SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Friday, 9 October 2015

காய்கறி குருமா (Vegetable kuruma)


தேவையான பொருட்கள் :

1. தக்காளி (tomato) - 1
2. பெரிய வெங்காயம் (chopped onion) -1
3. வெள்ளைபூண்டு (garlic) - 1 பல் 
4. எண்ணெய் (oil) - 3 tbsp
5. கருவேப்பில்லை சிறிதளவு (curry leaves)
6. கொத்தமல்லி  சிறிதளவு (coriander/cilantro leaves)
7. பச்சை மிளகாய்  (green chilli) - 2 
8. தேவையான அளவு  உப்பு  (required salt)
9. தேங்காய் (coconut ) - 1/2 cup 
10. பீன்ஸ் (beans) - 4
11. காரட் (carrot) - 1
12. பச்சை பட்டாணி (green peas) -1/4 cup 
13. உருளைக்கிழங்கு (potato) - 2
14. சோம்பு/பெருஞ்சீரகம் (fennel seeds) - சிறிதளவு
15. பொட்டுகடலை (roasted chana) - சிறிதளவு

செய்முறை :

முதலில் தேங்காய், பொட்டுகடலை, சோம்பு, வெள்ளைபூண்டு,பச்சைமிளகாய் இவைகளை நன்கு அரைத்து கொள்ளவும்.

கடாயை (pan ) அடுப்பில்  காயவைத்து, 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன்  கருவேப்பில்லை, நன்குநறுக்கப்பட்ட - வெங்காயம், தக்காளி, பீன்ஸ்,காரட்,பச்சைபட்டாணி, மற்றும் உருளைக்கிழங்குசேர்த்து  5 நிமிடம் வதக்கவும்.

வதக்கிய அனைத்தையும் குக்கரில் போட்டு சிறிதளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 3 விசிலுக்கு  வேகவைக்கவும்.  காய்கறிகள் வெந்தபின் அரைத்த விழுதையும் சேர்த்து நன்கு 15 நிமிடம் கொதிக்கவிடவும்.

கொத்தமல்லி இலைகலால் அழகுபடுத்தலாம். சுவையானகாய்கறி குருமா ரெடி...  

காய்கறி குருமாவை   -  சப்பாத்தி ,தோசை,இட்லி இவைகளுடன் சாப்பிடலாம்!!! 

No comments:

Post a Comment