SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Friday, 9 October 2015

கோழி 65 (Chicken 65)


தேவையான பொருட்கள்:

1. கோழி (Chicken) - 1 lbs  (சிறு துண்டுகளாக நறுக்கியது)
2. மைதா மாவு (All purpose flour) - 4 tbsp
3. சோள மாவு (Corn flour)  - 2 tbsp
4. முட்டை (Egg) - 1
5. மிளகாய் தூள் (Chilli powder) - 1 tbsp
6. இஞ்சி பூண்டு விழுது (Ginger garlic paste) - 1 tbsp
7. மிளகு தூள் (Pepper powder)  - 1/2 tbsp
8. உப்பு (Salt) - தேவையான அளவு
9. Red food colour - 1 pinch
10. எண்ணெய்  (Oil) - 1 cup
11. கருவேப்பில்லை - சிறிதளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த கோழியை எடுத்துகொள்ளவும். பின் அதனுடன் மைதா மாவு, சோள மாவு, முட்டை, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, மிளகு தூள், red food colour மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

பின் ஒரு 30 நிமிடம் ஊறவைக்கவும்.

பிறகு  கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன் கருவேப்பில்லை மற்றும்
கோழி துண்டுகளை சேர்த்து பொரிக்கவும்.

சுவையான chicken 65 ரெடி !!!

கோழி சுக்கா (Chicken Sukka)


தேவையான பொருட்கள்:

1. கோழி (Chicken) - 1 lbs .
2. வெங்காயம் (Onion) - 4 (Thinly sliced)
3. தக்காளி (Tomato)  - 3 (Finely chopped)
4. மிளகாய் தூள் (Chilli powder) - 3 tbsp 
5. கொத்தமல்லி தூள் (Corionder powder) - 2 tbsp 
6. மிளகு தூள் (Pepper powder) - 1 tbsp 
7. கரம் மசாலா (Garam masala) - 1 tbsp 
8. மஞ்சள் தூள் (Turmeric powder) - 1 tbsp 
9. உப்பு (Salt) - தேவையான அளவு 
10. எண்ணெய் (Oil) - 5 tbsp 

செய்முறை :

முதலில் கடாயில் எண்ணெய்யை ஊற்றி, காய்ந்தவுடன் வெங்காயத்தை போடவும். வெங்காயம் நன்கு வதங்கியவுடன், தக்காளியை சேர்க்கவும்.

பிறகு  கோழியை சேர்க்கவும். பின் மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், மிளகு தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

கோழி நன்கு வதங்கிய உடன் இரக்கவும் .

சுவையான கோழி சுக்கா தயார் !!!

No comments:

Post a Comment