SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Monday 15 June 2015


எண்ணிய செயலைச் செய்வதில் உறுதியாக இருங்கள்.

சந்தேகம் கூடாது.

ஒரு செயலைச் செய்வதற்கு முடிவு செய்த பின்னர், அதை சரியாக செய்ய முடியுமா முடியாதா என்று எண்ணி மனம் கலங்குவதை அறவே விட்டு விடுங்கள். இறுதிவரையும் செய்து முடிக்க முடியுமென்ற உறுதியான நம்பிக்கையுடன் மட்டுமே செய்ய முயலுங்கள்.

செயலைச் செய்யும் போது மிக்க ஊக்கத்தோடும், உறுதியான நம்பிக்கையோடுமே செய்யுங்கள். சோர்வுக்கு சிறிதும் இடம் தராதீர்கள். மனச் சோர்வு உங்கள் ஊக்கத்தை கெடுத்துவிடும். உங்கள் நம்பிக்கையையும் சிதைத்துவிடும்.


செயலைச் செய்யும் வழி முறைகள்.
ஒரு செயலைச் செய்வதற்கு நினைத்ததும், அதைப் பற்றிய சாதக பாதகங்களை முழுவதுமாக ஆராய வேண்டும்.ஒரு முடிவு எடுத்த பின், அதைச் செய்வதில் மனத் துணிவு கொள்ள வேண்டும்.

இப்படி துணிந்த பின், அதைச் செயல் படுத்துவதற்கான முயற்ச்சிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும்.”செய்யலாம்” என்ற முடிவுக்கு வந்து, செய்யவும் துணிந்த பின்னர், அதைச் செய்யாமல் வீணாக காலத்தை தாழ்த்திக்கொண்டு போக்க்கூடாது.


காலம் தாழ்த்தாதீர்கள்.

காலத்தை தள்ளிப்போடும் போது, மனதிற் கொண்ட செயலைப் பற்றிய துணிவு நாளுக்கு நாள் தேய்ந்து போகலாம்.அந்த நினைப்பும் அறவே மாறி விடலாம்.

இதற்காக, எல்லாவற்றையும் நினைத்த உடனே செய்துவிட வேண்டும் என்பதும் இல்லை.சில செயல்கள் காலம் கடந்து செய்ய வேண்டியதாகவும் இருக்கலாம்.சிலவற்றை உடனே செய்யவேண்டியதாகவும் இருக்கலாம்.இவை பற்றிய விவரங்களை ந்ன்றாக ஆராய்ந்து பார்த்துதான் அதைப் பற்றிய முடிவைச் செய்ய வேண்டும்.

காலம் கடந்தே செய்வதற்கு உரியவற்றை, கிளர்ந்தெழும் மன வேகத்தின் தூண்டுதலால் உடனே செய்ய முயல்வதும் கூடாது. உடனே செய்வதற்கு வேண்டியவற்றை தள்ளிப் போடவும் கூடாது. எதை எதை எப்போது செய்ய வேண்டும் என்று தெரிந்து செய்வதே எப்போதும் நல்லது.

முடிவதும் முடியாததும்.
முடியக் கூடிய செயல்களை எல்லாம், முடித்து விடுவதுதான் எப்போதுமே சிறப்பு ஆகும்.
எளிதாக செய்ய முடியாத செயல்களை எப்படி எப்படி செய்து முடிக்கலாம் என்று ஆராய்ந்து அதன் பின்னர் செய்வதே நலமாகும்.
‘பகை’ என்று ஒன்று ஏற்பட்டால், அதை அறவே இல்லாமல் செய்து விடுவதுதான் எப்போதுமே நல்லது.அரை குறையாக அதை விட்டு விட்டால் அது மீண்டும் மீண்டும் எழுந்து உங்களுக்குத் தொல்லை தந்து கொண்டே இருக்கும்.


முழுக்க அணையுங்கள்.
உங்கள் செயலுக்கு எதிர்ப்புகள் எழுந்துவிடும்போது, அவற்றை மீண்டும் தலை தூக்க முடியாத படியாக முழுவதும் அழித்து விடுவதற்கே முயலுங்கள்.

பொருள் வசதி.

ஒரு செயலைச் செய்வதென்று முடிவு செய்ததும்,அதற்குத் தேவையான பொருள் வசதிகளை தனியாக ஒதுக்கிக் கொள்வது மிகவும் அவசியம்..

“முதலில் தொடங்கி விடுவோம். இடையில் அவ்வப்போது தேவையான பணத்தை புரட்டிக் கொள்ளலாம்” என்பது சரியான மனப்போக்கு இல்லை. .இடையில் தேவையான பணம் கிடைக்காவிட்டால், வேலையும் நடுவில் நின்று போகும். அதுவரை செலவிட்ட பொருளும் நட்டமாகிப் போகும். இதை கவனத்தில் வைத்துக்கொள்வது மிகவும் நல்லது.

தேவையான கருவிகள்.
பொருள் வகையில் சரியான ஏற்பாட்டை செய்த பிறகு கவனத்தில் கொள்ளவேண்டியது, அந்த செயலைச் செய்வதற்கான கருவிகளை எல்லாம் முறையாக தேடிக்கொள்வது ஆகும்.

இந்த கருவிகள் எல்லாம் எண்ணிய வேலையை முடிப்பதற்கு உதவும் வகையில் சிறப்பாக அமைந்திருக்கவும் வேண்டும்..ஒரு சிறிய கருவி சரியாக அமையாதபோதும் அந்த வேலையை சரியாக செய்ய முடியாது.

கருவிகளைப் போலவே, அந்த வேலையைச் செய்து முடிப்பதற்கு தேவையான, சரியான உதவி ஆட்களைத் தேர்ந்து துணையாக்கிக் கொள்வதும் இன்றியமையாத்து ஆகும்.


வாய்ப்பான காலமும் இடமும்.

கருவிகளுக்கு அடுத்த படியாக கருத வேண்டியது வாய்ப்பான காலமும், இடமும் ஆகும்.

தொழில் முறை நுட்பங்கள்.

செய்யக் கருதிய தொழிலின், அல்லது செயலின் செயல் முறை நுட்பங்களையும் நன்றாக அறிந்திருக்க வேண்டும்.
இந்த வகையான ஐந்து அடிப்படைத்தேவைகளையும் முறையாக அமைத்துக்கொண்டால் தான், செய்ய நினைத்த செயலைச் சிறப்பாக செய்யலாம்.

No comments:

Post a Comment