SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Friday 9 October 2015

Mushroom Masala


தேவையான பொருட்கள்:

1. காளான் (Mushroom) - 250 gm (slit into small pieces)
2. வெங்காயம் (Onion) - 1 (finely chopped)
3. தக்காளி சாறு (Tomato puree) - 1/2 cup 
4. பச்சை மிளகாய் (Green chillies)  - 4
5. பூண்டு (Garlic) - 4 (finely  chopped )
6. கரம் மசாலா தூள் (Garam masala powder) - 1 tbsp 
7. கொத்தமல்லி தூள் (Coriander powder) - 2 tbsp 
8. மிளகாய் தூள் (Chilli powder) - 1 tbsp 
9. மஞ்சள் தூள் (Turmeric powder) - 1/2 tbsp 
10. கடுகு (Mustard ) - 1 tbsp 
11. சீரகம் (Cumin seed)  - 1 tbsp 
12. எண்ணெய் (Oil) - 4 tbsp 
13. வெண்ணெய் (Butter)  - 4 tbsp 
14. மிளகு தூள் (Pepper powder) - 2 tbsp 
15. உப்பு (Salt)  - தேவையான அளவு.
16. இஞ்சி பூண்டு விழுது (Ginger garlic paste)  - 1 tbsp 

செய்முறை :

முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன்  கடுகு, சீரகம் சேர்க்கவும். பின் வெங்காயம், 2 பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வெங்காயம் நன்கு வதங்கும் வரை வதக்கவும். பிறகு  தக்காளி சாறு, கரம் மசாலா தூள், கொத்தமல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து ஒரு 5 நிமிடம் வதக்கவும்.

பின் காளானையும் சேர்த்து, காளான் நன்கு வேகும் வரை வதக்கவும்.(தேவைபட்டால் சிறது தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்).

பின் ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து, அதில் பூண்டு, 2 பச்சை மிளகாய், சேர்த்து வதக்கவும். பிறகு சிறிது உப்பு மற்றும் மிளகுதூள் சேர்த்து கிளறவும். பின் இவற்றை வேகவைத்த காளான் மசாலாவில் ஊற்றி  கிளறி இரக்கவும்.

சுவையான Mushroom masala ரெடி !!!

No comments:

Post a Comment