SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Monday 15 June 2015


வாழ்க்கையில் வளம் பெறுவது எப்படி?


அழகு

அழகை நாம் எங்கெங்கோ தேடி அலைய வேண்டியதில்லை. நம் ஒவ்வொருவரின் உள்ளேயும் அழகு இருக்கிறது.அதுவே உண்மையான அழகு.கவர்ச்சியான உடல் தோற்றம் கொண்டிருந்தாலும், ஒருவர் மனதில் மறைந்திருக்கும் ஆச்சரியம், பொறாமை, எரிச்சல், வெறுப்பு, அகந்தை போன்ற வேண்டாத குண இயல்புகள் அவரை பிறர் பார்வைக்கு அவ லட்சணமாகத்தான் காட்டும்.

வெளி அழகு முக்கியம்தான். முடிந்தவரை நம் புறத் தோற்றத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம் தான்.ஆனால், ஆண்டொன்று போனால் வயதொன்று போகும், என்ற கசப்பான உண்மையை மறந்துவிட முடியாது.அதனால் வயதான காலத்திலும் வற்றாமல் இருக்கக்கூடிய அகத்தழகே , புறத்தழகை விட மேலானது என்பதை இளம் வயதினர் உணர்வது நல்லது.

அகத்தழகை வரவழைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்? உங்கள் மகிழ்ச்சியையும், அதிர்ஷ்ட்த்தையும் பிறருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மற்றவர்களை நகலெடுக்க நினைக்காமல், உங்கள் சுபாவப்படி இருங்கள். உங்கள் தவறுகளை மட்டுமின்றி, பிறர் இழைத்த தவறுகளையும் மன்னிக்கத் தயாராக இருங்கள்.

மோசமான குணங்களையும், பழக்கங்களையும் மெல்ல மெல்ல மாற்றி, தன்னைத் தானே உயர்த்திக்கொள்ள பாடு படுங்கள். மற்றவர்களிடம் அத்தகைய முயற்சிக்கும் ஒத்துழையுங்கள். உங்கள் சுய மரியாதையையும் விட்டுக்கொடுக்காமல், அதே போல மற்றவர்களின் சுயமரியாதைக்கும் பங்கம் நேராமல் நடக்க கற்றுக்கொள்ளுங்கள்.

இந்த குணங்கள் வந்துவிட்டால், உங்கள் உள்ளுணர்வுகள் தாமே அழகாகி விடும்.அப்புறம் உங்கள் புறத் தோற்றம் தானாகவே அழகாக மாறி விடும். உள்ளத் தோற்றம் அழகானால், உடல் தோற்றமும் அழகாகும்.

வாடாமல், வெகு காலம் நீடித்திருக்கக்கூடிய இந்த உள் அழகை, யாரும், எந்த வயதிலும் பெறுவது சாத்தியமே.


முக மூடி எதற்கு?

இயல்பாக இருங்கள; மற்றவர்களை நீங்கள் விரும்புவதையும், அவர்களுக்கு நீங்கள் உதவ தயாரக இருப்பதையும் வெளிப்படுத்துங்கள், புலப்படுத்துங்கள். போலியான முகத் தோற்றத்தை கழற்றி எரியுங்கள்.


பொறாமைப் பேயை விரட்டுங்கள்.

மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்படுவது, அவர்களை நகலெடுப்பதை விட கேவலமானது.அந்த பொறாமை குணம் உங்களிடம் வந்துவிட்டால், உங்களை நீங்களே இழந்த மாதிரிதான். அப்புறம் நீங்கள் எங்கே உயர முடியும்? கோபமும், நியாய உணர்வும், விவேகமும் உங்களை விட்டுப் போய் விடும்.

மற்றவரின் அதிர்ஷ்டத்தைக் கண்டு ஆத்திரத்திலும், பொறாமையிலும் வெந்து, அழிவு நடவடிக்கையில் கூட இறங்கத் தயாராகி விடுவீர்கள்.ஆனால், முடிவு உங்களைத்தான் பாதிக்கும். இரத்தக் கொதிப்பும், பக்கவாதமும் தாக்கிய மனிதனின் நிலைக்குத்தான் உங்கள் மனம் தள்ளப்படும்.

உங்களை நீங்களே எடை போட்டுக்கொள்ளுங்கள். உங்களின் பொறாமைக் குணம் உங்களை சாப்பிட்த் தொடங்கி விட்ட்து என்று தெரிந்தால், உங்களை நீங்களே ஆக்க பூர்வமாக மாற்ற அது உதவியாக இருக்கும்.

முதல் படியாக உங்கள் மீதே உங்களுக்கு கருணை பிறக்க வேண்டும். அறிவுடைமைக்கும், அடக்கத்திற்கும் அது உங்களை அழைத்துச் செல்லும். தன் குற்றங்களை மன்னித்து, அவற்றை எதிர்காலத்தில் தவிர்த்து ஏற்றம் அடையுங்கள்.

No comments:

Post a Comment