவு குறையும். கறியின்ருசியும் அதிகரிக்கும்.
வளர்ப்பது எப்படி?
அதிகம் காற்று புகாத நான்கு பக்க சுவர் உள்ள அறையில், 30 அடி நீளம், 2 அடி உயரம் உள்ள கெட்டியான தகடால்வட்ட வடிவில் வளையம் அமைக்க வேண்டும். குஞ்சுகள் இரவு நேரங்களில் குளிரை தாங்குவதற்காக, வளையத்துக்குள்ஒரு அடி உயரத்தில் 100 வாட் பல்புகள் 4 பொருத்த வேண்டும். வெயில் காலங்களில் 300 குஞ்சுகளுக்கு 100 வாட் பல்புமூன்றும், குளிர்காலத்தில் நான்கும் பொருத்தினால் தேவையான அளவு வெப்பம் இருக்கும். வட்டத்துக்குள் 2 இஞ்ச்உயரத்துக்கு நிலக்கடலைதோல் போட்டு சீராக பரப்பி, அதன்மேல் பேப்பர் விரிக்க வேண்டும். அதனுள் தீவனத்தொட்டிமற்றும் தண்ணீர் தொட்டி வைக்க வேண்டும். அதற்குள் 300 குஞ்சுகளை வளர்க்கலாம். தினசரி பேப்பரை மாற்றவேண்டியது அவசியம். அறையில் 20 நாட்கள் வளர்த்த பின்னர், நல்ல காற்றோட்டம் உள்ள பண்ணைக்கு மாற்றவேண்டும். அங்கு தரையில் நிலக்கடலைதோல் அல்லது தேங்காய் நார்க்கழிவு அல்லது மரத்தூள் சுமார் ஒன்றரைமுதல் 2 இஞ்ச் அளவுக்கு பரப்பி கொள்ள வேண்டும். இவை கெட்டியாகி விடாமல் இருக்க அடிக்கடி கிளறி விடவேண்டும்.
கோழிகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொத்துவதை தவிர்ப்பதற்காக, 20 முதல் 30 நாட்களுக்குள்ளாககுஞ்சுகளின் மூக்கு நுனியை வெட்ட வேண்டும். இங்கு 60 நாட்கள் வளர்க்க வேண்டும். மொத்தமாக 80 நாட்கள்பூர்த்தியானதும், சேவல்களை உடனடியாக விற்பனைக்கு அனுப்பலாம். கோழிகளை கூடுதலாக 10 முதல் 20 நாட்கள்வரை வளர்த்த பின்னர் விற்பனைக்கு அனுப்ப வேண்டும்.
குஞ்சு பொரிப்பு பண்ணையில் வளர்க்கப்படும் தாய்க்கோழி இடும் முதல் 2 முட்டைகள் குஞ்சு வளர்ப்புக்குதகுதியற்றது. இதர முட்டைகளில் எடை குறைவு, ஒழுங்கற்ற அமைப்புள்ள முட்டைகளை தவிர்க்க வேண்டும். மற்றமுட்டைகளை இன்குபேட்டர் மெஷினில் 18 நாட்கள் 99.6 டிகிரி சென்டிகிரேடு வெப்பம், 70 டிகிரி சென்டிகிரேடு ஈரப்பதம்உள்ளவாறு வைக்க வேண்டும். ஒரே நேரத்தில் 10 ஆயிரம் முட்டைகளை வைக்கலாம். பின்னர் கேட்சர் மெஷினில் 3நாள் வைத்தால் முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவரும்.
நாட்டுக்கோழி பராமரிப்பு
இளம் நாட்டுகோழி குஞ்சுகள் பராமரிப்பு ( 1 - 7 வாரம்)
குஞ்சுகளை பெறுவதற்கு முன் கொட்டகைகளில் அடைப்பான்களை அமைக்க வேண்டும். ஒரு அடைகாப்பானில்அதிகபட்சமாக 250 – 300 குஞ்சுகளை வைத்து வளர்க்கலாம். முதல் வாரத்தில் 95 பாரன்கீட் என்றளவில் வெப்பம், பிறகுஒவ்வொரு வாரமும் 5 பாரன்கீட் என்றளவில் வெப்பத்தை குறைத்து கொடுக்க வேண்டும். குஞ்சு பருவ தீவனத்தைகொடுத்து வளர்க்க வேண்டும். சுடவைத்து ஆற வைத்த தண்ணீரை குஞ்சுகளுக்கு கொடுக்க வேண்டும். நியோ மைசின்,டாக்சி சைக்லின், செபலேக்சின் போன்ற கோழி குஞ்சுகளுக்கு நோய் பாதிப்பை தடுக்க கொடுக்கப்பட வேண்டும்.
வளர் நாட்டுகோழி பராமரிப்பு (8 - 18 வாரம்)
இப்பருவத்தில் கோழிகளுக்கு கொடுக்கப்படும் தீவனத்தில் புரதசத்தின் அளவு சதவீதம் இருக்க வேண்டும்.எரிசக்தியின் அளவு 2700 கிலோ கலோரியாகவும் , நார் சத்தின் அளவு 8 சதவீதத்திற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். 17 வது வார துவக்கத்தில் பேன், செல் போன்ற வெளிப்புற ஒட்டுண்ணிகள் காணப்பட்டால் அதை ஒழிப்பதற்கு
1-2 மி.லி டெல்டா மெத்திரின் என்ற மருந்தை (பியுட்டாக்ஸ்) லிட்டர் தண்ணீர் கலந்து கோழிகளின் தலைப்பகுதிதவிர முக்கி எடுத்தல் வேண்டும். மேலும் கொட்டகைகளிலும் தெளித்து விட வேண்டும். இந்த மருந்து கோழிகளைவெயில் அடிக்கும் மதிய வேளையில் மேற்கொள்ள வேண்டும். பருவநிலை மாற்றத்தின் போது கோழிகளின் சுவாசகோளாறு ஏற்ப்பட்டால் என்ரோ பிலாக்சசின் மில்லி /கோழி என்ற அளவு தண்ணீரில் கொடுக்க வேண்டும்.
முட்டையிடும் நாட்டுக்கோழி பராமரிப்பு ( 18 வாரம் முதல் )
ஒரு கோழி ஒரு வருடத்தில் சுமார் 60 முதல் 80 முட்டைகள் வரை இடும். ஒரு பருவத்தில் 12 – 18 முட்டைகள்இடும். கலப்பின நாட்டுக் கோழியான நாமக்கள் கோழி 1 240 - 280 முட்டைகள் வரை இடும். இப்பருவத்தில் 18 சதவீதபுரதமும், 2700 கிலோ கலோரி எரிசக்தி தீவனம் அளித்தல் வேண்டும். ஒரு முட்டை கோழி தினமும் 240 – 300 மி.லிட்டர்தண்ணீர் குடிக்கும்.
கோடைகால பராமரிப்பு
கோழிகள் தீவனம் இல்லாமல் பல நாட்களுக்கு உயிர்வாழும். ஆனால் தண்ணீர் இல்லாமல் அவற்றால்உயிர்வாழ முடியாது. கோழிகளைப் பொறுத்தமட்டில் தண்ணீர் இன்றியமையாப் பொருளாகும். கோடை காலங்களில்சுற்றுப்புற வெப்பத்தை குறைப்பதில் தண்ணீர் பெரும்பங்காற்றுகிறது. வணிக அளவில் வளர்க்கப் படும்இறைச்சிக்கோழிகளுக்கு அவை உண்ணும் தீவனத்தைப் போல இரு மடங்கு தண்ணீர் தேவை. கோடையில் கோழிகளின்உடலிலிருந்து கூடுதலாக வெப்பம், அவை விடும் மூச்சுக் காற்றின் மூலமே வெளியேறுகிறது. பறவைகளைப்பொறுத்தமட்டில் வியர்வைச் சுரப்பிகள் இல்லாத காரணத்தால் கூடுதலாக உண்டாகும் உடல்வெப்பத்தை வியர்வைமூலம் வெளியேற்ற இயலாது. எனவே கோழிகளால் சுவாசக் காற்று மூலம்தான் உடல் சூட்டினை தணித்துக் கொள்ளமுடியும். இதற்காக கோழிகளுக்கு பெருமளவு தண்ணீர் தேவைப் படுகிறது. கோடையில் ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும்வெப்ப அயர்ச்சியைக் குறைக்க தகுந்த தண்ணீர் கொடுப்பதன் மூலம் குறைக்கலாம். இத்துடன் தாது உப்புக்களையும்போதிய அளவு சேர்த்துக் கொடுத்தால் வெப்ப அயர்ச்சி குறைபாட்டை நீக்குவதுடன் கோழிகளுக்கு தண்ணீர் குடிக்கவேண்டும் என்ற எண்ணத்தையும் தூண்டுகின்றன. தண்ணீரில் நோய் உண்டாக்கும் கிருமிகளின் அளவைக் குறைக்ககுளோரின் பவுடர், அயோடின் கலவைகள், ஹைட்ரஜன் பெர் ஆக்சைடு போன்றவற்றை பயன் படுத்தலாம். இதில்குறைந்த செல வில் குளோரின் வாயுவைப்பெற 1000 லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் வரை பிளீச்சிங் பவுடரைப்பயன்படுத்தலாம். அயோடின் தயாரிப்புகளை 10 லிட்டருக்கு 1 மிலி வீதம் பயன்படுத்தலாம். தரமற்ற குடிநீர் கோழிக்குரத்தக்கழிச்சல், சால்மோனல்லோசிஸ், கோலி பேசில்லோசிஸ் போன்ற நோய் பாதிப்புகளை உண்டாக்குவதுடன்அவற்றின் உற்பத்தி திறனையும் குறையச் செய்கின்றன. முட்டையிடும் கோழிகள் முட்டையிட்டவுடன் அதிக அளவுதண்ணீரைக் குடிக்கும். இரவு நேரங்களில் வெளிச்சத்துக்காகப் போடப்படும் விளக்குகளை அணைப்பதற்கு முன்னும்,அதிக தண்ணீர் அருந்தும். இறைச்சிக் கோழிகளைப் பொறுத்தமட்டில் சூரிய ஒளி பட்டவுடன் அல்லது செயற்கையாகவெளிச்சம் அளித்தவுடன் அதிக அளவு தண்ணீர் குடிக்கும். எனவே கோடையின் வெப்பத் தாக்குதலை உணர்ந்து, தகுந்தஅளவில், தரமுள்ள தண்ணீர் கோழிகளுக்கு வழங்க வேண்டும்.
சிமென்ட் தரை கொண்ட கோழி வீட்டில் மரத்தூள், மரஇழைப்பு சுருள், நெல் உமி, நிலக்கடலைத் தோல், கரும்புசக்கை, துண்டிக்கப்பட்ட மக்காச் சோளத் தக்கை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை உபயோகித்து கோழிகளைவளர்க்கலாம். ஆழ்கூளமாக உபயோகப்படுத்தும் பொருட்கள் நன்றாக ஈரத்தை உறிஞ்சக்கூடியதாக இருக்க வேண்டும்.மலிவு விலையில் உள்ளூரிலேயே கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். மற்றும் ஆழ்கூளத்தை கிளறிவிடும் போதுகாற்றில் எளிதில் உலரக் கூடியதாக இருக்க வேண்டும். கோழி வளர்ப்பில் ஆழ்கூளப் பராமரிப்பு மிகவும் முக்கியமானதாகும். கூளத்தை தினமும் நன்கு கிளறிவிட வேண்டும். கோழி வீட்டின் காற்றோட்டம், கோழிகளின் வயது,எண்ணிக்கை, எடை மற்றும் தட்பவெப்ப நிலை ஆகியவற்றினை பொருத்து ஆழ் கூளத்தில் ஈரப்பதம் அதிகமாகிகெட்டியாகிவிடும். மேலும் அமோனியா வாயு உற்பத்தி ஆகி கோழிகளுக்கு கண் எரிச்சல், சுவாச நோய்கள் பாதிப்புஆகியவை ஏற்படுவதோடு அல்லாமல் ரத்த கழிச்சல் நோயும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இதன் விளை வாககோழிகளின் இறப்பு விகிதம் அதிகமாவதோடு பாதிக்கப்பட்ட கோழிகள் சரியாக தீவனம் தண்ணீர் சாப்பிடாமல், வளர்ச்சிகுன்றி, எடையும் குறைந்து காணப் படும். ஆழ்கூளத்தில் ஈரப்பதம் 25 விழுக்காட்டிற்கு மிகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ஈரம் அதிகமானால் 100 சதுர அடிக்கு 8 முதல் 10 கிலோ சுண்ணாம்புத் தூள் கலந்து தூவிவிட்டுகிளறிவிடுவது நல்லது. முதல் மூன்று வாரம் வரை ஆழ்கூளப் பொருளை 5 செ.மீ. உயரத்திற்கும் மூன்று வாரத்திற்குப்பிறகு 10 செ.மீ. உயரத்திற்கும் கோழி வீட்டில் நிரப்ப வேண்டும். ஆழ்கூளத்தை ஒரு நாளைக்கு இரண்டு தடவைகிளறிவிட வேண்டும்.
தீவன கலவைக்கு (100 கிலோ கிராம்) தேவையான மூலப்பொருட்களும் அளவுகளும்
1 மக்காச்சோளம் 40 கிலோ
2 சோளம் 7 கிலோ
3 அறிசிகுருணை 15 கிலோ
4 சோயா புண்ணாக்கு 8 கிலோ
5 மீன் தூள் 8 கிலோ
6 கோதுமை 5 கிலோ
7 அரிசித் தவிடு 12.5 கிலோ
8 தாது உப்புக் கலவை 2.5 கிலோ
9 கிளிஞ்சல் 2 கிலோ
மொத்தம் 100 கிலோ
புறக்கடையில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளுக்கு புரத சத்து மிகக் குறைவாகவே கிடைக்கிறது. இதனை ஈடுசெய்வதற்கு புரதச்சத்து நிறைந்த பானைக் கரையானும், அசோலாவும் கொடுத்து வளர்க்கும் பொழுது தீவன செலவுவெகுவாக குறைய வாய்ப்புள்ளது. சிறு வெங்காயம் மற்றும் கீரைகளை நறுக்கி நாட்டுக் கோழிகளுக்கு உணவாககொடுக்கலாம்.
மூலிகை மருத்துவம்
சின்ன சீரகம் 10 கிராம்
கீழாநெல்லி 50 கிராம்
மிளகு 5 கிராம்
மஞ்சள் தூள் 10 கிராம்
வெங்காயம் 5 பல்
பூண்டு 5 பல்
சிகிச்சை முறை (வாய் வழியாக)
சீரகம் மற்றும் மிளகினை இடித்த பின்பு மற்ற பொருள்களோடு கலந்து அரைத்து இக்கலவையை தீவனம்அல்லது அரிசி குருணையில் கலந்து கொடுக்கவும். மிகவும் பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு சிறு சிறு உருண்டைகளாக உட்செலுத்தவேண்டும்.
கோழிகளுக்கு சிறந்த தீவனம் அசோலா
அசோலா ஓர் உன்னத கால்நடை மற்றும் கோழித்தீவனமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள்அசோலாவைத் தங்கள் தோட்டங்களிலேயே வளர்த்து கால்நடை மற்றும் கோழிகளுக்கு தீவனமாக வழங்குவதன்மூலம் நல்ல உற்பத்தி பெறலாம். இதுகுறித்து விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் க.சுப்பிரமணியன் மற்றும் உதவிப் பேராசிரியர் வெ. தனுஷ்கோடி கூறியது: "அசோலா தண்ணீரில் மிதக்கக்கூடிய பெரணிவகையைச் சேர்ந்த தாவரமாகும். இதை விவசாயிகள் உயிர் உரமாக நெல் வயலுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.சமீபகாலமாக அசோலா ஓர் உன்னத கால்நடை மற்றும் கோழித்தீவனமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 25முதல் 30 விழுக்காடு வரை புரதச்சத்து உள்ளது. கால்நடைகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள், தாது உப்புகள்,வைட்டமின்கள் மற்றும் பீட்டாகரோடின் ஆகிய சத்துகள் இதில் உள்ளன. பீட்டாகரோடின் நிறமியானது வைட்டமின் ஏஉருவாவதற்கு மூலப்பொருளாக உள்ளது. இச்சத்து உள்ளமையால் கோழிகளுக்கு நோய் எதிர்ப்புச் சத்துஅதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் அசோலா சாப்பிட்ட கோழியின் முட்டைகளை நாம் உண்பது கண்பார்வைக்கு நல்லது.அசோலா உற்பத்தி முறைகள்: நிழல்பாங்கான இடத்தில் 10 அடி நீளம், 2 அடி அகலம், 1 அடி ஆழம் கொண்ட பாத்திஅமைத்து, பாத்தியின் அடித்தளத்தில் சில்பாலின் காகிதத்தை சீராக விரிக்கவும். பாலீத்தீன் காகிதத்தின் மேல் 2 செ.மீ.அளவுக்கு மண் இட்டு சமப்படுத்தவும். இதன்மேல் 2 செ.மீ. அளவுக்கு தண்ணீர் ஊற்றவும். பின் பாத்தி ஒன்றுக்கு 100கிராம் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 5 கிலோ அசோலா தாய் வித்து இடவேண்டும். நாள்தோறும் காலை அல்லது மாலைவேளையில் பாத்தியில் உள்ள மண்ணை நன்கு கலக்குவதால் மண்ணில் உள்ள சத்துகள் தண்ணீரில் கரைத்துஅசோலாவிற்கு எளிதாக கிடைக்கும். 15 நாள்களில் ஒரு பாத்தியில் (10 அடி நீளம், 2 அடி அகலம், 1 அடி ஆழம்) 30 முதல்50 கிலோ அசோலா தாயாராகி விடும். மூன்றில் ஒரு பங்கு அசோலாவை பாத்தியிலேயே விட்டு எஞ்சிய 2 பகுதியைஅறுவடை செய்யலாம். 10 நாள்களுக்கு 1 முறை பசுஞ்சாணம் கரைப்பது நல்லது. பூச்சித்தொல்லை வந்தால் 5 மில்லிவேப்பெண்ணையை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து பாத்தியில் தெளிக்கவும். அசோலாவின் உற்பத்தி கோடைகாலங்களில் சிறிது குறைந்தும், மழைக்காலங்களில் அதிகரித்தும் காணப்படும். மூன்று அல்லது நான்கு பாத்திகள்அமைத்து தினமும் அசோலாவை அறுவடை செய்து கால்நடை மற்றும் கோழிகளுக்குச் சத்து நிறைந்த சுவைமிகுந்தஉணவாகப் பயன்படுத்தலாம். அசோலாவை பச்சையாகவோ அல்லது உலர் தீவனமாகவோ கோழிகளுக்குப்பயன்படுத்தலாம். அசோலாவை பச்சைத் தீவனமாக முதன் முதலாகப் பயன்படுத்தும் பொழுது அவற்றை உண்பதற்குதயக்கம் காட்டலாம். ஆகையால் ஆரம்பகட்டத்தில் அசோலாவைத் பிற அடர் தீவனத்துடன் கலந்து கோழிகளுக்குப்தீவனமாகப் பழக்கப்படுத்த வேண்டும். அசோலாவின் பயன்கள்: அசோலாவை உண்ணும் கோழி முட்டையின் எடை,அல்புமின், குளோபுலின் மற்றும் கரோடின் அளவு, அடர் தீவனம் மட்டும் இடப்பட்ட கோழி முட்டையின் சத்தைவிடஅதிகமாக உள்ளது. இந்தியாவில் வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும் ஒருங்கிணைந்து பின்பற்றப்படுகிறது.அசோலா குறைந்த செலவுள்ள இடுபொருளாக கால்நடை வளர்ப்பில் பயன்படுகிறது. மேலும், நெல் விளைச்சலில்இயற்கை உரமாக செயல்பட்டு மண்ணின் தரத்தை மேம்படுத்துகிறது. எனவே, அசோலா ஒருங்கிணைந்தபண்ணையத்தில் மிக முக்கியமான இடு பொருளாகும். பெரணி தாவரமான அசோலாவின் வளர்ச்சிக்கு மிதமானவெப்பநிலையான 35-36 டிகிரி செல்சியஸ் வெப்பம் தேவைப்படுகிறது. ஆகையால் உயர்ந்த வெப்பநிலையில்அசோலாவின் வளர்ச்சி தடைபடுவதால் உற்பத்தி குறைகிறது. ஆகவே, மிகவும் வறண்ட பகுதியில் இந்ததொழில்நுட்பத்தைப் பின்பற்றுவது கடினமாகும்.
கரையானின் தீமைகள் குறித்தே அறிந்த பலருக்கு கரையான் தீவனமாகப் பயன்படும் என்றால்ஆச்சரியமாகத்தானே இருக்கும். நாட்டுக் கோழி வளர்ப்பவர்களுக்கு கரையான் சிறந்த உணவாக பயன்படுகிறது.கரையான் உற்பத்தி செய்து கோழிக் குஞ்சுகளுக்குத் தீனியாகக் கொடுத்தால், கரையான் சாப்பிட்ட குஞ்சுகள் மற்றகுஞ்சுகளைவிட இருமடங்காக வளர்ச்சியடையும். தேவையான பொருட்கள் 1. ஒரு பழைய பானை 2. கிழிந்த கோணி/சாக்கு 3. காய்ந்த சாணம் 4. கந்தல் துணி, இற்றுப்போன கட்டை, மட்டை, காய்ந்த இலை, ஓலை போன்றநார்ப்பொருட்கள் கரையான் உற்பத்தி செய்முறை மேற்கண்டவற்றை பழைய பானையினுள் திணித்து சிறிது நீர்தெளித்து வீட்டிற்கு வெளியே தரையில் கவிழ்த்து வைத்துவிட வேண்டும். முதல் நாள் மாலை கவிழ்த்து வைத்தால்மறுநாள் காலை திறந்து பார்த்தால் தேவையான கரையான் சேர்ந்திருக்கும். தாய்க்கோழி உதவியுடன் குஞ்சுகள்உடனடியாக எல்லா கரையானையும் தின்று விடும். கரையான் தின்று அரை மணி நேரத்திற்கு தண்ணீர்கொடுக்கக்கூடாது. ஒரு பானையில் சேரும் கரையான் 10-15 குஞ்சுகளுக்கு போதுமானது. கிடைக்கும் கரையானின்அளவு இடத்திற்கு இடம் மாறுபடும். செம்மண் பகுதியில் அதிகம் கிடைக்கும். அதிகம் தேவை என்றால் ஒன்றுக்கு மேல்எத்தனை பானைகள் வேண்டுமானாலும் கவிழ்த்து வைக்கலாம். மக்கள் கரையான் உற்பத்தியை காலங்காலமாககோழிக்குஞ்சுத் தீவனத்திற்காக செய்தார்கள். இத் தொழில் நுட்பத்தை அறிவியல் நோக்கில் பார்க்கலாம். கரையான்செயலாற்றும் முறை இங்கு குறிப்பிடும் கரையான் ஈர மரக்கரையானாகும். மேலும் கரையான் ஆடு,மாடுகளைப் போல்நார்ப் பொருளை உண்டு வாழும் பூச்சியினமாகும். கரையானின் குடலிலும் நார்ப் பொருள்களைச் செரிக்கநுண்ணுயிரிகள் உண்டு. கரையான் சக்திக்கு நார்ப்பொருளையும், புரதத் தேவைக்கு மரக்கட்டையிலுள்ளபூஞ்சக்காளானையும் பயன்படுத்திக்கொள்கிறது. பானையிலுள்ள பொருட்களில் நீர் தெளிப்பது கரையான் எளிதில்தாக்க ஏதுவாக அமையும். கரையான்கள் பொதுவாக இரவில் அதிகமாக செயல்படும் என்பதால் மாலையில் பானைகவிழ்க்கப்படுகிறது. காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக கரையானை எடுத்து விடுவது சிறந்தது. எறும்புகள்தாக்குதல் உள்ள பகுதியில் பகலில் அலைந்து திரியும் எறும்புகள் கரையானைத் தின்று விடும். கரையான் சத்து மிக்கது.அதில் புரதம் 36%, கொழுப்பு 44.4%, மொத்த எரிசக்தி 560கலோரி/ 100கிராம் போன்றவை உள்ளன. சில வகைகரையானில் வளர்ச்சி ஊக்கி 20% உள்ளது. இதன் காரணமாகவே கோழிக் குஞ்சுகள் விரைந்து வளர்ந்து எடை கூடுகிறது.கோழிக் குஞ்சுகளுக்கு சிறந்த புரதம் செரிந்த தீவனமாக கரையான் அமைந்ததால், காலம் காலமாக தென் தமிழ்நாட்டுமக்களால் கரையான் உற்பத்தி செய்யப்பட்டது. இச்செயல்பாடுகளை ஆய்விட்டபோது பல கூடுதல் நன்மைகள்ஏற்படுவது தெரியவந்தது. நன்மைகள் கரையான் உற்பத்திக்கு என்று பானை கவிழ்த்தும் போது கரையான்கள் வீடுகள்,வீட்டுப் பொருட்கள் மற்றும் மரங்களைத் தாக்குவதில்லை. பானையிலிருந்து எழும் ஒரு வகை வாசனைகரையான்களை கவர்ந்து ஈர்க்கும். ஆகவே மற்ற இடங்களைத் தாக்குவதில்லை. பானையில் வைக்கும் நனைந்தபொருட்கள் மற்றும் சாணம் கரையான்களுக்கு மிக பிடித்துள்ளன. கரையானைப் பிடித்து அழிப்பதற்குப் பதில் கோழிக்குஞ்சுக்கு தீவனமாகக் கொடுத்து விடுகிறோம். அடுத்து கரையானை ஒழிக்க கடுமையான பூச்சிக் கொல்லிகளைப்பயன்படுத்தும்போது சுற்றுச் சூழலும் பாதிக்கப்படுகிறது அல்லவா? முடிவாக கரையான் உற்பத்தி என்ற எளியசெலவற்ற ஒரு தொழில் நுட்பத்தால் மூன்று பயன்கள் விளைகின்றன.
1. செலவற்ற கோழிக்குஞ்சு தீவனம்.
2. வீட்டுப் பொருட்கள், மரங்களுக்குப் பாதுகாப்பு.
3. பூச்சிக் கொல்லிக்கு என்று செலவு கிடையாது.
பூச்சிக் கொல்லி மருந்து தேவையில்லாததால் நமது சுற்றுப் புறச் சூழலும் பாதுகாக்கப்படுகிறது. இன்றேசெயல்படுங்கள், மாலை செயல்பட்டால் மறுநாள் காலை உங்கள் கோழிக் குஞ்சுகளுக்குத் தேவையான கரையான்கிடைத்துவிடும்.
செயற்கை முறை குஞ்சு பொரிப்பகம்
குஞ்சு பொரிப்பகம் உபயோகித்தும் நாட்டு முட்டைகளைப் பொரிக்கலாம். கோழியில் அடை வைப்பதைவிட இதுஇலகுவானது. கோழிகள் வருடத்திற்கு 4 முறை குஞ்சுகள் பொரிக்கும். ஆனால் செயற்கை முறை குஞ்சு பொரிப்பகம்அதை உபயோகிப்பவரின் திறமையைப் பொறுத்து 12 முறை குஞ்சுகள் பொரிக்கலாம். இவற்றின் மூலம் அதிகமாகக்குஞ்சு பொரிக்க முடியும். குஞ்சுப் பொரிப்பகமானது, செயற்கை முறையில் தேவையான வெப்பம் மற்றும் ஈரப்பதம்முட்டைகளுக்கு கொடுத்து குஞ்சு பொரிக்க உதவும் ஒரு இயந்திரமாகும். இதில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்றுஅடை காப்பான் (Setter) மற்றொன்று பொரிப்பன் (Hatcher) ஆகும்.
முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் திறனை அதிகரிக்க கோழி முட்டைஇட்டவுடன் அதை கீழ் கண்டவாறுபாதுகாக்க வேண்டும்.
அதாவது ஒரு இரும்பு சட்டியில் மணல் பரப்பி தண்ணீர் தெளித்து அதன் மேல் கோணிப்பை போட்டு முடவேண்டும் .முட்டைகளை இதன் மேல் வைத்து பருத்தி துணி கொண்டு முட வேண்டும்.இவ்வாறு பாதுகாத்துவைக்கப்படும் முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் திறன் 97 சதவிகிதம் வரை இருக்கும் .எனவே மேற்கூரிய முறையில்முட்டைகளை சேகரித்தால் அதிக குஞ்சுகள் கிடைக்கும் . சரியான காற்றோட்டம், தட்பவெட்பநிலை, ஈரப்பதம்முறையாக முட்டைகளை திருப்புதல் மட்டும் இல்லாமல் சுத்தமாக முட்டைகளையும் மட்டும் பொரிபகத்தையும்பராமரிப்பதன் மூலம் குஞ்சு பொரிக்கும் திறனை அதிகபடுத்த முடியும் .
நாட்டுகோழிகளின் நல மேலாண்மை
நாட்டு கோழிகளை தாக்கும் பொதுவான நோய்கள்
1) இராணிகெட் நோய் (வெள்ளை கழிச்சல்)
2) அம்மை நோய்
3) கோழி காலரா
4) சளி நோய்
5) ரத்த கழிச்சல் மற்றும் மஞ்சள் - ஈரல் நோய்
6) தலை வீக்க நோய்
7) ஒட்டுண்ணி பாதிப்புக்கள்
கோழிகளை தாக்கும் நோய்களில் வெள்ளை கழிச்சல் நோய் மிகவும் முக்கியமானது.இந்த நோய் கோழிகளைகோடை கால மற்றும் குளிர்கால பருவ மாற்றத்தின்போது அதிகமாக பாதிக்கும் இதை கொக்கு நோய் என்றும் கூறலாம்.இந்த நோய் தாக்கப்பட்ட கோழிகளின் குடலும் நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும்.இந்த நோய் தாக்கப்பட்ட கோழிகள்தீவனம் எடுக்காது தண்ணீர் குடிக்காது வெள்ளையாகவும் பச்சையாகவும் கழியும் எச்சம் இடும் பொது ஒரு காலைதூக்கிகொல்லும் ஒரு இறக்கை மட்டும் செயல் இழந்து தொங்கும் தலையை முறுக்கி கொள்ளும் இறந்த கோழிகளைபரிசோதனை செய்து பார்த்தால் இரைப்பையில் ரத்த கசிவு இருக்கும். வெள்ளை கழிச்சல் நோய் வராமல் தடுக்கதடுப்பூசி அவசியம் போட வேண்டும்
கோழி அம்மை நோய் இந்த நோய் பாதித்த கோழிகளில் முதலில் சிறு சிறு அம்மை கொப்புளங்கள் கண்கொண்டை நாசிபகுதி செவி மடல் போன்ற இடங்களில் காணபடுகிறது .பின்பு கொப்புளங்கள் ஏற்பட்ட இடங்களில்வடுக்கள் தென்படும். வாய் மற்றும் தொண்டை பகுதிகளில் புண்கள் ஏற்படுவதால் தீவனம் உற்கொள்ள முடியாமல்கோழி இறப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.இந்நோயை ஆறு வார வயதில் கோழி அம்மை தடுப்பு ஊசி போட்டுகட்டுபடுத்தலாம்.
7 வது நாள் முட்டைக் கோழிகள் ஆர் டி வி எப் 1 என்னும் இராணிகெட் நோய் தடுப்பு மருந்தினை கண்ணில்மற்றும் மூக்கில் 2 சொட்டுகள் கொடுக்க வேண்டும்
14 வது நாள் ஐ பி டி தடுப்பு மருந்தை கண் சொட்டு மருந்தாக கொடுக்க வேண்டும்
3- வது வாரம் லசோட்டா என்னும் இராணிகெட் நோய் நோய் தடுப்பு மருந்தினை கண் சொட்டு மருந்தாகஉபயோகிக்க வேண்டும்
5- வது வாரம் மீண்டும் லசோட்டா மருந்தினை கொடுக்க வேண்டும் 6- வது வாரம் கோழி அம்மை தடுப்பூசிஇறக்கையில் தோலுக்கு அடியில்(0.5 மில்லி) செலுத்த வேண்டும்
8- வது வாரம் ஆர் டி வி கே / ஆர் பி என்னும் நோய் இராணிகெட் நோய் தடுப்பூசியை இறக்கையில் தோலுக்குஅடியில் மில்லி செலுத்த வேண்டும்
18- வது வாரம் இராணிகெட் நோய் (ஆர் டி வி கே) நோய்க்கான தடுப்பூசியை மீண்டும் செலுத்த வேண்டும்
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குடி தண்ணிரில் லசோட்டா மருந்தினை கலந்து வைக்க வேண்டும்.லசோட்டா கொடுப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் குடற்புழு நீக்கம் செய்தல் வேண்டும் .
குறிப்பு:
தீவனம் அல்லது தண்ணீரில் வைட்டமின் கலவை மருந்துடன் சிறிது சுன்னாம்புதூள் கலந்து கொடுப்பதன்மூலம், முட்டைகளின் எண்ணிக்கைகளை அதிகரிப்பதுடன், தோல் முட்டை இடுவதையும் தடுக்கலாம்.
நாட்டு கோழி பண்ணை அமைக்க, நாட்டு கோழி குஞ்சுகள் கிடைக்கும் இடம் பற்றிய தகவல் பெறவும்இன்குபேட்டர் தேவைக்கும். நாட்டு கோழிகளை பற்றிய அனைத்து விதமான ஆலோசனைகளும் தொடர்பு கொள்ளவும்
நாகராஜன்
9659444878
GLOBAL LIVE FARM
இன்குபேட்டர்ஸ் & நாட்டு கோழி பண்ணை - வேங்கடகுளம், புதுகோட்டை
Subscribe to:
Posts (Atom)