SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Monday 15 June 2015

எண்ணிய செயலைச் செய்வதில் உறுதியாக இருங்கள்.


ஆண்மை எது?

'ஆண்மை' என்றால் என்ன? ஆளுமைத் தன்மை என்பது ஆண்மையின் பொருள்.ஆளுமைத் தன்மை என்றால், அது மனத் துணிவுதான்.செய்ய நினைத்த செயலை நினைத்தபடி செய்து முடிக்கும் வரையில் ஊக்கத்தோடும், தளரா முயற்ச்சியோடும் செய்வதுதான் ஆண்மையின் அடையாளம்.

இந்த ஆண்மை உணர்வை உங்களிடம் வளர்த்துக்கொள்ளுங்கள்;

முழுவதுமாக மனம் செலுத்துங்கள்

ஒரு செயலை செய்து முடிப்பதற்கு நினைக்கும் போது,அதிலேயே முழுவதுமாக மனம் செலுத்துங்கள்.'அப்படி செய்துவிடலாம். இப்படி செய்து விடலாம்' என்று உங்களிடம் வந்து பலர் யோசனை கூறுவார்கள்.அந்த வாய்ப்பேச்சுக்களை கேட்டு பரவசம் அடைந்து விடாதீர்கள்.

சொன்னபடி செய்வது' என்பது மிக மிக அரிய திறமையாகும்.அது வியந்து பாராட்டக்கூடியதுமாகும்.வெரும் வாய்ப்பேச்சு எல்லோருக்கும் எளிதானது.


குழப்பங்களை விலக்குங்கள்

உங்களைக் குழப்பும் எந்த வித ஆலோசனைகளையும் காது கொடுத்து கேளாதீர்கள்.'சர்க்கரை' என்று வாயால் சொன்னால் இனிக்காது.இப்படித்தான் வெறும் பேச்சும் பயன் தராது.

அக்கறை குறையக் கூடாது.

செய்ய நினைத்ததை, அதற்கு உரிய காலத்தில் செய்யத் தொடங்கி விடுங்கள். 'பின்னர் செய்யலாம்'என்று தள்ளிப் போட்டு காலத்தை கடத்தாதீர்கள். காலத்தோடு செய்யாத காரியத்தில் அக்கறையும் குறைந்துவிடும்.

மிகுதியான துன்பங்களை சந்திக்க வேண்டி வந்தாலும் அதைப் பற்றி கவலைபடாதீர்கள்.துணிவை உள்ளத்திலே நிறைத்துக்கொண்டு, துன்பத்தை எல்லாம் வென்று, செயலை முடித்து இன்பம் காணுங்கள்.


உலகம் மதியாது.

செய்கின்ற தொழிலில் உறுதியான மன ஈடுபாடு இல்லாதவர்களை உலகம் மதியாது..'திறமையற்றவர்கள்' என்றே கூறிப் பழிக்கும்.இந்தப் பழிக்கு ஒரு போதும் ஆளாகாதீர்கள்.'மனதில் உறுதி வேண்டும்' என்பது செயலாற்றுவதற்கு மிகவும் முக்கியமானது.முதன்மையானது.இந்த உறுதி இருந்தால் எண்ணியதைச் செய்து, பலனையும் அடைந்துவிட முடியும்.மன உறுதி இல்லாமல் செய்யும் காரியம் எல்லாமே சிதறிப்போய் விடும்.

எண்ணியபடி நடக்கும்

ஒரு செயலைச் செய்வதற்கு நினைத்தவர்கள், தாம் எண்ணியபடியே அதைச் செய்வதிலும் எப்போதுமே உறுதி உடையவராக இருக்க வேண்டும்.இப்படிப்பட்ட உறுதியுடையவர்களாக இருந்தால் தான் அவர்கள் எண்ணிய செயல்கள் அவர்கள் எண்ணியபடியே இனிதாக நிறைவேறும்

No comments:

Post a Comment