SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Friday, 9 October 2015

பெண்களுக்கான சில பியூட்டி டிப்ஸ்


பியூட்டி டிப்ஸ்:

பெண்கள் எப்பொழுதுமே தங்கள் முகத்தையும் தேகத்தையும் அழகாய் வைத்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் என்பது எல்லோரும் அறிந்ததே.





அவர்களுக்காக நான் சில உபயோகமுள்ள குறிப்புகளை கொடுக்க ஆசைப்படுகிறேன்.
பிம்பல்ஸ் மிக பெரிய எதிரி பெண்களுக்கு அதை மறைய வைக்க:
Ø  கடலை மாவு,மஞ்சள் மற்றும் கெட்டியானப் பால் கலந்து முகத்தில் பூசி பத்து நிமிடம் கழித்து கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.அத்துடன் இதை தொடர்ந்து செய்து வர முகப்பரு நீங்கும்.இது வறண்ட சருமம் உள்ள தேகத்திற்கு பெருமளவில் பொருந்தும


Ø  தக்காளி முகத்தில் தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்த பின்பு கழுவினால் முகத்தில் முகப்பரு வருவதை தடுக்கும்.இது ஆயில் ஸ்கின்னுக்கு பொருந்தும்.


Ø  கற்றாழை இலை பிழிந்து சாரக்கி அதை முகத்தில் தடவி சிறிது நேரம் விட்டு எடுக்கலாம்.ஆனால் சில பேருக்கு இது அலர்ஜியாகும் வாய்ப்பு உள்ளது.அதனால் உங்கள் கைகளில் சிறிது தடவி பார்த்து அலர்ஜி இல்லையெனில் தொடர்ந்து பயன்படுத்தலாம்.


Ø  ஒரிஜினல் சந்தனத்துடன் ரோஸ் வாட்டர் கலந்து பயன்படுத்தினால் முகப்பருக்கள் விரைவில் மறைய வாய்ப்புகள் அதிகம்.



பொதுவான டிப்ஸ் முகப்பருக்களை தடுக்க:
 
v  முகப்பருக்களை எப்போதும் கிள்ள கூடாது. கிள்ளினால் அதிகம் வர வாய்ப்புகள் உண்டு.

v  முகப்பருக்கள் வர முக்கிய காரணம் உடலில் உள்ள வெப்பம் தான்.  அதனால் நாம் நம் உடலில் வெப்பத்தை சேமித்து வைக்க இடம் கொடுக்க கூடாது.

v  ஒரு நாளைக்கு பெண்கள் 3 1/2 (அ) லிட்டர் அளவிற்கு தண்ணீர் குடிக்க வேண்டும். பொதுவாக ஆண்களின் உடலை விட பெண்களின் தேகமே அதிக வெப்பம் கொண்டது அதனால் தான் முகப்பருக்கள் அதிகமாக பெண்களுக்கு வருகின்றன.


v  இளநீர் பருக வேண்டும்.தண்ணீரும் அதிகம் குடிக்க வேண்டும்.

v  இளம் வயதினற்கே அதிகளவில் பருக்கள் தோன்றும். அதை ஆரம்ப கட்டத்திலேயே சரி செய்ய முயற்சி எடுக்க வேண்டும். இல்லையெனில் வடுக்களாக மாறும்.


வடுக்களை குணப்படுத்த சில வழிகள்:
& வெது வெதுப்பான நீரில் போரிக் பவுடரை சேர்த்து ஆவி பிடித்தால் முகத்தில் பருக்களின் வடுக்கள் குறையும். தொடர்ந்து செய்வதால் விரைவில் பலன் கிடைக்கும்.
& போரிக் பவுடர் அழகு சாதன பொருட்கள் விற்பனை கடைகளில் கிடைக்கும்.
& அறிவியல் ரீதியாக வடுக்களை நீக்க சிறந்த முறையாக கருதபடுவது  மைக்ரோநீடில்(MICRONEEDLE) முறையே.

மைக்ரோநீடில் முறையின் பயன்கள்:



  பருக்களை குறைக்கிறது

  கரும்புள்ளிகளை குறைக்கிறது

  அனைத்து வகையான சருமதிற்கும் இம்முறை சிறந்தது

  சரும சுருக்கத்தை குறைக்கிறது.

  முடி வளர்ச்சியை தூண்ட பயன்படுகிறது

No comments:

Post a Comment