சிக்கன் பிரியாணி (Chicken Biryani)
பரிமாறலளவு (serving) - 3 to 4 guest
தேவையான பொருட்கள் :
1. சிக்கன் (Skinless Chicken thighs ) - 1 lbs
2. பெரிய வெங்காயம் (Chopped onion) - 1
3. தக்காளி (Chopped tomato) - 1
4. பாசுமதி அரிசி (Basmati rice) - 1 1/2 cup
5. பச்சை மிளகாய் தேவைக்கேற்ப (Required green chilli) - 2
6. சோம்பு/பெருஞ்சீரகம் (Fennel Seeds) - 2 tbsp
7. இஞ்சி - பூண்டு விழுது (Ginger - Garlic paste) - 2 tbsp
8. லவங்கப் பட்டை (Cinnamon stick ) - 4
9. ஏலக்காய் (Cardamom) - 2
10. கிராம்பு (Cloves) - 3
11. பிரயாணி இலை (Bay leaves) - 3
12. நெய் (Ghee) - 3 tbsp
13. எண்ணெய் (oil) - 3 tbsp
14. மஞ்சள் தூள் (Turmeric powder) - சிறிதளவு
15. மிளகாய் தூள் (Chilli powder) - 1/2 tbsp
16. புதினா (Mint leaves) - 5 tbsp
17. எலுமிச்சை சாறு (Lemon juice) - 2 tbsp
18. உப்பு தேவைக்கேற்ப (Salt required)
செய்முறை :
முதலில் சோம்பு, பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது இவை மூன்றையும் நன்கு அரைத்து கொள்ளவும்.
கடாயில் 3 tbsp எண்ணெய் மற்றும் நெய்யை ஊற்றி நன்கு காய்ந்தவுடன், கிராம்பு-ஏலக்காய்-லவங்கப் பட்டை-பிரயாணி இலை ஆகியவற்றை போடவும்.
பிறகு வெங்காயம், 2 tbsp புதினா, தக்காளியை போட்டு வதக்கவும். இதில் அரைத்த விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்குவதக்கவும். இதனுடன் நன்கு சுத்தபடுத்திய சிக்கன் துண்டுகளையும் சேர்த்து வதக்கவும்.
குக்கரில் பாசுமதி அரிசியை போட்டு 3 கப் தண்ணீர் ஊற்றி, வதக்கிய கலவையை இதனுடன் சேர்க்கவும். பிறகு தேவையான அளவு உப்பு,மிளகாய் தூள், மஞ்சள் தூளையும் கலக்கவும்.
அதன்மேல் 3tbsp புதினா, 2 tbsp எலுமிச்சை சாறையும் சேர்த்து ஒரு விசிலுக்கு குக்கரில் வைக்கவும்.
ஒரு விசில் வந்த பின், அடுப்பை குறைக்கவும் (keep it in sim), பின் 7 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.
பிறகு கொத்தமல்லி அல்லது புதினா இழைகளால் அலங்கரிக்கவும்.
சுவையான சிக்கன் பிரயாணி ரெடி !!
No comments:
Post a Comment