SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Friday, 9 October 2015

குழிபனியாரம் (Sweet and Salt Paniyaram)



தேவையான பொருட்கள் :

1. புழுங்கல் பொன்னி அரிசி (Ponni rice) - 1 cup
2. பச்சரிசி (Long grain rice) - 1 cup
3. வெந்தயம் (Fenugreek) -2 tbsp
4. உப்பு (Salt) - தேவையான அளவு
5. கடுகு (Mustard) - 1 tbsp
6. உளுந்தம் பருப்பு (Uradu dal) - 1/2 cup
7. பச்சை மிளகாய் (Green chilli ) - 1 Finely chopped
8. வெல்லம்  (Jaggery) - 3/4 cup (கெட்டியான பாகு காய்ச்சி கொள்ளவும் )
9. ஏலக்காய் (Cardamom) - 2 Finely powdered
10. கருவேப்பில்லை (Curry leaves) - சிறிதளவு (Finely chopped)
11. கொத்தமல்லி (Coriander leaves) - சிறிதளவு (Finely chopped)
12. தேங்காய் (Coconut) - 1/4 cup (Finely grated)
13. எண்ணெய் (Oil) -1/4 cup

செய்முறை:

முதலில் புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுந்தம் பருப்பு, வெந்தயம் அனைத்தையும் 3 மணி நேரம் நன்கு ஊறவைக்கவும். பின்பு மிக்ஸ்யில் ஊறவைத்த கலவை, உப்பு, தண்ணீர் சேர்த்து  நன்கு மிருதுவாக அரைத்துகொள்ளவும்.

இனிப்பு பனியாரத்துக்கு  அரைத்த மாவை சிறிது எடுத்துக்கொண்டு அதில் வெல்ல பாகு, ஏலக்காய், தேங்காய் அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

பிறகு குழிபனியாரம் பாத்திரத்தில் உள்ள குழியில் ஊற்றவும். நன்கு வெந்தவுடன் எடுக்கவும்.

கார பனியாரத்துக்கு அரைத்த மாவை சிறிது எடுத்துக்கொண்டு,
பின்பு கடாயில் 2 tbsp எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்தவுடன், கடுகு, உளுந்தம்பருப்பு, கருவேப்பில்லை, பச்சைமிளகாய், கொத்தமல்லி  போட்டு 3 நிமிடம் வதக்கவும். வதக்கிய கலவையை மாவுடன் சேர்த்து கலக்கவும்.

பிறகு குழிபனியாரம் பாத்திரத்தில் உள்ள குழியில் ஊற்றவும்.நன்கு வெந்தவுடன் எடுக்கவும்.

சுவையான குழிபனியாரம் ரெடி !!! 

No comments:

Post a Comment