SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Thursday 18 June 2015

சமையல் குறிப்பு – மீன் குழம்பு

சமையல் குறிப்பு – மீன் குழம்பு

சமையல் குறிப்பு – மீன் குழம்பு
க‌டல் உணவுகளில் மிகையாக கிடைப்ப‍தும், அதீத சத்துமிக்க‍து மீன் என்றால் அது மிகையாகாது. அந்த மீனை வைத்து
மீன் குழம்பு வைப்ப‍து எப்ப‍டி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
மீன் – 1 கிலோ 
சின்ன வெங்காயம் – 15
தக்காளி – 3
பூண்டு – 13
பச்சை மிளகாய் – 2
காய்ந்த மிளகாய் – 12
தேங்காய் பூ – 4 டி ஸ்பூன்
புளி – எலுமிச்சை அளவு
சோம்பு – 1 டேபிள் ஸ்பூன் 
சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
மல்லி  – 3 டேபிள் ஸ்பூன் 
வெந்தயம் – 1 டி ஸ்பூன் 
மஞ்சள் தூள் – 1/2 டி ஸ்பூன்
கருவேபிள்ளை – 2 கொத்து 
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. மீனை நன்கு கழுவி எடுத்துகொள்ளவும். புளியை தண்ணிரில் ஊற வைக்கவும். 1/2 லிட்டர் தண்ணீரை தனியாக எடுத்து கொதிக்கவைத்து கொள்ளவும்.
2. சோம்பு ,சீரகம், மல்லி, 3 பூண்டு, 5 சின்ன வெங்காயம், தேங்காய் பூ இவற்றை எண்ணெய்யில் பொன்னிறமாக வறுத்து, நெய் போல் அரைத்து கொள்ளவும்.
3. 12 காய்ந்த மிளகாய், 1 தக்காளி இவற்றையும் அரைத்து வைத்து கொள்ளவும் .
4.அகன்ற பாத்திரத்தில் 1 கரண்டி எண்ணையை உற்றவும், அதில் வெந்த யம், 10 பூண்டு, 10 சின்னவெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு அதில் 2 தக்காளி, 2 பச்சை மிளகாய், மஞ்சள் தூள், அரைத்து வைத்திற்கும் இரண்டு பேஸ்டையும் சேர்த்து நன்றாக வதக்கவும் .
5. தேவையான அளவு கொதிக்க வைத்த தண்ணீரை அதில் சேர்க்கவும். புளியையும் கரைத்து அதில் சேர்க்கவும். தேவையான அளவு உப்பை சேர்க்கவும் .15 நிமிடம் வேக விடவும்.

6.எண்ணை பிரிந்து வந்ததும் மீன் துண்டுகளைபோடவும். மீன் வெந்ததும் அடுப்பை அணைத்து விட்டு கருவேபில்லையை கில்லி போட்டு,1 கரண்டி எண்ணெய்யை மேலாக ஊற்றவும். சுவையான மீன் குழம்பு தயார் .

No comments:

Post a Comment