SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Friday, 9 October 2015

கோழிக்குழம்பு (Chicken Gravy)



தேவையான பொருட்கள் :

1. சிக்கன் (Skinless Chicken thighs ) - 1 lbs 
2. பெரிய  வெங்காயம் (Chopped onion) - 1
3. தக்காளி (Chopped tomato) - 1
4. சோம்பு/பெருஞ்சீரகம் (Fennel Seeds) - 2 tbsp 
5. இஞ்சி - பூண்டு விழுது  (Ginger - Garlic paste) - 2 tbsp  
6. எண்ணெய் (oil) - 4 tbsp 
7.  மிளகாய்  தூள் (Chilli powder) - 3 tbsp
8. சீரகம் -2 tbsp
9. உப்பு தேவைக்கேற்ப (Salt required) 


செய்முறை :   

முதலில்  சோம்பு, சீரகம்இஞ்சி - பூண்டு விழுது, சிறிது வெங்காயம்,மிளகாய் தூள் இவை அனைத்தையும் நன்கு அரைத்து கொள்ளவும்.

கடாயில் 3 tbsp எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்தவுடன், மீதமிருக்கும் வெங்காயம், தக்காளியை போட்டு வதக்கவும். இதில் அரைத்தவிழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். இதனுடன் நன்கு சுத்தபடுத்திய சிக்கன் துண்டுகளையும் சேர்த்து வதக்வும். 

பிறகு அனைத்தையும் குக்கரில் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் 3 விசிலுக்கு வைக்கவும்.

சுவையான கோழிக்குழம்பு ரெடி!!!

No comments:

Post a Comment